நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 21 ஜூலை, 2012

பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!


முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.
பர்மா முஸ்லிம் இனப்படுகொலை-- முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!
முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை: உலகின் மெளனம் குறித்து எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்!

மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டாக கொலைச் செய்யப்படுவதை பார்த்துக்கொண்டு மெளனம் சாதிக்கும் சர்வதேச சமூகத்தின் செயல்பாடு குறித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.

நாகரீக உலக சமூகங்களை கொண்ட சர்வதேச நாடுகள் குறைந்த பட்சம் இந்த படுகொலைகளை குறித்து கவலையாவது கொள்ளுமாறும், துன்புறுத்தப்படும் சமூகத்தினருக்கு அமைதி கிடைக்கும் விதமாக இப்பிரச்சனையில் தீவிரமாக தலையிடுமாறும் சர்வதேச நாடுகளை எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.


சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்,SDPI கட்சியின் 200 தொண்டர்களுக்கும் மேற்பட்டோர் கைது


தமிழக மீனவர் சேகர் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலை சைய்த அமெரிக்க  கப்பல் படையை கண்டித்தும்,இந்திய சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய 
முதலீடு தேவை என்று கருத்து கூறிய அமெரிக்க ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் SDPI கட்சியின் அமெரிக்க தூதரகம்  முற்றுகை போராட்டம் இன்று(19:07:2012)காலை 11 மணி அளவில் அமெரிக்க தூதரகம் முன்பு  முற்றுகை போராட்டம்  தொடங்கியது, இதில் SDPI  மாநில செயலாளர் சையது அலி அவர்கள் தலைமை தங்கினார்கள்,


செவ்வாய், 17 ஜூலை, 2012

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஒற்றுமையான போராட்டத்தால் திணறிய பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை 
அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது. 

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட போவதாக SDPI அறிவிப்பு

துபாயில் அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.



ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்ககப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.
பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மீன் பிடித்தலுக்கு உபயோகிக்கும் 9 மீட்டர் அகலம் கொண்ட 3 எஞ்சின்களை உடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

முர்ஸியின் முன்மாதிரியை முஸ்லிம் உம்மத் பின்பற்ற வேண்டும்: எர்துகான் அறிவுரை!


இஸ்தான்புல்: எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முஹம்மது முர்ஸி மகத்தான முன்மாதிரியாக திகழ்கிறார் என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் புகழாரம் சூட்டியுள்ளார்.

முஸ்லிம் உம்மத்தில்(சமூகம்) இளைஞர்கள் முர்ஸியை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும். சோசியல் நெட்வர்க் தளமான ஃபேஸ்புக்கில் எர்துகான் தனது கருத்தை பதிவுச்செய்துள்ளார்.

திங்கள், 16 ஜூலை, 2012

பிரிகேடியர் உஸ்மான் – இந்தியாவின் சின்னம் – ஹாமித் அன்ஸாரி!

புதுடெல்லி: 1947-48 காலக்கட்டத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வீரத்துடன் செயல்பட்டு உயிர் நீத்த பிரிகேடியர் உஸ்மான் இந்தியாவின் சின்னம் என துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி கூறியுள்ளார்.
Brigadier Mohammad Usman
பிரிகேடியர் முஹம்மது உஸ்மானின் 100-வது பிறந்த நாள் விழா டெல்லியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி உரையாற்றினார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு! – ஆங் சாங் சூகியின் குற்றகரமான மெளனம்!


டெஹ்ரான்: மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை முற்றிலும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் பெளத்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ள வேளையில் ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தி பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்றுள்ள ஆங் சாங் சூகி இச்சம்பவம் குறித்து குற்றகரமான மெளனம் சாதித்து வருகிறார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு!
ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி பங்காஷ் ப்ரஸ் டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் ஆங் சாங் சூகியின் மெளனம் குற்றகரமானது என குற்றம் சாட்டுகிறார்.