நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 20 ஜனவரி, 2012

பெரும் போலீஸ் படை பாதுகாப்புடன் மோடி நடத்திய உண்ணாவிரத நாடகம்


கோத்ரா : ஸத்பாவனா உண்ணாவிரத தொடரின் ஒரு பகுதியாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி பாதுகாப்புடன் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரங்கேற்றினார்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்று 10-வது ஆண்டு நிறைவுற இன்னும் ஒரு மாதம் மீதமிருக்கையில் உண்ணாவிரதத்தை மோடி நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஆர்.நடராஜ் நியமனம்


சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தார். அவர் தனது பதவியை கடந்த வாரம் திடீரென ராஜிநாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
மானந்தவாடி(கேரளா) : சத்தியத்தை குறித்த தேடுதலில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இளைஞரை தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாட தேசிய புலனாய்வு ஏஜன்சியும், மாநில போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிலால்.இவர் தற்பொழுது வயநாடு மானந்தவாடியில் வசித்துவருகிறார். புலனாய்வு அதிகாரிகளின் பகையை தீர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை தயாராகி வருகிறார் பிலால்.

வியாழன், 19 ஜனவரி, 2012

நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உங்களின் நிஜங்கள்

பத்திரிக்கைதுறையினரால் பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயம், தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக மக்களின் சக்தியை ஒருமுகப்படுத்தாமல் இஸ்லாம் சார்ந்த இதழ்களிலேயே இழைப்பறிக் கெண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக்காரணம் அத்துறைில் காணப்படும் வெற்றிடமே! அவ்வெற்றிடத்தை வென்றெடுத்திடவே இளம் கைகளில் எழுதுகோலை கொடுத்து எமது இந்தப் பணியினை துவங்கினோம். சிறிய அகவில் துவங்கப்பட்ட இப்பணி இன்று பல்லாயிரம் வாசகர் வட்டத்தை தன்னுள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நிறம்மாறி வரும் காலங்களில் நிஜங்களாக வரவேண்டும்  என்பதற்காக. எழுத்தாளமும், கருத்தாளமும் கொண்ட எங்களின் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அனுப்பும் கருத்துக்களே வலுசேர்க்கின்றன.  நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அரவணைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

                                                                                                             -ஆசிரியர் குழு-


கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை


கோழிக்கோடு :  முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 


இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கொலைகளை கண்டித்து மணிப்பூரில் எஸ்.டி.பி.ஐ பேரணி


இம்பால் : நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கொலைச் செய்ததை கண்டித்து சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பேரணி நடத்தியது.

இஸ்ஹாக் அலி(வயது 25), முஸ்தகீம்(வயது 24) ஆகிய இளைஞர்களின் படுகொலைக் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பேரணியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதிரையில் தீ விபத்து - மீட்புப் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்


அதிரை c .m.p லைன் v .k .m ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து கூரை திடுரென தீப்பிடித்து மளமளவென   பரவியது . இது பற்றி தகவலறிந்த பொதுமக்களும் அதிரை நகர  பாப்புலர்  ப்ரண்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் .  பாப்புலர்  ப்ரண்ட் செயல்வீரர்கள் தீயை அனைத்த்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர் .  பாப்புலர்  ப்ரண்ட் செயல் வீரர்களின் பணியினை அதிரை காவல் ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் வெகுவாக பாராட்டினார் . 

கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்


லண்டன் : கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மரணிப்பதற்கு, இதுக்குறித்த முன்னறிவிப்பை சர்வதேச சமூகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம் என பிரிட்டன் நிவாரண அமைப்புக்கள் கூறியுள்ளன.

சோமாலியா,கென்யா,எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் கடந்த ஆண்டு மரணித்தனர்.

கண் கண்ட கவ்லா


இஸ்லாத்​தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்​கொண்ட ​பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சி​லைக​ளையும் வணங்கிக்​​கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்​தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க​​ பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்​கை​யை வாகாய் புரட்டிப் ​போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக ​நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவி​டை​ செய்வதில் அலாதி ஆனந்தம் ​அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்​மையா​ரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.

கண் கண்ட கவ்லா


இஸ்லாத்​தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்​கொண்ட ​பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சி​லைக​ளையும் வணங்கிக்​​கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்​தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க​​ பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்​கை​யை வாகாய் புரட்டிப் ​போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக ​நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவி​டை​ செய்வதில் அலாதி ஆனந்தம் ​அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்​மையா​ரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.
நபிகளாருக்கு இ​றைச்​செய்தி துவங்கிய 10வது வருடம் அன்​னை கதீஜா  அம்​மையார் ம​றைந்த​​பொழுது அவரது இழப்பால் ஏற்பட்ட ​வெற்றிடத்​தை உட​னே நிரப்ப ​வேண்டும் என்று கவ்லா உணர்ந்தார். 25 ஆண்டுகளாக அனைத்து வ​கையிலும் அண்ணலாருக்கு அரும்​பெரும் து​ணையாக இருந்த கதீஜா அம்மையாரின் ம​றைவு அண்ணலாருக்குப் ​பெரும் ​சோகத்​தை உண்டாக்கியிருந்தது. அண்ணலார் திரும்பவும் திருமணம் ​செய்து​கொள்ள​வேண்டும் என்று கவ்லா அண்ணலாரிடம் வலியுறுத்தினார்.
அத்​தோடு அண்ணலாருக்குப் ​பொருத்தமானவர் யார் என்பதையும் அவர் மனதில் ​வைத்திருந்தார். நபிகளார் கவ்லாவிடம் யா​ரை மணமுடிக்கலாம் என்று ​கேட்ட​பொழுது, “நீங்கள் விரும்புவது கன்னிப்​ பெண்​ணையா, முதிர்ந்த ​பெண்​ணையா?” என்று கவ்லா​ கேட்டார்.”இருவரது​ பெய​ரையும்​சொல்லுங்கள்” என்று அண்ணலார்​ கேட்டார்கள்.
அதற்கு கவ்லா(ரலி) இவ்வாறு பதிலளித்தார்: “கன்னிப் ​பெண் ஆயிஷா. முதிர்ந்த ​பெண் ஸவ்தா.” இருவ​ரையு​ம் ​பெண்​ கேட்குமாறு அண்ணலார் ​கேட்டுக்​கொண்டார்கள்.
கவ்லா(ரலி) அந்த இருவரிடமும் ​சென்று, “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கண்ணியத்​தை நாடுகிறான்” என்று​ சொன்னார். அந்த இருவரு​மே அண்ணலா​ரை மணமுடிக்க சம்மதம் ​தெரிவித்தார்கள். அண்ணலார் முதலில் மக்காவில் இருக்கும்​ பொழு​தே ஸவ்தா(ரலி) அவர்க​ளைத் திருமணம் முடித்தார்கள். மூன்று வருடம் கழித்து மதீனாவில்​ வைத்து ஆயிஷா(ரலி) அவர்க​ளை மணமுடித்தார்கள்.
மதீனாவுக்குப் புலம்​பெயர்ந்த பிறகும் கவ்லா(ரலி) அண்ணலாரின் வீட்டுக்குத் ​தொடர்ந்து ​செல்பவர்களாக இருந்தார்கள். அண்ணலாரின் மனைவிமார்களும் கவ்லா​ வரும்​பொழு​தெல்லாம் அவ​ரை வர​வேற்று உபசரிப்பார்கள். ஒரு தடவை கவ்லா மிகவும் கவ​லையாகக் காணப்பட்டார். ப​ழைய ஆடைகள் அணிந்து, அணிகலன்கள் எதுவும் அணிந்து​கொள்ளாமல், தன்​னை அலங்கரித்துக் ​கொள்ளாமல் ​வெறுமையாகக் காட்சியளித்தார். அவரு​டைய கணவர் வசதியானவராக இருந்தும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று முஃமின்களின் தாய்மார்கள் வினவிய​​பொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்: “அவர் அவருக்​கே உரிய ஓர் உலகில் வாழ்ந்து வருகிறார். தினமும் ​நோன்பு ​நோற்கிறார். ஒவ்​வொரு இரவும் நின்று வணங்குகிறார்.”
அண்ணலாரிடம் அவர்களின் ம​னைவிமார்கள் இது குறித்து முறையிட்டார்கள். இ​றைத்தூதர் முஹம்மத் (ஸல்) கவ்லாவின் கணவரான உதுமான் இப்னு மஸ்ஊன் (ரலி) அவர்க​ளை அ​ழைத்து, “நீங்கள் பின்பற்ற​ வேண்டிய நபர் நான்தா​னே” என்று ​கேட்டார்கள். உதுமான் இத​னைக்​ ​கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் ​போனார். அவரது இரவு வணக்கம் குறித்தும், ​நோன்பு குறித்தும் அவரிடம் ​கேட்டு உறுதிப்படுத்திய நபிகளார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவ்வாறு ​செய்யாதே. உன் கண்களுக்கு உன் ​மேல் உரி​மை உண்டு. உன் உடலுக்கு உன் ​மேல் உரிமை உண்டு. உன் குடும்பத்துக்கு உன் ​மேல் உரி​மை உண்டு. இரவு வணங்கவும் ​செய். உறங்கவும் ​செய். சில நாட்கள் ​நோன்பு ​நோற்றுக்​கொள். சில நாட்கள் ​நோன்பை விடு.”
உதுமான் இப்னுமஸ்ஊன்(ரலி) அண்ணலாரின் கட்டளைக்கிணங்க நடந்து​கொண்டார். அதன்பிறகு நபிகளாரின் மனைவிமார்களிடம் வந்த கவ்லா தன்​னை அலங்கரித்துக்​கொண்டு, நல்ல ஆ​​டைகள் அணிந்து மகிழ்ச்சியாக மணப்​பெண்​போல் காட்சியளித்தார்.
இந்த உதுமான் இப்னுமஸ்ஊன் (ரலி) அவர்கள்தான் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களில் முதன்முதலில் மதீனாவில் மரணித்தவர். அவ​ரைப் பற்றி கவ்லா(ரலி) ஓர் அழகிய கவி​தை ஒன்​றை எழுதினார். அது அதிக இலக்கியச் ​செறிவுடன் உயர்ந்த ந​டையில் அ​மைந்திருந்தது.
இப்படி மாதர் குலத்தின் மாதிரி வடிவமாகத் திகழ்ந்த கவ்லா(ரலி) அவர்களிடமிருந்து நாம் இஸ்லாமிய ஈடுபாட்​டையும், ஈர்ப்பையும் பாடமாகப் ​பெறலாம்.

இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்


புதுடெல்லி : புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரிஜினலை சமர்ப்பிக்க வேண்டும்.

ஈரானையும், சிரியாவையும் தாக்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை


மாஸ்கோ : ஈரான்,சிரியா பிரச்சனைகள் தொடர்பாக அந்நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானை தாக்குவது பெரும் துயரத்தை உருவாக்கும் என கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் பிராந்தியம் முழுவதும் அகதிகள் பிரச்சனையால் நெருக்கடியுல் ஆழ்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்


அங்காரா : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட் ரும்னியுடன் மோதும் டெக்ஸாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கி ‘இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது’ என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் கூட மிதவாதி என குறிப்பிடும் ரஜப் தய்யிப் எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியை பயங்கரவாத கட்சியாக முத்திரைக் குத்தும் டெக்ஸாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி மன்னிப்பு கோரவேண்டும் என அமெரிக்காவில் உள்ள துருக்கி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதன், 18 ஜனவரி, 2012

ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை


மும்பை : மலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளை குறித்து விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)க்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில்ஜோஷியின் கொலை வழக்கு விசாரணை முக்கியத்துவமாக மாறும்.

சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் ஆதாரங்கள் இதர வழக்குகளுடன் பிணைந்து கிடப்பதால் இவ்வழக்கின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லோக் ஆயுக்தா என்பது மோடியின் கபட நாடகம் – காங்கிரஸ் குற்றச்சாற்று


புதுடெல்லி : குஜராத் மாநிலத்தில் ஆளுநர் கமலா பெனிவால் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து குஜராத் முதல்வர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியின் கபடநாடகத்திற்கும், பா.ஜ.கவின் இரட்டை வேடத்திற்கும் இன்னொரு சட்டரீதியான விளக்கம்தான் நீதிமன்ற தீர்ப்பு என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஹரேன் பாண்டியா கொலை: குஜராத் மோடி அரசுக்கு நோட்டீஸ்


அஹ்மதாபாத் : குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் மறு விசாரணை கோரி அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சி.பி.ஐக்கும், குஜராத் மோடி அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹரேன் பாண்டியா மனைவியின் மனு மீதான விசாரணை பிப்ரவரி ஆறாம் தேதி முதல் நடைபெறும். விசாரணை துவங்குவதற்கு முன் பதிலளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கும், மோடி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆன் ஆஃப்கானில்


காபூல் : உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதி ஆஃப்கானில் வெளியிடப்பட்டது. 2.28 மீட்டர் நீளமும், 1.55 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் 500 கிலோ எடை கொண்டது. 218 தாள்கள் உள்ளன. 5 லட்சம் டாலர் செலவான இத்திருக்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரியது என ஆஃப்கானிஸ்தானின் ஹஜ் மற்றும் மார்க்க விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரபல கையெழுத்தாளர் முஹம்மது ஸாபிர் காதிரியும், ஒன்பது மாணவர்களும் இணைந்து இத்திருக்குர்ஆன் பிரதியை தயாரித்துள்ளனர். வசனங்களின் முக்கியத்துவத்தைக் குறித்து குறிப்பிட்ட நிறத்தில் சில பகுதிகள் உள்ளன.

உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா?


ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர்; தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். வீரிய விருத்தியும் உண்டாகும்.


ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். எல்லா M.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது..... 



இருளர் பெண்கள்:போலீசாரை கைது செய்யாதது ஏன்? -ஜெ.அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்


சென்னை : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சார்ந்த 5 இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்யாததற்கு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும்: மோடி அரசின் மனு தள்ளுபடி


அஹ்மதாபாத் : குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுனர் கமலா பெனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

மர்கசுல் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு மையம் திறப்புவிழா

மஞ்சேரி கேரளா :  இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அதன் போதனைகளையும் எடுத்துச் சொல்வதற்கான பிரச்சார மையம் புதிதாக உதயமாகியுள்ளது. இஸ்லாத்தை அறிய முற்படுபவருக்கு இஸ்லாமிய கல்வியை பயிற்றுவிப்பதுக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணிகளுக்காகவும் சத்யா சாரணி அறக்கட்டளையின் கீழ் மர்கசுல் ஹிதாயா கல்வி மையம் மலப்புரம் மஞ்சேரியில் நிறுவப்பட்டுள்ளது.

Dr. Mansoor Alam, chairman, Institute of Objective Studies, inaugurates Markazul Hidaya educational complex at Manjeri

இந்த புதிய இஸ்லாமிய மையத்தை டெல்லி இன்ஸ்டிடுட் ஆப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ் தலைவர் டாக்டர் மன்சூர் ஆலம் அவர்கள் திறந்து வைத்தார்.


படித்திவிட்டீர்களா இந்த மாதம்?


விக்கிபீடியா இன்று பணி நிறுத்தம்


வாஷிங்டன் : காப்புரிமை இல்லாமல் திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இணையத்தளங்கள் வெளியிடுவதை எதிர்த்து அமெரிக்க காங்கிரஸ் சட்டம் நிறைவேற்ற உள்ளது.

இதனை எதிர்த்து ஆன்லைன் என்சைக்ளோபீடியா இணையதளமான விக்கிபீடியா அதன் ஆங்கில பதிப்பை இன்று(புதன்கிழமை) தனது பணியை 24 மணிநேரம் நிறுத்திவைத்துள்ளது.