நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 26 நவம்பர், 2011

நீதியின் மறுபக்கம் - சமூக நீதி மாநாட்டிற்கான கவிதை




சமூக நீதியைப் பெற‌
துடித்தெழும் எம் மக்களின்
குரல்வலையை நெறிக்குது
ஒரு குள்ள நரிக் கூட்டம்....

செவ்வாய், 22 நவம்பர், 2011

SDPI சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் முகாம்


SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி உரை ஆற்றிய பொழுது
 
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் முகாம் இன்று (17-11-2011) காலை 11 மணிக்கு மதுரை C.M.N மன்றத்தில் SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.SDPI மாநில பொருளாளர் அம்சத் பாஷா முன்னிலை வகித்தார்,மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீத் வரவேற்றார் .SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி அவர்கள் தேர்தல் நடை முறைகள் பற்றியும்,அதில் நடந்த முறைகேடுகள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

திங்கள், 21 நவம்பர், 2011

தம்மாமில் நடைபெற்ற சமூக ஆர்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

நீதியின் மீது தேசத்தை கட்டமைப்போம்' என்கிற முழக்கத்தோடு நவம்பர் 26, 27 நாட்களில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருவது போல, இந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் சிறப்பாக நடந்து வருகிறது. 
 

விலைவாசி உயர்வை கண்டித்து மணிக்கூண்டில் அருகில் மபெரும் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை,
பேருந்து கட்டண உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு
பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தி
மபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம்
தலைமை உரை –


K.திவான் ஒலி அவர்கள்
SDPI நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்.



கண்டன உரை –


ஜாபர் அலி உஸ்மானி அவர்கள்
PFI நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்.


நாள் – 21.11.2011 மாலை- 5மணிக்கு

இடம் – மணிக்கூண்டு அருகில் – கடையநல்லுர்



நெல்லை மேற்கு மாவட்டம்.


இனி நான்கு தினங்கள்: சமூக நீதி மாநாட்டிற்கு வரலாற்று சிறப்பு மிக்க தலைநகரம் தயாராகிறது


sjc
புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு இனி நான்கு தினங்களே மீதமுள்ள நிலையில், மாநாட்டை வரவேற்க வரலாற்று சிறப்பு மிக்க இந்திய தலைநகரமான புதுடெல்லி தயாராகி வருகிறது.
வருகிற 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாநாடு நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கொடியை ஏற்றிவைத்து

சமூக நீதி மாநாட்டிற்காக தயாராக தலை நகரம்


சூரத்கல் :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலம் சார்பாக சூரத்கள் கிருஷ்ணபுராவில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரமாக ஞாயிற்றுகிழமை 20.11.2011 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

இன்ஃபர்மேஷன் அன்டு எம்பவரிங் சென்டர் அமைப்பின் தலைவர் அன்வர் சாதாத் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் உரையாற்றும்போது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னால் நமது நாட்டை

எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை :  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ-ன் சார்பாக நாளை 22.11.2011 அன்று சென்னை சைதாப்பேட்ட பனகல் மாளிகை அருகே மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட செயலாளர் முஹம்மது சாலிஹ் தெரிவித்துள்ளார்.



கல்லறையை திறந்த வழக்கில் டீஸ்டா ஸெடல்வாட் முக்கிய குற்றவாளி – மோடி அரசு

imagesCAH2LXWF
புதுடெல்லி : 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் கல்லறையை திறந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.
வழக்கில் விசாரணையை சந்தித்துவரும் டீஸ்டாவும், அவரது உதவியாளரான ரஈஸ் கான் பத்தான் ஆகியோர் பந்தவாடாவுக்கு அருகே அனுமதியில்லாமல்

பல்வேறு நோய்களை விரட்டும் தாய்ப்பால்

தாய்ப்பால்
லண்டன் : குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை நிபுணர்கள் இப்போது தெரிவிக்கிறார்கள்.
தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்களுக்கு, மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை விரட்டும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு

கட்கரி-மோடி மோதல்: பா.ஜ.கவில் மீண்டும் கோஷ்டி பூசல் களைகட்டுகிறது

imagesCANQS465
புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கவே குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அம்மாநிலத்திற்கு பிரச்சாரம் செய்ய வரவேண்டாம் என முன்னரே கோரிக்கை விடுத்துள்ளார் பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி.

கஷ்மீர்:ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க மாநில அரசு பரிசீலனை


ban
ஸ்ரீநகர் : ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு தடைவிதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்த வருகிறது. இணையதளத்தின் உள்ளடக்கம் கஷ்மீரில் மீண்டும் பிரச்சனையை உருவாக்கும் எனவும், ஆதலால் ஃபேஸ்புக்கை தடைச் செய்யவேண்டும் என போலீஸ் மாநில அரசிற்கு பரிந்துரைச் செய்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மும்பை தாக்குதல்:3-ஆம் ஆண்டு நிறைவு – ஹெட்லி இன்னமும் விசாரிக்கப்படவில்லை

mumbai-attack4_630
மும்பை:மும்பை தாக்குதல் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இச்சம்பவத்திற்கு முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் டேவிட் கோல்மான் ஹெட்லியை விசாரணை செய்ய மும்பை போலீசாரால் இயலவில்லை.

SDPI சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் முகாம்



SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி உரை ஆற்றிய பொழுது
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் முகாம் இன்று (17-11-2011) காலை 11 மணிக்கு மதுரை C.M.N மன்றத்தில் SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.SDPI மாநில பொருளாளர் அம்சத் பாஷா முன்னிலை வகித்தார்,மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீத் வரவேற்றார் .SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி அவர்கள் தேர்தல் நடை முறைகள் பற்றியும்,அதில் நடந்த முறைகேடுகள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

தேர்தலில் வெற்றி பெற்ற  ஒரு பகுதியினர்
 தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் A.S இஸ்மாயில்,மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் ஷெரிப் ,SDPI தேசிய செயலாளர் Dr.ஆவாத் ஷெரிப் ,மாநில பொது செயலாளர் S.M முஹம்மத் ரபீக் வாழ்த்துரை வழங்கினர்.விருது நகர் முன்னால் BDO முஹம்மத் பிச்சை மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளாட்சியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும்,உள்ளாட்சி அதிகாரம்   பற்றியும் வகுப்பு எடுத்தனர் .இறுதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க பட்டு மாநில செயலாளர் நெல்லை முபாரக்கின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .

தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு பகுதியினர்


பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் உரையாடிய பொழுது

ஞாயிறு, 20 நவம்பர், 2011

ரதயாத்திரை இன்று தொடக்கம்!

பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை நினவுகூறும் வகையிலும் அதனை ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் எந்த ஒரு முஸ்லிமிடமும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவருடமும் டிசம்பர் -6ஆம் தேதி அன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆர்பாட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வை திரும்பப்பெறவேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல் விலை அதன் எதிரொலியாக ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எப்படி சமாளிப்பது என மக்கள் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் மக்களின் தினசரி தேவைகளான பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருப்பது 
பகிரங்கமான மக்கள் விரோத மனிதாபிமானமற்ற செயலாகும்.



இந்த விலை உயர்வினால் வழக்கம் போல் பாதிப்பிற்குள்ளாகப் போவது நடுத்தர மக்கள்தான். ஆடு வழங்குகிறேன், மாடு வழங்குகிறேன் என்று சொல்லி விட்டு மனிதனின் அன்றாடத் தேவைகளை பன்மடங்கு உயர்த்தியிருப்பது "யானைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு" என்பது போன்று உள்ளது.

திருப்பூர் மக்களுக்கான நிவாரண நிதி

சென்னை :  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருப்பூர் வாசிகளின் மறுவாழ்விற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நிவராண நிதி மாநிலம் முழுவதும் திரட்டப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி நேற்றைய தினம் 18.11.2011 அன்று ஜும்மா தொழுகை முடிந்த பிறகும் எல்லா மாவட்டங்களிலும் திருப்பூர் மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.

இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்றைய தினம் 18.11.2011 அன்று சென்னை மண்ணடியிலுள்ள மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. முதன்முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஒரு சில பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டனர்.