நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 28 ஜனவரி, 2012

தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் தகவல் அறிய வேண்டுகோள்






  1. எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு


அபுதாபி: தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.

ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.

கர்நாடகா முதல்வர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் வாலண்டியர் ஆனார்


பெங்களூர்:கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில் ஆதரவு தேடி முதல்வர் டி.வி.சதானந்தாகவுடா ஆர்.எஸ்.எஸ் முகாமில் சீருடை அணிந்து கலந்துக்கொண்டார்.

வடக்கு கர்நாடகாவில் ஹுப்ளியில் மூன்று தினங்களாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘ஹிந்து சக்தி சங்கம’த்தில் முதல்வர் சதானந்தாகவுடா மீண்டும் சங்கின் வாலண்டியராக கலந்து கொண்டார்.

காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸா செல்கிறார்


காஸ்ஸாசிட்டி:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் அரசியல் விவகார தலைவரான காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸாவிற்கு செல்லவிருக்கிறார். மிஷ்அல் தனது சுற்றுப் 

பயணத்தின்போது ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா ஆகியோரை சந்திப்பார் என காஸ்ஸா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஹ்மத் யூசுஃப் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சகோதர இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு" பல ஆண்டுகளாக இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவும் போராட்டங்களை

சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாம் – ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது


வதோதரா: அரசியல் சாசனத்தையும், நீதிபீடங்களையும் மீறிச் செயல்படுவதில் பிரசித்திப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு 4.5 உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறியது :பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்


போபால்:மத்தியபிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் போஜ்சாலா தொடர்பான பிரச்சனையை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மீண்டும் கிளப்புகின்றன. 

இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் நோக்கத்துடன் தடை உத்தரவை மீறி பல்கி யாத்ரா நடத்துவதற்கு தயாராகி வருகிறது ஒரு ஹிந்துத்துவா அமைப்பு. இன்று நடைபெறும் பசந்த் பஞ்சமியையொட்டி இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

இந்திய நீதிமன்றங்கள் பாசிச மயமாகி வருகின்றன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு


ஜபல்பூர்(ம.பி):இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை மறந்துவிட்டு தீர்ப்பு கூறுவது நீதிமன்றங்களின் வாடிக்கையாக மாறிவிட்டது.
பகவத் கீதை மத நூல் அல்ல; அது வாழும் நெறி எனவும் சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.

இரங்கல் செய்தி

இப்போதைய கேரள ஆளுநரும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும், முன்னால் சவுதி அரேபியாவின் இந்திய தூதராகவும், புதுவையில் மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணியாற்றிய மதிப்பிற்குரிய எம்.ஓ.ஹைச் உமர் பாரூக் மரைக்காயர் அவர்கள் உடல் நல குறைவினால் மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கு சாந்தி நிலவ வேண்டுகிறோம்.

மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில்(snoop) இந்தியாவுக்கு 3-வது இடம்


புதுடெல்லி:கேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகள் போலீசாரால் ரகசியமாக கண்காணிக்கப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் 

உலகிலேயே தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணிப்பதில் இந்தியா 3-வது இடத்தை வகிப்பதாக பிரபல இணையதள சேவை நிறுவனமான கூகிள் அறிக்கை கூறுகிறது.

வியாழன், 26 ஜனவரி, 2012

எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னயில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை: இந்திய தேசத்தின் 63வது குடியரசு தினக்கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக 18ற்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் பங்கெடுத்தனர்.
எஸ்.டி.பி.ஐ சார்பாக ஒட்டப்பட்ட குடியரசு தின வாழ்த்து சுவரொட்டி

சிறுபான்மை கமிஷனுடன் மல்லுக்கட்டும் பீகார் அரசு


புதுடெல்லி : பீகார் மாநிலம் போர்ப்ஸ் கஞ்சில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷனுடன் பீகார் அரசு அறிக்கை போரில் ஈடுபட்டுள்ளது.

போர்ப்ஸ் கஞ்ச் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷன் தயாரித்த அறிக்கை பீகார் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சிறுபான்மை கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மத்திய சிறுபான்மை

ஈரானின் அணுசக்தியால் அபாயமில்லை – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர்


வாஷிங்டன் : ஈரானின் அணுசக்தி பரப்புரைச் செய்வது போல் கவலை அளிப்பது அல்ல என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தெரிவித்துள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கார்டன் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது:அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என உறுதியாக கூறிய மத உணர்வு மிக்க ஈரான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அதனை

புதன், 25 ஜனவரி, 2012

சீர்திருத்தங்களின் பெயரால் ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்துவிடாதீர்கள் – குடியரசு தலைவரின் குடியரசு தினச் செய்தி


புதுடெல்லி : சீர்திருத்தங்களின் பெயரால் ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்துவிடக் கூடாது என குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி தேச மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.

இஸ்ரேல் தூதரகத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது


பெங்களூர் : கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் மத்திய கிழக்கில் பயங்கரவாத நாடாக கருதப்படும் இஸ்ரேலின் தூதரகத்தை திறப்பதற்கு அம்மாநில முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, சுன்னி ஜமாஅத் உள்பட 30 பிரபல முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான கர்நாடாகா முஸ்லிம் முத்தஹிதா மஹாஸ் இஸ்ரேல் தூதரகத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்திற்கு தலைமை வகிக்கிறது.

சக்தி பெறுவதற்காக வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!


மலப்புரம்(கேரளா):வாக்கு வங்கி அரசியலை புறக்கணித்துவிட்டு சக்தி பெறுவதற்காக வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி21,22 தேதிகளில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மலபார் ஹவுஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான சமூகம் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குஜராத் என்கவுண்டர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு


டெல்லி :  குஜராத் மாநிலத்தில் 2003-06 கால அளவில் நடந்தபல்வேறு போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா நடத்துவார் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




திங்கள், 23 ஜனவரி, 2012

எகிப்து பாராளுமன்றம் கூடியது


கெய்ரோ : இஸ்லாமிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள தேர்தலை தொடர்ந்து எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்கள் அவை நேற்று முதன் முறையாக கூடியது.

ஹுஸ்னி முபாரக் பதவியில் இருந்து வெளியேற காரணமான ஜனநாயக போராட்டத்திற்கு பிறகு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பாராளுமன்றம் புரட்சியில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை புரிந்துவிட்டு நடவடிக்கைகளை துவக்கியது. உறுப்பினர்கள் அனைவரும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை


ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோத ரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர் வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும் ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும் குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)

எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

உள்ளத்தை தூய்மை படுத்த தஸ்கியா வகுப்புகள் நடைபெற்றது

கடையநல்லூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் தஸ்கியா எனும் (உளத்தூய்மை) வகுப்பு நடத்தப்பட்டடது.  அந்த வகையில் நெல்லை மேற்கு மாவட்ட சர்பாக கடையநல்லூர் EB அருகிலுள்ள கூபா மஸ்ஜிதில் வைத்து 21 ஆம் தேதி  தஸ்கியா வகுப்பு நடைபெற்றது இதில் திரளாக மக்கள் கலந்துகொண்டனர்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

காலத்திற்கு ஏற்ற சிறுகதை


கூட்டு போர் ஒத்திகை: அமெரிக்க டாங்குகள் இந்தியாவிற்கு வருகின்றன


புதுடெல்லி : கூட்டு போர் ஒத்திகைக்காக அமெரிக்க போர் டாங்குகள் முதன் முதலாக இந்திய மண்ணில் வருகிறது.
‘யுத் அப்யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகை இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ள பல்வேறு ராணுவ போர் ஒத்திகைகளின் துவக்கம்தான் ‘யுத் அப்யாஸ்’.

ஒபாமாவை கொலைச் செய்ய மொஸாதிற்கு உத்தரவிடவேண்டும் – யூத பத்திரிகை


வாஷிங்டன் : ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு ஒபாமாவை கொலைச் செய்ய மொஸாதிற்கு உத்தரவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் யூத பத்திரிகை ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து பிரசுரமாகும் அட்லாண்டிக் ஜூயிஸ் டைம்ஸின் ஜனவரி 13-ஆம் தேதி எடிட்டோரியல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிலைப்பாட்டை மேற்கொள்ளும் ஒபாமாவை கொலைச்செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்



என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களாஆம் இது பெரிய உண்மை.


பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு
நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர்
செய்யபட்ட ஒரு ஆர்டிக்கள். பரோட்டாவது நமது பாரம்பரய உண்வு அல்லமற்றும்

முஸ்லிம் இளைஞர் கைது:மஹராஷ்ட்ரா அரசுக்கு சிறுபான்மை கமிஷன் கடிதம் 23


புதுடெல்லி/மும்பை : டெல்லியில் வசித்துவந்த முஸ்லிம் இளைஞரை கைது செய்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய சிறுபான்மை கமிஷன் மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு தகவல் அளிக்கும் நகீ அஹ்மத் என்பவரை போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கினார் என குற்றம்சாட்டி மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

குன்டனாமோ சிறை மூடல் குறித்த எதிர்பார்ப்பு 10 ஆண்டுகளாய் தொடர்கிறது


கியூபாவிலுள்ள குன்டனாமோ விரிகுடா கடற்படை தளத்தில்  அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குன்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பான சிறையும், விசாரணை வசதியும் உள்ளது.
                                                                                         குன்டனாமோ சிறை


ஆப்கானிஸ்தான் போர்க்கைதிகளையும், பிறகு ஈராக் போர்க்கைதிகளையும் சிறை வைப்பதற்காக புஷ் நிர்வாகத்தினால் ஜனவரி 11, 2002 இல் இந்த முகாம் நிறுவப்பட்டது.