நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 13 ஆகஸ்ட், 2011

சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் புகார் மனு

சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் புகார் மனு
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் முஸ்லிம்களை இழிவுபடுத்தியும் கட்டுரை எழுதிய சுப்பிரமணிய சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (08.08.2011) பிற்பகல் தமிழக காவல் துறை தலைமை இயக்குனரிடம் (டி.ஜி.பி) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் எம்.முஹம்மது ஷேக் அன்ஸாரி அவர்கள்  புகார் அளித்துள்ளார்கள். அதன் பிறகு அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-


Freedom Parade 2011


உம்ரா செய்வது எப்படி?


உம்ரா செய்வது எப்படி?
'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

இறை நெருக்கத்திற்கான எளிய வழி


இறை நெருக்கத்திற்கான எளிய வழி
    அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அனைத்து தேவைகளுக்காகவும் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக காலை மாலை நேரங்களில் வழமையாக சில துஆக்களை ஓதுபவர்களாகவும் இருந்தார்கள். அப்போது அபூபக்கர் ஸித்தீக் (ரளி) அவர்கள் தனக்கு அத்தகையதொரு துஆவை கற்றுக்கொடுக்கும்படி ரஸுல் (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். பொதுவாக ஸஹாபிகள் தனக்கென்று பிரத்யேகமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் வணக்க வழிபாட்டு முறைகளைப் பற்றி விசாரித்தாலும், ரஸுல் (ஸல்) அவர்கள் பதில் வழிமுறையானது அனைவருக்கும் பொதுவானதாகும். அவ்வகையில் நாமும் அதனை தெரிந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

இயக்கச் செய்திகள்

அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு



தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது.  இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

ரமலான் மாத நிகழ்வுகள்


இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்.

ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.

குவைத்:வெளிநாட்டினர் போராட்டத்தில் பங்கேற்றால் சிறையும், அபராதமும்


குவைத்சிட்டி: குவைத்தில் ஏதேனும் பெயரில் நடைபெறும் போராட்டங்களில் குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் காத்திருப்பதாக குவைத் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா அரசு எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை கண்டித்து குவைத்தில் அதிகரித்துவரும் போராட்டங்களில் வெளிநாட்டினர் பங்கேற்பதாக வெளியான தகவலையடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டனில் கலவரம் தொடர்கிறது:ஐந்து பேர் பலி


லண்டன்: போதைப் பொருள் இடைத்தரகர் என கூறி ஒருவரை போலீஸ் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து வெடித்த இனக்கலவரம் பிரிட்டனின் இதர நகரங்களுக்கும் பரவியுள்ளது. க்ரோய்டானிலும், பர்மிங்காமிலும் இதுவரை ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கூடுதல் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் லண்டன் நகரம் அமைதியாக இருக்கிறது. அதேவேளையில் மாஞ்செஸ்டர், ஸால்ஃபோர்ட், பர்மிங்காம், ப்ரஸ்டோல், நாட்டிங்காம், லிவர்ஃபூல், லெஸ்டர், க்ளோஸ்டஸெயர், கேம்ப்ரிட்ஜ் நகரங்களில் செவ்வாய்க்கிழமை இரவிலும் தாக்குதல்கள் நடந்தேறின. வன்முறையாளர்கள் நூற்றுக்கணக்கான கடைகளை கொள்ளையடித்து தீக்கிரையாக்கினர்.

பேரீச்சை


ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

அபினவ் பாரத்தில் சேர்ந்தது ரகசிய விபரங்களை சேகரிக்க – வழக்கிலிருந்து தப்ப முயலும் புரோகித்...


மும்பை:ராணுவ உளவுத்துறையின் ரகசிய ஆபரேசனின் ஒரு பகுதியாகவே தான் அபினவ் பாரத்திலும், சிமியிலும் ஊடுருவியதாக மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகாந்த் புரோகித் கூறியுள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையில் புரோகித்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எடுத்துவைத்த வாதமாகும் இது.

பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்


மும்பை: தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க பாலிக்ராஃப் டெஸ்ட்(பலமுனை வரைவி சோதனை), ப்ரெயின் மேப்பிங் உள்ளிட்ட உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என என்.ஐ.ஏ கடந்த வாரம் மோக்கா சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

செங்கோட்டை தாக்குதல்:ஆரிஃபின் மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது


புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தின் உறுப்பினர் என கருதப்படும் முஹம்மது அஷ்ஃபாக் என்ற ஆரிஃபின் மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்துள்ளது.
2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நடந்த செங்கோட்டை தாக்குதல் வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் மரணத்தண்டனையை விதித்திருந்தது. இத்தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது.

பொருளாதார முறைகேடு:எடியூரப்பாவின் மீது லோகாயுக்தா எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது



பெங்களூர்: பொருளாதார முறைகேடு தொடர்பாக முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது லோகாயுக்தா போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கத் தொழில், நிலபேர ஊழல் ஆகிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு இவ்வழக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா


ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி
மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாகநடந்து வருகின்றன.ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோஅலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றிதனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது.


வ.உ சிதம்பரம் பிள்ளை க்கு உதவிய வள்ளல்


சுதேசி ஸ்டீம் நேவிகேசன்

இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவா ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட்ஆவார்.

NRI வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவம்

UAE Vacancies in Oilfield private


Please note that the following immediate vacancies exists in Oilfield private, Abu Dhabi , UAE .
1. Project Engineers - 2 nos – Mechanical Engineer with excellent academics , good working knowledge & experience in Fabrication , Welding , Assembly , Hydraulics etc. Good computer skills . Renumeration package : AED. 10,000 / – ( Complete ) , Medical , Transportation , Yearly paid leave , To & fro annual ticket to the home country .
2. Production / Workshop Manager – 1 no – Mechanical Engineer with excellent academics , good working knowledge & years of experience in Fabrication , Welding , Assembly , Hydraulics etc. Good computer skills . Renumeration package : AED. 20,000 / – to AED. 25,000 / – , Accomodation , Family Status , Medical , Transportation , Yearly paid leave , To & fro annual ticket to the home country .
Please forward cvs of our brothers for immediate deployment . Free visa . Interview will be either live or telephonic .
Mail to : Rasheed Ahmed [mailto:rasheedz@yahoo.com]

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும் சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை


2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது போல் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள 2010-11க்கான நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. கண்ணும் கருத்துமாக செயல்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அளிப்பதற்கு  அட்சரமாக இருக்கும் எங்கள் அன்புச் சகோதரி  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதன், 10 ஆகஸ்ட், 2011


பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 - ஒரு பார்வை

Wednesday, July 13th, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.

மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்கள் முஸ்லிம்கள்.

        சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
  முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை.

மகாத்மா காந்தி இந்தியாவிற்கு தந்தை ... அந்த தந்தையை சுதந்திர போராட்டதிற்கு அழைத்து சென்றது யார் என்று தெரியுமா ?


        மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள்அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி.
       போர்பந்தர்! இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.அப்ல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்ல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் அப்துல்லா அண்ட் கம்பெனிஎன்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!


நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம்  உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்.



அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அபுதர் அல் கிப்பாரி (ரலி) பற்றி ஓர் அறிமுகம்பெயர் : ஜுன்துப் இப்னு ஜுனாதாத் இப்னு சுப்யான் இப்னு உபைத் இப்னு ஹராம் இப்னு கிப்பார் இப்னு முலைல் இப்னு லம்hரா இப்னு பக்ர் இப்னு அப்து மனாத் இப்னு கினானா என்பதாகும்.
இவரது புனைப் பெயர் அபு தர் என்பதாகும்.மேலும் இவர் அல் கிப்பார் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையின் பெயர் :
ஜுனாதாத் இப்னு சுப்யான்தாயின் பெயர் : ரம்லத் பின்து வகீஆ ரலி அவர்கள்மனைவியின் பெயர் : உம்மு தர் ரலி அவர்கள் சகோதரரின் பெயர் :உனைஸ் இப்னு ஜுனாதா ரலி அவர்கள்ஆதாரம் :அஹ்மத் .சீரத்து அஃலாமுன் நுபலா.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை அலற வைத்த ,சுதந்திரதிற்கு வித்திட்ட மாவீரர் திப்பு சுல்தான்


கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானதுஎன்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

படிக்க மறந்த கடைசிப் பாடம்


Ø இப்பாடத்தில் முதல்கோணல் முற்றும் கோணலல்ல! முடிவுக்கோணலே முழுகோணல்!
Ø இத்தேர்வில் தவறியோர் மறுதேர்வு எழுத அணுமதியில்லை
Ø மறு நுழைவுக்கும் வழியும் இல்லை , கை பிசைந்து நிற்கும் அவலநிலை.

கண்ணியமிக்க எனது சகோதரர்களே!


கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?
   

இயக்கச் செய்திகள்


1.         கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு
கோழிக்கோடு : கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது
வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடையே சுதந்திரத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களிடையே நம்பிக்கையை விதைக்கும் தேசிய உணர்வை ஏற்படுத்தும் என பாப்புலர் ப்ரண்ட் தலைமை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் அது மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்ககூடியது அனைவராலும் விரும்பக்கூடிய நிகழ்ச்சியாகும். சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வெறும் சம்பிரதாயமாக பார்க்கப்பட்ட ஒரு சில அரசு அலுவலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த சுதந்திர கொண்டாட்டம் அடித்தட்டு மக்களால் தற்போது கொண்டாடப்படுவதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தையும் அணிவகுப்பையும் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என பாப்புலர் பிரான்ட் தலைமை மக்களை கேட்டுக்கொள்கிறது
கேரளாவில் மட்டுமின்றி கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கடந்த முன்று வருடங்களாக சுதந்திர தின கொண்டாட்டம் அணிவவகுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.



விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்



உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில. 
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் - வடக்கே பகதூர்~h, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.