நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 மார்ச், 2012

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?"


"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.

உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.

நிரபராதிகள் மீது தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்! – நீதிபதி சச்சார்!


புதுடெல்லி: சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் அடிப்படையில்(யு.எ.பி.எ) நிரபராதிகளை கைது செய்து தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்தவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி ரஜீந்தர் சச்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.
National Convention on Muslim Youth Protection
‘முஸ்லிம் இளைஞர்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் டெல்லியில் ஆல் இந்தியா மில்லி கவுன்சில் ஏற்பாடுச்செய்த தேசிய கருத்தரங்கை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் சச்சார்.

எகிப்து அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர்!


கெய்ரோ: எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
Egypt's Muslim Brotherhood names Khairat al-Shater as presidential
கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது.

குஜராத் அரசின் செயல்பாடு படு மோசம்:சி.ஏ.ஜி அறிக்கை – எங்கே டைம் பத்திரிகை?


புதுடெல்லி: குஜராத் வளர்ச்சியின் நாயகனாக, அடுத்த பிரதமர் வேட்பாளராக வர்ணிக்கப்படும் மாபெரும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(சி.ஏ.ஜி) அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
for Rs 17,000 cr losses
“Modi means business but can he lead India” என்ற தலைப்பில் அட்டைப் படத்தில் பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த மோடியின் படத்தை போட்டு கட்டுரை வெளியிட்ட டைம் பத்திரிகை சி.ஏ.ஜியின் அறிக்கை கவனத்தில் படுமா? என்பது நடுநிலையாளர்களின் கேள்வியாகும்.

ஏப்ரல்-1 ஏமாந்த முஸ்லிம்கள்...ஏமாற்றியது யார்?




Attachments may be unavailable. Learn more
Nijangal April' 2010.pdf.pdfNijangal April' 2010.pdf.pdf
45K   View   Download   

தமிழக மக்களுக்கு ஒரு வருடத்திற்​கான மின் அதிர்ச்சி அறிவிப்பு!


சென்னை : மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணங்கள் அதிகரிப்பு - ஏப்ரல் முதல் அமுல் - அவதிக்குள்ளாகும் மக்கள்
எவ்வளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் தொடர் அராஜ போக்கை இம்மின்கட்டண உயர்வு உணர்த்துகிறது.

இந்திய போலீஸ் சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருவதில்லை- ஐ.நா மனித உரிமை கவுன்சில்!


புதுடெல்லி : வகுப்புவாத கலவரங்கள் நடைபெறும் வேளையில் இந்தியாவில் போலீஸ் சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருவதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூறியுள்ளது. இத்தகைய வகுப்புவாத வன்முறைகள் குறித்தும், கூட்டுப் படுகொலைகளை குறித்தும் ஆய்வு செய்ய இந்தியாவுக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் கண்காணிப்பாளர் கிறிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் நேற்று வெளியிட்டுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய போலீஸ் சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருவதில்லை
கேரளா, குஜராத், கஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சென்ற கிறிஸ்டோஃப் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்வு :அ.தி.மு.க அரசின் மற்றுமொரு மக்கள் விரோத நடவடிக்கை


 பத்திரிக்கை செய்தி 

மின்சாரக்  கட்டண உயர்வு :.தி.மு. அரசின் மற்றுமொரு மக்கள் விரோத நடவடிக்கை 

      .தி.மு. அரசு பொறுப்பேற்றது முதல் பஸ் கட்டணம் ,பால் விலை உயர்வு என ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பரில்  மின்சாரக்  கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் "கோரிக்கை " வைத்தது.

இதன் பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டங்களை சென்னை ,திருச்சி .மதுரை .கோவை ஆகிய நகரங்களில் நடத்தியது .அதில் கலந்து கொண்ட பொது மக்களும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களின் கடும்  எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

வெள்ளி, 30 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இடஒதுக்கீட்டு சம்பந்தமாக ஒடடப்பட்டுள்ள சுவரொட்டிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இடஒதுக்கீட்டு சம்பந்தமாக கடையநல்லுர் பகுதியில் ஒடடப்பட்டுள்ள சுவரொட்டிகள் சில காட்சிகள்......
மணிக்கூண்டு அருகில்

தேசத்தை மிரட்டும் மாவோயிஸ்டுகள்!


ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் 2010 முதல் இன்று வரை 498ற்கும் மேற்பட்டவர்கள் மாவோயிஸ்டு திவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலவையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 2010லிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 367 தீவிரவாத தாக்குதல்களில் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டிருக்கின்றனர், இதில் 498 நபர்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர் மாநில அவையில் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறும்போது கொல்லப்பட்டவர்களில் 215 காவல்துறையினர், 140 துணை இராணுவ படையினர், 26 சிறப்பு காவல்துறை அதிகாரிகள், 33 அப்பாவி பொதுமக்கள், 84 கொரில்லா படையினர்களும் அடங்குவர் என தெரிவித்தார்.

சேது கால்வாய்:சதிகாரர்களுக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுக்க கூடாது – தி.மு.க எம்.பிக்கள் கோரிக்கை!


புதுடெல்லி : தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சேதுகால்வாய் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சிலரின் சதிக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுத்தால் அது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராக அமைந்துவிடும் என்று தி.மு.க எம்.பிக்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Sethu samuthiram
சேதுக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில், “ராமர் பாலம்’ இருப்பதாக ஹிந்துக்கள்  நம்புவதால் அதற்கு மதிப்பளித்து அப்பகுதியை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க  வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

வியாழன், 29 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்



சென்னை:

1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.

2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. 

4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

7. சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

எது உங்கள் பாதை ?


ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!


புதுடெல்லி : அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.
ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் - ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.

மீண்டும் ஜெயாவின் ஹிந்துத்துவா பாசிசம்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமாம்!


சென்னை: ராமர் பாலத்தை(?) தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
jayalalitha
பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பா.ஜ.கவினரையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் கரசேவைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பேசியவர் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் ஜெயலலிதா. குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பை யார்

புதன், 28 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இடஒதுக்கீட்டு சம்பந்தமாக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இடஒதுக்கீடு சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு ஆரம்ப காலத்தில் எவ்வளவு இடஒதுக்கீடு வழங்கபட்டது ,பின்னாளில் அது முஸ்லிம்களிடம் இருந்து எவ்வாறு பறிக்க பட்டது என்பது சம்பந்தமாக ஒரு வரலாற்று பார்வைவுடன் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்கள்...................

எகிப்தின் அரசியல் மீண்டும் நெருக்கடியை நோக்கி செல்லுமோ?


கெய்ரோ : எகிப்தில் நெருக்கடி சூழலை உருவாக்கும் விதமாக இஸ்லாமியவாதிகளும், ராணுவமும் பகிரங்கமான மோதலுக்கு தயாராகி வருகின்றனர். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்ற இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவிப்பு புகைந்து கொண்டிருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
Egyptian army chief Field Marshall Hussein Tantawi (L) and Brotherhood General Guide Mohammed Badei have not been able to make an alliance between the two groups work
இஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பானமை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவையை அங்கீகரிக்க ராணுவ கவுன்சில் மறுத்தது மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவர்களை தங்களிடமிருந்து அகற்றிய ராணுவத்தின் செயல் ஆகியன இஃவானுல் முஸ்லிமீனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வக்ஃப் வாரிய வளர்ச்சிக்கான எந்த திட்டமும் பட்ஜட்டில் இல்லை - பாப்புலர் ஃப்ரண்ட்


பத்திரிக்கை செய்தி 

தமிழக அரசால் வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சில நல்ல
திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உ.ம்) சி.எஃப்.ஐ பல்புகள், கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் ஆகியவற்றின் வரி குறைப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கும், உள்நாட்டு தொழில் துறையினருக்கும், ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
உணவு தாணிய உற்பத்தி இலக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ள அரசு, விளை பொருட்களுக்கு உரிய ஆதாயமான விலையை விவசாயிகள் வளர்ச்சிக்காக எந்த வகையான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அந்நிய நாட்டு முதலீட்டிற்கு ரூபாய் 20,000 கோடியை இலக்காக நிர்ணயித்துள்ள அரசு, உள்நாட்டு தொழிற்துறையினரின் வளர்ச்சிக்காக எந்த ஒரு இலக்கையோ, அவர்களுக்கு ஊக்மளிக்ககூடிய திட்டத்தையோ அறிவிக்க வில்லை.

செவ்வாய், 27 மார்ச், 2012

ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வான்கள் போட்டி?

எகிப்தில் எதிர்வரும் மே 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், இஹ்வான்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் எவரையும் வேட்பாளராக நியமிப்பதில்லையென இயக்கத்தின் ஷூறா சபை தீர்மானித்திருந்தது.
Khairath-al-shater
பொருத்தமான ஒருவரை ஆதரிப்பது என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது. பலரையும் இதற்கென அணுகியபோது அவர்கள் முன்வராத நிலையே காணப்பட்டது என இஹ்வான்களது கட்சியான எப்.ஜே.பி.  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடாகா வக்ஃபோர்டில் ரூ.2.1 லட்சம் கோடி ஊழல்!


பெங்களூர் : கர்நாடகா வக்ஃபோர்டில் சொத்துக்களை கையாள்வதில் ரூ.2.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக சிறுபான்மை கமிஷன் சேர்மன் அன்வர் மணிப்பாடு தலைமையிலான விசாரண குழு கண்டுபிடித்துள்ளது.
PHOTO CAPTION
இக்குழுவின் அறிக்கை திங்கள் கிழமை காலை முதல்வர் டி.வி.சதானந்த கவுடாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

பாதுகாப்பற்ற சூழலில் வாழும் ஃபலஸ்தீன் மக்கள் – பைத்துல் முகத்தஸ் இமாம்!


கோழிக்கோடு : இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய அராஜகத்தால் ஃபலஸ்தீன் மக்கள் கடுமையான பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக பைத்துல் முகத்தஸின்(மஸ்ஜிதுல் அக்ஸா) இமாமும், நீண்டகாலம் ஃபலஸ்தீன் மார்க்க விவகார அமைச்சராக பணியாற்றியவருமான டாக்டர் ஷேக் யூசுஃப் ஜுமா ஸலாமா கூறினார்.
sheikh salama
கேரள மாநிலம் ஃபாரூக் கல்லூரியில் ரவ்ழத்துல் உலூம் அரபிக் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார் அவர்.
அப்பொழுது அவர் கூறியது:

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!


தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
'You can no longer dictate to the world,' Ahmadinejad tells US
ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக்கின் தலைமையில் அமெரிக்க குழுவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறது. ஆனால், நஜாத் உரை நிகழ்த்த எழுந்தவுடன் அரங்கை விட்டு வெளியேறிய இக்குழுவினர் பின்னர் அவர் உரையை பேசி முடித்ததும் அரங்கிள் நுழைந்தனர்.

திங்கள், 26 மார்ச், 2012

எகிப்து அதிபர் தேர்தலில் போட்டி – இஃவானுல் முஸ்லிமீன் முடிவில் மாற்றம்?


கெய்ரோ : எகிப்து அதிபர் தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என்ற முடிவில் இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Will Egypt's Muslim Brotherhood field a presidential candidate
இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த புதிய அமைச்சரவையை நியமிக்க ராணுவ அரசு மறுத்த சூழலில் முந்தைய தீர்மானத்தை இஃவானுல் முஸ்லிமீன் மறுபரிசீலனைச் செய்யும் முடிவில் உள்ளது.

ரூ.1500 கோடிக்கு புது வரிகள்! தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சென்னை : சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2012-13 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் 2012-13 
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தர சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
* இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க விரைவாகவும் திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்பு படை ஏற்படுத்தப்படும்.
* முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க விரைவில் சட்டம்.
* கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழாமற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் வைத்து நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய தலைவர் .எம்அப்துர்ரஹ்மான்கலந்துகொண்டார்.
ஆம்புலன்ஸ் சாவியை குமரி மாவட்ட தலைவரிடம் ஓப்படைக்கிறார் தேசிய தலைவர்