நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 மார்ச், 2012

கஸ்மிக்கு கொடுமை இழைக்க கூடாது – மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை!


புதுடெல்லி : இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் டெல்லி போலீஸ் கைது செய்துள்ள பிரபல பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது கஸ்மியை கஸ்டடியில் சித்திரவதை செய்யக்கூடாது என்றும், உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Shuzab Kazmi, SK Pandey, Mohammad Adeeb and Saeed Naqvi adressing the media on Friday at the Press club
சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி, இண்டர்நேசனல் ஃபெடரேசன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ்  ப்ரோக்ராம் மேனேஜர் முரளீதரன், ஸஈத் நக்வி, சீமா முஸ்தஃபா ஆகியோர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இக்கோரிக்கையை விடுத்தனர்.

கோலாக்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனம்!


புதுடெல்லி : புற்றுநோயை உருவாக்கும் இரசாயன பொருளை அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக கோலாக்களில் கலந்திருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவில் சந்தையில் அளிக்கப்படும் கோலாக்களின் சேர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவர பெப்ஸியும், கோக்கோ கோலாவும் தீர்மானித்துள்ளன. ஆனால் இக்கம்பெனிகள் இந்தியாவில் சேர்மானங்களின் மாற்றத்திற்கு தயாராகுமா என்பது கேள்விக்குறியாகும்.
Laboratory experiments showed that 4-MI and a chemical cousin called 2-MI, both of which Coke and Pepsi use to produce their classic caramel colour, were found to be carcinogenic in animal studies.
கோக்கோ கோலாவிலும், பெப்ஸியிலும் தவிட்டு நிறத்திலான 4-மீதைலிமிடாசோல்(4-methylimidazole, or 4-MI) என்ற இரசாயன பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் செண்டர் ஃபார் ஸயன்ஸ் இன் தி பப்ளிக் இண்டரஸ்ட்(Center for Science in the Public Interest (CSPI)) நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.  கடந்த வாரம் இது தொடர்பான அறிக்கை வெளியானது.

UP தேர்தலில் வென்ற முஸ்லிம் MLA-க்களின் பட்டியல்


உ.பி.யின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஓரளவு வாய்ப்புகளை வழங்கியிருந்தன.அதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் 2012 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சமாஜ்வாடி கட்சி 225 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது எதிர்பாராத வெற்றியாகும்.


கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid)உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதம், பொறுப்பற்ற ஊடகங்கள்: இந்தியாவின் சூப்பர் பவர் கனவு அம்பேல்! ஆய்வில் தகவல்!


லண்டன் : உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது.
India is not a superpower (and may never be) concludes new LSE study
ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய விஷயங்களில் இந்தியா வெகுவாக முன்னேறிய பொழுதும் உள்நாட்டு பிரச்சனைகள்தாம் இந்தியாவின் சூப்பர் பவர் நம்பிக்கைக்கு தடைகற்களாக மாறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

வெள்ளி, 9 மார்ச், 2012

தொகாடியாவின் முஸ்லிம் எதிர்ப்பு உரை: கஷ்மீரில் மோதல், ஊரடங்கு உத்தரவு!


ஸ்ரீநகர்: கஷ்மீரில் எல்லை மாவட்டமான ரஜவ்ரியில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியாவின் விஷம் கக்கும் உரையால் கலவர சூழல் உருவாகியுள்ளது.
Pravin Togadia
வி.ஹெச்.பி ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட தொகாடியா, தனது உரையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் உருவானது. பின்னர் பலரை போலீஸார் கைது செய்தனர். தொகாடியாவின் மீது 153.A பிரிவின் படி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கஸ்மிக்காக போராடுவோம்: டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன்!


புதுடெல்லி: இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது இஃப்திகார் கிலானிக்கு மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சமமான வழக்காகும் என்றும், சில தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் போலீஸ் கஸ்மியை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் தலைமையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.
Shauzab and Turab (black shirt) sons of arrested journalist Muhammad Ahmad Kazmi, consoling each other at a press conference along with other senior journalists.
Photo By: Parveen Negi
ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் யூனியன் புகார் மனுவை அளித்துள்ளது. கஸ்மிக்காக கடைசிவரை போராடுவோம் என்று பத்திரிகையாளர்கள் யூனியன் அறிவித்துள்ளது.

பேஸ்புக்கை மிரட்டும் மில்லத்பேஸ்புக்: முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில்


பாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய சமூக இணையதளத்தின் ஸ்தாபகர்கள் பேஸ்புக் இணையதளத்தில் முஸ்லிம்கள் தமது பயனர் கணக்குகளை அழிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளதுடன் இதற்குப் பதிலாக மில்லத் பேஸ்புக் இஸ்லாமிய சமூக இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் வகையில் ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் உள்ளடங்கலாக இந்த சமூக வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .

உ .பி.,யில் 63 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் !

லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்திய தேர்தலில் 63 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில் 40 பேரும், பகுஜன் சமாஜ் வாடி ( மாயாவதி) கட்சி சார்பில் 14 பேரும், தேர்வாகியிருக்கின்றனர். 

முஸ்லிம்களுக்கு 18 சத இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்ற உறுதிமொழியை அளித்த காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.,க்களாயினர். அமைதி இயக்கம் சார்பில் 3 பேரும், கவுமி ஏக்தா தள் சார்பில் 2 பேரும் , ஒரே ஒரு முஸ்லிம் மட்டும் சுயேச்சையாகவும் நின்று எம்,எல்,ஏ,.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2007 ல் - 56 ஆக இருந்தவர்கள் தற்போது 63 ஆக உயர்ந்திருக்கின்றனர். அயோத்தி பிரச்னை இருந்த நேரம் ( 1993 ) தேர்தலில் 25 பேர் மட்டுமே தேர்வாகியிருந்தனர்.


கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க - Terminal for Google

கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும்.



கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இஸ்ரேலின் ஆதிக்கம் இந்தியாவில் துவக்கம்!

அன்மையில் டில்லியிலுள்ள இஸ்ரேலின் தூதரகத்தில் குண்டு வெடித்தது. இதில் காந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக அரங்கில் நடைபெற்ற குண்டு வெடிப்பகளில் அதிநவீன தொழி நுட்பத்துடன் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்புகள் அனைத்துமே இஸ்ரேலுடைய பிண்ணனியில் நடந்துள்ளன. இதை புலன் விசாரணை செய்யும் முன்பே இந்திய பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக ஒரு சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து செய்தி வெளியிட்டன.

காவல்துறையும் இந்தியாவின் முஸ்லிம்களை, ஈரானைச் சேர்ந்தவர்கள் இதை செய்திருபார்கள் என்ற யூகத்தில், டெல்லி ஜாமியா நகரில் அதிரடி சோதனை என்ற பெயரில் 6 முஸ்லிம் இளைஞர்களை பிடித்துக் கொண்டு அவர்களை ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றனர்.

புரோக்கர் வேலை பார்க்கும் "துக்ளக் சோ"

நாடாளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் பா.ஜ.க அழுத்தமாகவும், திரும்பத்திரும்ப சொல்லக்கூடியது என்னவென்றால் தாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றோம் என்பதுதான். இந்தக்கூட்டணி இயற்க்கையானது என்றும் இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் துணை பிரதமர் செல்வி ஜெயலலிதா தான் என்றெல்லாம் உசுப்பேத்தி விடுகின்றனர். 



இச்சமயத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் மத்தியில் புரோக்கர் வேலையும் செய்து வரும் துக்ளக் சோ மட்டும் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று பெரிய ஐஸ் வைத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா செய்த ஊழல் தொடர்பான வழக்குகளை தற்போது பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தில் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஒரு ஆச்சாரியார் தான். இவரை கர்நாடக பாஜக அரசு கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமித்தது.

வியாழன், 8 மார்ச், 2012

ஷெர்ஷா சூரி: இந்திய நிர்வாகவியன் தந்தை


இந்திய நிர்வாகவியன் தந்தை:  இந்திய ரூபாயைநிலப் பட்டாவை அறிமுகம் செய்தவர்!

ஷெர்ஷா சூரி. மொகலாய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்காலத்துக்கிடையே தோன்றிய ஓர் அற்புதமான இடைச்செருகல் (INTEREGNUM). இன்றைய இந்திய நிர்வாகவியலின் தன்மைகளுக்கு இவரே முன்னோடி எனலாம்.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி

சென்னை :  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக  மது மற்றும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி சென்னை இராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவி ஆர். ஜீனத் ஆலிமா தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.


தமிழகத்தில் தற்போதையை கணக்கெடுப்பின் படி 6696 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது எனவும் 4350 பார்கள் இயங்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும்

இஸ்ரேலின் நிர்பந்தத்​தால் ஈரான் பத்திரிகையா​ளரை கைது செய்​த இந்திய அரசு!


புதுடெல்லி : இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Indian national Syed Mohammad Kazmi
டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கட்டுரைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

லெப்பைக்குடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு NWF நடத்திய மாபெரும் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு


பெரம்பலூர் :  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் மாபெரும் பெண்கள் விழுப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
110 nwf
லெப்பைக்குடிகாடு MGM கோல்டன் மஹாலில் மார்ச் 3 தேதி மாலை 3:15 மணியளவில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்

புதுடெல்லி: நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 
கடந்த 2007 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜாதியின் பெயரைக்கொண்டும் அவர்களது வாக்குகளைக்கொண்டும் ஜெயித்துவிடலாம் என்ற மாயாவதியின் கனவு தகர்க்கப்பட்டு ஜாதியையெல்லாம் புறம் தள்ளிவிட்டு மக்கள் நடுநிலையாக இருந்து வாக்களித்துள்ளார்கள்.


புதன், 7 மார்ச், 2012

வபாத் அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,
சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் மச்சானின் சகோதரர் சங்கரன்கோவில் ஊரைச் சேர்ந்த சலீம், அவ‌ர்கள் கடந்த வியாழக்கிழமை, ரியாத்திலுள்ள ஹையல் வஜாரத் என்ற ஏரியாவில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த பொழுது விபத்துக்குள்ளாகி, அகால மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிஊன்.



உ.பி தேர்தலில் 69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம்!


லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர்.
At least 69 Muslim candidates won the election
கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்களில் 2 பேர் முஸ்லிம் பெண்கள் ஆவர். இம்முறை(2012) 69 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் முஸ்லிம் பெண்களாவர்.

செவ்வாய், 6 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான ஊடகங்களின் அவதூறுப் பிரச்சாரம்: சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் கண்டனம்!


புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக ஊடகத்துறையின் ஒரு பகுதியினர் திட்டமிட்டு நடத்தி வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
popular front of india
தேசிய அளவில் பிரபலமான தலைவரான செய்யது ஸஹாபுதீன்(முன்னாள் எம்.பி), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரத்தின் தலைவர் டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஜான்.தயாள், லோக் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பவானி பா.மோகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மரணம் வரை நீதிக்காக போராடுவேன்! – ஸாகியா ஜாஃப்ரி உறுதி!


அஹ்மதாபாத் : குஜராத் இனப்படுகொலையின் போது கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தனது 73-வது வயதிலும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார். மரணம் வரை போராடுவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் உள்ளார்.
zakia jafri
வழக்கை குறித்தும், நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை குறித்தும் மாத்யமம் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் – உ.பியில் தனித்து ஆட்சி அமைக்கும் முலாயம்


டெல்லி : 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்
இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிச்சைக்காரர்களின் கால்களை கழுகி தனது தவறுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிராயசித்தம் தேடவேண்டும்


அயோத்தியா : கோயிலில் நடந்த சடங்கு ஒன்றில் தனது கால்களை பழங்குடியின பெண்களை கொண்டு கழுக வைத்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் செயலுக்கு சன்னியாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தியில் ராம் ஜன்கி கோயிலில் நடந்த சடங்கில் இந்த அவமதிப்பு சம்பவம் நடந்துள்ளது.
பழங்குடி பெண்களை இழிவுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் செயல் பெண்களை இழிவுப்படுத்துவதும், ஹிந்து கொள்கைகளுக்கு எதிரானதுமாகும் என்று அயோத்தியைச் சார்ந்த சன்னியாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்கள்!


புதுடெல்லி:சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி துணைக்குழுக்கள் உருவாக்கப்படும். சிறுபான்மையினருக்கான பல்வேறு கல்வித் திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தேசிய கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் இதனை தெரிவித்தார்.

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தஃவா பயிற்சி முகாம்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தாஃவா பயிற்சி முகாம் நடைபெற்றது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும். ஆனால் பலருக்கு இது செய்வதற்கு ஆசை இருந்தாலும் தயக்கத்தின் காரணமாக இதனை சரி வர செய்யாதிருப்பார்கள். எவ்வாறு இஸ்லாமிய அழைப்புப்பணியை மேற்கொள்ளவேண்டும் என்ற பயிற்ச்சி வகுப்பு சென்னை இராயபுரத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சில சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

திங்கள், 5 மார்ச், 2012

தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது


ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் கொஞ்சம் கொழுப்பு, புரோட்டீன் ஆகியவை   உள்ளன. உங்கள் முகம் பொலிவோடு விளங்க வேண்டுமென்றால் தினமும் ஒரு  கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்! 
நாள்தோறும் ஒரு கொய்யாப்பழம் வீதம் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால்  உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. காலையில்

மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!


வாஷிங்டன் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் தலைமையில் நரேந்திர மோடியை எதிர்த்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
'We want Gandhi's Gujarat, not Modi's Gujarat'
40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக நடந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்


புதுடெல்லி : ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சங்க்பரிவார் சிந்தனையைக் கொண்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இத்துறைகளில் நுழைவதற்காக ஆர்.எஸ்.எஸ் முயற்சி மேற்கொண்டுவருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
Digvijay concerned over RSS infiltration
குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறுவதையொட்டி டெல்லியில் அன்ஹத் அமைப்பு ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் திக்விஜய்சிங்.

பிரதமருக்கு ஜால்ரா போடும் ஆர்.எஸ்.எஸ்!


புதுடெல்லி :  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துக்களுக்கு ஜால்ரா போடும் வேலையை துவக்கியுள்ளது.
1591160
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில் எழுதியுள்ள தலையங்கத்தில், கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியதற்கு பாராட்டை தெரிவித்துள்ளது.

லிபியாவில் இஃவான்களின் அரசியல் கட்சி உதயம்!


திரிபோலி : 60 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) அரசியல் கட்சி உதயமாகியுள்ளது. ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி என்று பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் நோக்கம் நாட்டின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் முஹம்மது அய்ர் தெரிவித்துள்ளார்.
Muslim Brotherhood forms political party in Libya
கட்சி பிரகடனத்திற்காக திரிபோலியில் நடந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1400க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். 18 நகரங்களில் கட்சி செயல்படுவதாக அய்ர் கூறினார்.

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்."ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"ஈரானியப் புரட்சி இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் போதியளவு பயிற்றுவிக்கப்படாத படையணிகளும், போதிய இராணுவத் தளபாடங்களும் அற்ற நிலையிலும் அந்த நாடு, நன்கு தேர்ச்சிபெற்ற, ஆயுத பலம் மிகுந்த ஈராக்கியப் படைகளை வெற்றிகரமாய் எதிர்கொண்டுள்ளது. இத்தனைக்கும் ஈராக் படைகளுக்கு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் பரிபூரண ஒத்துழைப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது" என அவர் சுட்டிக்காட்டினார்.