SDPIயின் மாநிலத் தலைவர் இன்று (4.08.2011)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு நேற்று(3.8.2011) சட்டசபையில் தாக்கல்செய்துள்ள 2011-12 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உலமா ஓய்வூதியம் உயர்த்தப்பட்டிருப்பதும் விவசாயம் மற்றும் அணைகள் பராமரிப்பிற்கு அதிக கவனம்செலுத்தப்பட்டிருப்பதும், ஏழைக்குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் இலவசமாக வழங்குவது பற்றிய அறிவிப்பும், வரவேற்றகத்தக்கது, பாரட்டிற்குரியது. அதேசமயம் சமச்சீர் கல்வி பற்றி எதுவும் கூறாததும், விலை வாசியை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவிப்புகள் இல்லாததும், தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் வாக்குறுதியளித்தபடி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாததும், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பொது அறிவு உலகம் எப்போது இடஒதுக்கீட்டுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்கும். அது BC, MBC, SC, ST என அனைவருக்குமான இடஒதுக்கீட்டை நிச்சயம் வழங்க வேண்டும் என்பதே பொது அறிவு உலகத்தின் விருப்பம். இன்று மத்திய, மாநில அரசுகள் திட்ட மிட்டே OBC (BC மற்றும் MBC) பிரிவினர் களுக்கான வேலைவாய்ப்பில் துரோகமிழைத்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளுக்கும் மேலாக குறைவு பணியிடங்களை நிரப்பாமல் ஏமாற்றி வருகின்றன. "2004-ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஞஇஈ, நஈ, நப பிரிவினருக்கான 60,000 குறைவு பணியிடங்களை (Backlog Reserve Vacancies) நிரப்ப வேண்டுமென ஆணைப் பிறப்பித்தும் மேற்கண்ட பிரிவினரை பணியமர்த்தப் படவில்லை என பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட ஆணையில் (65067/2010) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி 74,008 குறைவு பணியிடங்கள் (26, 358 நேரிடை தேர்வு மூலமாகவும் 47, 650 பதவி உயர்வு மூலமாகவும்) நிரப்படவில்லை என மத்திய பொது பணியாளர் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இது மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் இடஒதுக்கீடு சமூக நீதிக்கு உதாரணம்.


