நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

உதயமாகும் புதிய மாநிலங்கள்

புகழ்பெற்ற ஒரு நிறுவனம் திடீரென நான்காகப் பிளவுபட்டு, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிப் பெயர்ப்பலகை, தனி நிர்வாகம், தனி வருமானம் என்றாகிவிட்டால் எல்லோருக்கும் முதலில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 


அத்தகைய அதிர்ச்சியை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியிருக்கிறார் செல்வி மாயாவதி. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்போவதாக அதன் முதல்வர் மாயாவதி அறிவித்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.


2011 நவம்பர் 16-ஆம் தேதி கூடிய உ.பி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஸ்ச்சிம் பிரதேசம், அவாத் பிரதேசம், பூர்வாஞ்சல், புந்தல்கண்ட் என நான்கு மாநிலங்களாக உ.பியைப் பிரிப்பது என்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, நவம்பர் 27-ஆம் தேதியன்று அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப் பட்டு, அதில் புதிய மாநிலங்களை அமைத்துத் தருமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. 2007 பிப்ரவரியில் உ.பியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், நான்கு மாநிலப் பிரிவினை என்பது அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான மாயாவதியின் அரசியல் வித்தை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை ஏன்  பிரிக்கவேண்டும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்விகளும் எழுந்தன. 

இந்தியாவில் தற்போது 28 மாநிலங்கள் உள்ளன. 1953-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழுவின்  (states re#organisation committee) பரிந்துரையின்படி, 1956-இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப் பட்டு, மாநிலத்தின் எல்லைகள் வரையறுக்கப் பட்டன. (தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்ததும் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுடன் இணைந்ததும் இந்த வரை யறையின் சாதக-பாதகங்களுக்கான எடுத்துக் காட்டுகள்) தமிழ்நாடு, ஆந்திரா(தெலுங்கு), கர்நாடகா (கன்னடம்), கேரளா (மலையாளம்), மகாராஷ்ட்ரா(மராத்தி), குஜராத், ஒடிசா (ஒரியா) என மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 

இந்திய அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவு, புதிய மாநிலங்கள் உருவாக்குதல், மாநிலங் களைப் பிரித்தல், சேர்த்தல், எல்லைகளை விரிவாக்குதல், சுருக்குதல் , மாநிலத்தின் பெயரை மாற்றுதல் உள்ளிட்டவை பற்றி விவரிக்கிறது. இது தொடர்பாக  மாநில சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிலிக்கும். புதிய மாநிலம் உருவாக்குதல் அல்லது மாநில எல்லைகளை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து  வகுக்கப் பட்டுள்ள நெறிமுறைகளின் அடிப்படை யிலானதா என்பதை உறுதி செய்து, இத் தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். குடியரசுத்தலைவர்  இதனைப் பரிசீலிலித்து, நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவைக் கொண்டுவர பரிந்துரைப்பார். நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இந்த மசோதா பெற்றுவிட்டால், புதிய மாநில உருவாக்கம் அல்லது பெயர் மாற்றம் அல்லது விரிவாக்கம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றலாம். எனவே, ஒரு மாநிலத்தை இரண்டாகவோ நான்காகவோ பிரிப்பது என்பது அரசியல் சாசனத்திற்குட்பட்ட நடவடிக்கையே ஆகும்.

உத்தரபிரதேச மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பதை மாநிலங்கள் மறு சீரமைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த கே.எம்.பணிக்கர் 1953-ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருந்தார். மிகவும் அகலமாகக் காணப்படும் உத்தரபிரதேசத்தில் நிர்வாகச் செயல்பாடு என்பது கடினமாக இருக்கும்.  அத்துடன் இயற்கை அமைப்பின் அடிப்படை யிலும் புவியியல் ரீதியாகவும் இம்மாநிலத்தில் பொதுத்தன்மை இல்லை. மேலும்,  அப்போதைய நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 499-இல் 85 பேர் உ.பி. மாநிலத்திலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்களாக  இருக்கிறார்கள். இது, ஆறில் ஒரு பங்காகும்.  இந்த எண்ணிக்கை என்பது இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் குறித்த ஒட்டுமொத்த நலனில் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும். எனவே, உ.பியைப் பிரிப்பதே நல்லது எனக் குறிப்பு எழுதியிருந்தார் பணிக்கர். ஆனால், 1956-இல் அரசியல் காரணங்களால் உத்தரபிரதேசம் பிரிக்கப் படவில்லை.

மொழிவாரி மாநிலங்கள் உருவானதைத் தொடர்ந்து, இந்தியாவின் வடகிழக்கு பகுதி யில் நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் உருவாயின. போர்த்துகீசியர் ஆதிக்கத்திலி லிருந்து விடுபட்டு யூனியன் பிரதேசமாக இருந்த கோவாவும் தனி மாநிலமானது. அதுபோலவே, டெல்லிலியும் யூனியன் பிரதேசம் என்ற நிலையிலிலிருந்து மாநிலம் என்ற தகுதியைப் பெற்றது.  இதன்பின், 2000-ஆம் ஆண்டில் பெரிய மாநிலங்களைப் பிரித்து 3 புதிய மாநிலங்கள் உருவாயின. உத்தர பிரதேசத்திலிலிருந்து உத்தர காண்ட் (பழைய பெயர் உத்ராஞ்சல்), மத்திய பிரதேசத்திலிலிருந்து சட்டீஸ்கர், பீகாரிலிலிருந்து  ஜார்கண்ட் ஆகிய சிறிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மூன்றுமே மலை மற்றும் வனப்பகுதிகளை அதிகம் கொண்ட மாநிலங்களாகும். 

நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டே இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பெரிய மாநிலத்துடன் இணைந்திருக்கும்போது இந்த மலைப்பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரியாகக் கிடைக்கவில்லை என்பதே மாநிலப் பிரிவினைக்கான முதன்மையான காரணம். இந்த புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவற்றின் வளர்ச்சி எப்படியுள்ளது என்று ஆய்வு செய்யும்போது,  நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி (GDP)  விகிதத்தைவிட இந்த மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் கூடுதலாகவே உள்ளது. 

உத்தரபிரதேசத்தின் 13 மலை மாவட்டங் களைப் பிரித்து உருவாக்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தில் தனி மனித சராசரி ஆண்டு வருமானம் என்பது 11 ஆண்டுகளுக்கு முன் 14ஆயிரத்து 300 ரூபாய்தான். தற்போது 55ஆயிரத்து 870 ரூபாய். இது, இந்தியாவின் தனி மனித சராசரி ஆண்டு வருமானமான 54ஆயிரத்து 835 ரூபாயைவிடக் கூடுதலாகும்.  தனிமாநிலமான பிறகு, தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறை மேம்பாடடைந்துள்ளது. கல்வித் துறையும் முன்னேற்றம் கண்டுள்ளது.  

மத்தியபிரதேசத்திலிலிருந்து பிரிக்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலமும் முன்பிருந்த நிலையை விட பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளது. இன்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் மின் உற்பத்தியில் தன்னிறைவு கண்டு, உபரி மின்சாரம் தயாரிக்கும் நிலையில் சட்டீஸ்கர் உள்ளது. எஃகு தொழிலில் முன்னணியில் உள்ளது. வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதில் கணினி பயன்பாட்டு முறையைக் கொண்டு வந்து, வெளிப்படையான - லாபகரமான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதிலும் இந்த மாநிலம் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு நியாயவிலைக்கடை அமைக்கப் பட்டிருப்பதுடன், ஆண்டுக்கு 10 நாட்கள் தலையாரி முதல் முதல்வர் வரை கிராமங்களுக்கு நேரில் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை சரி செய்கிறார்கள். சிறிய மாநிலமாகப் பிரிக்கப் பட்டதால் கிடைத்துள்ள பயன்கள் இவை.

அதேநேரத்தில், இந்த மூன்று மாநிலங்களும் தம்முடைய வளர்ச்சிக்காக ஏராளமான இயற்கைச் செல்வங்களை இழந்திருக்கின்றன. வனவளம், கனிம வளம், நீர் வளம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளில் பெரும் பாதிப்படைந் துள்ளன. மாநிலத்தின் மொத்த வளர்ச்சி என்பது சமுதாயத்தின் வளர்ச்சியாக மாற்றம் பெறவில்லை. அதிலும் குறிப்பாக, ஜார்கண்ட் மாநிலத்தில் பொதுவான வளர்ச்சிகள்கூட குறைவாகவே உள்ளன. தனி மாநிலமானபிறகு, ஒரு மெகாவாட் மின்சாரத்தைக்கூட அந்த மாநிலம் உற்பத்தி செய்யவில்லை. மூன்று மாநிலங்களிலும் சத்துணவு குறைபாடு, வேலையில்லாத் திண்டாட்டம், அதன் காரணமாகப் பெருகும் தீவிரவாதம் போன்ற சவால்கள் அதிகரித்தபடியே உள்ளன. ஆள்பவர்களின் அரசியல் நடவடிக்கைகளும், மலை -வனப் பிரதேசமான இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறப்பு நிதியை அதிகப்படுத்தாமல் இருப்பதுமே இவற்றிற்குக் காரணங்களாக உள்ளன. 

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, சுதந்திர இந்தியாவில் பெரிய மாநிலங்கள் கடந்த 65 ஆண்டுகளில் பெற்றுள்ள வளர்ச்சியைவிட இந்த சிறிய மாநிலங்கள் 11 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சி கூடுதலாகவே இருக்கிறது.