நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 5 ஜூலை, 2013

எகிப்தில் 60 வருடம் உள்ள பிரச்சினையை எப்படி 1 வருடத்தில் தெற்க்க முடியும்-யூசுஃப் அல் கர்ளாவி




ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான  ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது...


மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936) 

மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952)

ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)

அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981)

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)



என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முரோதிகள்..! ன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம வி



முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது. ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது..! 

குர்ஆனின் மீது பதவி பிரமாணம் எடுத்த ஆஸ்திரேலிய அமைச்சர்


ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தன்னுடைய பதவி பிரமாணத்தை குர்ஆனின் மீது எடுத்துள்ள இவரது பெயர் எட் ஹுசிக் என்பதாகும். ஆஸ்திரேலிய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவரது செயல். பைபிள் மீது பதவி பிரமாணம் எடுக்காமல் குர்ஆன் மீது எடுத்து, ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தை எட் குலைத்து விட்டதாக சமூக தளங்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.

அதே நேரம், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் எட்-டின் செயலை வரவேற்றுள்ளனர். ஆஸ்திரேலியா, மத நம்பிக்கைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதாகவும், தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவரவர் விருப்பம் என்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.

புத்த தீவிரவாதம்:டைம் பத்திரிகைக்கு இலங்கையில் தடை ஏன்?

புத்த தீவிரவாதம் குறித்து டைம் பத்திரிக்கையில் வந்த செய்தி 

மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சாட்டி டைம்' பத்திரிகையின் விற்பனையை தடை செய்த இலங்கை அரசு, அப்பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்துள்ளது.மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான கலவரம் குறித்த செய்தியை "டைம்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்பத்திரிகையின் ஜூலை 1-ம் தேதி பதிப்பில் புத்த தீவிரவாதம் குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.


விமானத்தில் வந்த அப்பத்திரிகையின் 4,000 பிரதிகளை கொழும்பு சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அக்கட்டுரை இருப்பதால், "டைம்' பத்திரிகையின் பிரதிகளை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை செய்தித் தொடர்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனை என்ற அமைப்பு பல்வேறு இனவெறி கொண்ட போராட்டங்களை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 26 உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு NCHRO நடத்திய கலந்தாய்வுக் கூட்டம்


 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி உலக சித்திரவதை எதிர்ப்பு தினமாக ஐ.நா. சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. மேற்படி சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) இன்று 29.06.2013 சென்னை பெரியமேட்டில் உள்ள ஹோட்டல் பனாரில் காலை 11.00 மணி முதல் 1.30 வரை “காவல்துறையின் சித்திரவதைககள், என்கவுண்டடர்கள் மற்றும் பொய் வழக்குககள் ” என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கலந்தாய்வுக் கூட்டடத்திற்கு NCHROவின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர். ஏ. முஹம்மது யூசுப் தலைமை தாங்கினார்.. வழக்கறிஞர் ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்., இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சத்தியசந்திரண், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்PUCLசெயலாளர் நெல்லை முபாரக், த.மு.மு.க. செயலாளர் பேராசிரியர். ஹாஜா கனி கக்இஃ அமைப்பின் செயல்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர் T.S.S.மணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ரூதீன், பத்திரிகையாளர் ஆளுர் ஷாநவாஸ், கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ.ன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கோபிநாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன், NCHROவின் மக்கள் தொடர்பு அலுவலர் வழக்கறிஞர் ஏ.சையது அப்துல் காதர், வழக்கறிஞர்கள் ஏ. முஹம்மது ஷாபி, (மதுரை), முஹம்மது நவ்ஃபல் (கோவை), சதாத் (சென்னை), முஹைதீன் அப்துல் காதர் (சென்னை), முஹம்மது பைசல் (திருவாரூர்) மற்றும் பல உயர்நீதிமன்ற வழக்கறிõகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள்.

புதன், 3 ஜூலை, 2013

புதுடெல்லியில் மரணத்தண்டனைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா!



மரணத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சித்தரவதைக்கு ஆளானோருக்கு சர்வதேச ஆதரவு தினமான ஜூன் 26 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தர்ணா போராட்டம் நடத்தியது.தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் பேசுகையில், ’பல வளர்ச்சியடைந்த நாடுகளும் மரணத்தண்டனையை ரத்துச் செய்துள்ளன.இந்தியாவில் மரணத் தண்டனையின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.ஆதாரங்கள் இல்லாதபோதும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அப்ஸல் குருவுக்கு மரணத் தண்டனை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. ஒருபுறம் அரசுகள் தங்களது குடிமக்களுக்கு மரணத் தண்டனை விதிக்கும்போது, மறுபுறம் சிறைகளிலும், காவல் நிலையங்களிலும் சாதாரணமக்கள் கொல்லப்படுகின்றார்கள். மரணத் தண்டனைக்கு எதிராக போராடும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவளிக்கும்’ என்று தெரிவித்தார்.

அப்ஸல் குரு உள்ப்பட இன்னும் பலருக்கு மரண தண்டனை தவறாக கொடுக்கப்பட்டுவருகிறது : மீனா கந்தசாமி


சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் மீண்டும் வரும்போது ஒரு ‘சித்திரவதை கட்டமைப்பு’ என்ற நிலையில் ஆட்சி பீடங்களைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைகின்றன.திட்டமிட்ட ஆட்சியாளர்களின் மொழியின் அடித்தளத்தில் தான் உலகமெங்கும் அரசு ரீதியான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன.பொதுவாக ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை கற்பனையில் உருவாக்குவார்கள்.அதற்கு எதிரான கொள்கைகளை உருவாக்குவார்கள்.கற்பனை எதிரிக்கு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வரலாற்றை வளைப்பார்கள்.அந்த மர்ம உலகில் மனிதர்களையும், மதங்களையும், சித்தாந்தங்களையும் சாத்தானிய சக்தியாக சித்தரிப்பார்கள்.அறிவுக்கு முற்றிலும் பொருந்தாத அந்த உலகில் அசாத்தியங்கள் எல்லாம் சாத்தியமாகும்.சித்திரவதைகளுக்கு கிடைக்கும் சமூக மனசாட்சியின் ஆதரவு, அந்த சித்திரவதைக் கட்டமைப்பைக் குறித்து கேள்வி கேட்க முடியாமல் தாங்கி நிற்கிறது.நமது தேசமும் அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது அல்ல.சமகால சம்பவங்களின் பின்னணியில் சித்திரவதைகள் அதன் சித்தாந்த அடித்தளங்கள் குறித்து பேசுகிறார் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மீனா கந்தசாமி.

சென்னையில் நடைபெற்ற TNDFT - ன் 20 வது ஆண்டு விழா

சென்னையில் நடைபெற்ற TNDFT - ன் 20 வது ஆண்டு விழா


சென்னை: ஃபவுண்டெசன் டிரஸ்ட் (TNDFT) - ன் 20 வது ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து 30.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.படைத்த இறைவனின் கட்டளைப்படி, அவனது மார்க்கத்தை பிற சமூகத்தவர்களுக்கு எத்தி வைக்கும் அழைப்புப் பணியை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டிமுதல் பட்டணம் வரை செய்தும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை போதிக்கக்கூடிய அறிவகம் எனும் கலாச்சாலையை நடத்தியும் ஆதரவற்ற மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் கைவிடப்பட்ட பெண்களுக்காக பெண்கள் காப்பகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டெசன் டிரஸ்ட் (TNDFT) - ன் 20 வது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி அதன் ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து 30.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.

உத்தரகண்ட் நிவாரண நிதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ரூபாய் 10 லட்சம் உதவி



உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர்.மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உத்தரகண்ட் மாநில முதல்வரை தேசிய தலைவர் கே.எம்.செரீஃப் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கினார.


மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.உடன் டெல்லி மாநில தலைவர் அன்சாருல் ஹக் ,மாநில நிர்வாகிகள் ஜபருல்லாஹ் கான்.முஹம்மத் சபீர்,நசுருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

ஞாயிறு, 30 ஜூன், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கல்வி உதவித் தொகைக்கான வழிகாட்டி முகாம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்கள் பூர்த்தி செய்தல் மற்றும் வழிகாட்டி முகாம்.

1ஆம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்க்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் மற்றும் அதற்க்கான வழிகாட்டுதல் முகாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக 30-06-2013 ஞாயிறு அன்று தென்காசி காட்டு பாவா உயர் நிலை பள்ளியில் வைத்து நடந்த்து.