நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 27 ஆகஸ்ட், 2011

சஞ்சீவ் பட் சி.பி.ஐயிடம் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினை நிரூபிக்கும்விதமாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ததை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ்பட் சி.பி.ஐயிடம் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை அளித்துள்ளார்.

சூடான் – ஏகாதிபத்தியங்களின் புதிய வேட்டைக்காடு!


ஆப்ரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் நிலப்பரப்பைக் கொண்ட, பலநு£று மாறுபட்ட பழங்குடி இன மக்களைக் கொண்ட, பாரம்பர்யமும் பண்பாடும் நிறைந்த இஸ்லாமிய நாடுதான் சூடான். நைல் நதியும் – சஹாரா பாலைவனமும் சூடான் நாட்டின் மரபு மீறிய அருட்கொடைகள்.
வரலாறு முழுவதும் நிலப்பரப்பால் பரந்து விரிந்து வியாபித்து இருந்த சூடான் நாட்டை கடந்த ஜுலை மாதம் 9-2011 அன்று சூழ்ச்சியும் வஞ்சகமும் ஒரு சேரக் கூடி இரண்டு கூறுகளாகப் பிளக்கப்பட்டு இருசாரரும் மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள். என்ன நடந்தது? வரலாற்றோடு இதன் பின்னணியை அலசுவோம்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பூமியின் எந்தப் பகுதியிலும் எந்த நாடும் அகண்ட நிலப்பரப்புகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது, குறிப்பாக அரபு – இஸ்லாமிய நாடுகள் சிறிய சிறிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டால் மட்டும் தான் “நாம் நிம்மதியாக அவர்களின் வளங்களைச் சுரண்டிக் கொட்டமடிக்க முடியும்” என்ற திட்டத்தின் அடிப்படையில் பிரிட்டனும் அமெரிக்காவும் இஸ்ரேலோடு சேர்ந்து செய்த சூழ்ச்சியின் விளைவு தான் இன்றைய பிளந்துபோன சூடான். இந்த ஏகாதிபத்திய சதிகாரக் கூட்டம் 1990 லிருந்து இன்று வரை பல்வேறு நாடுகளின் நிலப்பகுதிகளைக் குதறி எடுத்து 30 புதிய நாடுகளை உருவாக்கியுள்ளனர்.

2030ல் தமிழக முஸ்லிம்கள்…! “கல்வித்துறை – பெண்களுக்கு”


நமது பெண் சமுதாயத்தை இந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் ஆண் சமுதாயத்திற்கு, குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு இருக்கிறது.
மனித இனத்தைப் படைத்த இறைவன் ஆண்/பெண் இருபாலரையும் சமநீதியுடன் சரிசமமாகத் தான் படைத்துள்ளான். ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்திப் படைப்பவன் அல்ல இறைவன். “அல்லாஹ் நீதி செலுத்துபவன்” என்பதை அல்குர் ஆனில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறான். ஆனால் இந்த பூமியில் மனித இனம் படைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஆண் / பெண் இருபாலருக்கும் வேறுபட்ட செயல்திட்டங்களை நிறைவேற்றச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். முதலில் ஆணைப் படைத்து பிறகு ஆணிலிருந்து பெண்ணைப் படைத்து இந்த இருவருக்குமான செயல்திட்டத்தைக் கொடுத்து அந்தச் செயல் திட்டத்திற்கு ஏற்ப அவர்களின் உடற் கூறுகளையும் உள்ளங்களையும் படைத்துள்ளான்.

அன்னா ஹஸாரே குழுவில் பிளவு

புதுடெல்லி : ஜனலோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் வேளையில் அன்னா ஹஸாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அன்னா ஹஸாரேவின் உடனிருப்பவர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்வதாக சுட்டிக்காட்டி ஹஸாரே குழுவில் முக்கிய நபரும், கர்நாடாக லோகாயுக்தாவின் முன்னாள் தலைவருமான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் ஹஸாரேவை தவறாக புரியவைக்கின்றனர் என சுட்டிக்காட்டி இன்னொரு நபரான சுவாமி அக்னிவேஷும் கூறியுள்ளார்.

ஹஸாரே:ஊடகங்களின் இரட்டை வேடம்-அருணாச்சல் பிரதேச மாணவர் யூனியன் கண்டனம்

ஹஸாரேவின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்யும் தேசிய ஊடகங்கள் இரட்டை கொள்கையை பின்பற்றுவதாக ஆல் அருணாச்சல பிரதேஷ் ஸ்டுடண்ட்ஸ் யூனியன் (எ.எ.பி.எஸ்.யு) குற்றம் சாட்டியுள்ளது.

ராஜீவ் படுகொலை:மூன்று பேரின் மரணத்தண்டனை அடுத்தமாதம் ஒன்பதாம் தேதி

புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார் போலீஸிற்கு உதவிய சி.ஐ.ஏ

வாஷிங்டன்:அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார்க் போலீசுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா

மக்கா:பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.

சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே நம்பிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் மனு

புதுடெல்லி: சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதித்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.


சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி


  சென்னை:  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை பெரியமேட்டில் உள்ள ஹோட்டல் மெட்ரோ மனாரில் வைத்து மாலை 5.00 மணி அளவில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாநில நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கத்தின் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர். இஃப்தார் நிகழ்ச்சி மட்டுமல்லாது சமூக பிரச்சனைகளைப்பற்றிய கலந்தாலாய்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


புதன், 24 ஆகஸ்ட், 2011

ஹஸாரேவுக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு – மணிப்பூருக்கு வருகை தர கோரிக்கை





குவஹாத்தி : சிறப்பு ஆயுத சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் இரோம் ஷர்மிளா அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மணிப்பூரின் இரும்பு பெண்மணியான ஷர்மிளா தனது ஆதரவை தெரியப்படுத்தியுள்ளார்.


ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு



புதுடெல்லி : அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.

ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு



புதுடில்லி : இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பழம்பெரும் பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டது. இதுத்தொடர்பான வழக்குகள் உ.பி மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுத்தொடர்பாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.


பாப்புலர் ஃப்ரண்டின் புதிய மாநில பொதுச்செயலாளர் பத்திரிக்கை செய்தி






பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் நேற்றும் (23.08.2011) அன்று மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக‌ தேசிய துணைத்தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள்

01. மாநில பொதுச்செயலாளராக இருந்த நிஜாம் முஹைதீன் அவர்கள் தனது சொந்த வேலைப்பளுவின் காரணமாக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு கேட்டு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலித்து செயற்குழு அவருக்கு விடுவிப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து காலியாக இருந்த மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு தேசிய துணைத்தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேர்தல் நடத்தினார். இந்த தேர்தலில் புதிய மாநில பொதுச்செயலாளராக ஏ. காலித் முஹம்மது (மதுரை) அவர்கள் செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

02. மக்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில். வருகின்ற செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள், இரத்தப் பிரிவு கண்டறிதல், மற்றும் இரத்ததான முகாம்கள் ஆகியவற்றை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

03. முஸ்லிம்கள் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேலப்பாளையத்தில் நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த காவல்துறை மற்றும் தமிழக அரசை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அது மட்டுமல்லாது சுதந்திர தினத்தன்றும் அதற்கு முந்தைய தினமும் மேலப்பாளையம், கடையநல்லூர், களக்காடு ஏர்வாடி போன்ற பகுதிகளில் முஸ்லிம்களை பீதிவயப்படுத்தும் விதமாகவும், சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் ஊரைச் சுற்றி காவல்படை குவித்து, காவல்தடுப்புகளை ஏற்படுத்தி முஸ்லிம்களை மனரீதியாக அச்சுறுத்தி, பல்வேறு அத்துமீறல்களை நிகழ்த்திய காவல்துறையின் இந்த மனித உரிமை மீறலை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

வரும் காலங்களில் இதுபோன்ற சிறுபான்மை விரோதப்போக்கு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், நியாயமான உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் கேடயமாக விளங்க வேண்டும் என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கின்றது. மேலும் சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்ததை எதிர்த்தும் அதனையொட்டி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அத்துமீறல்களுக்கு  நியாயம் கேட்டும் நீதிமன்றத்திற்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

 இதற்கு முந்தைய காலங்களில் அதிமுக அரசின் ஆட்சிகாலத்தின் போதும், கடந்த காலங்களில் தமிழக அரசு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையொட்டி 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்தது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதான் அவர்கள் இந்த வருடமும் 7 ஆண்டுகள் கழிந்த முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து சமூக சிறைவாசிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டுமென இச்செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

 12ம் வகுப்பில் 75% மதிப்பெண் பெற்றும் உயர் கல்வி பயில வசதியில்லாமல் இருக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு வட்டியில்லா கடன் என்ற அடிப்படையில் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலிருந்து பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத் துறையில் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த தொகையை விநியோகிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

 புனித ரமலானையொட்டி முஸ்லிம்கள் நோன்பிருந்து வருகின்றனர். அந்த நோன்பில் ஏற்படும் குறைகளுக்கான பரிகாரமாக ரமாலான் மாத இறுதியில் முஸ்லிம்கள் கொடுக்க வேண்டிய கடமையான "சதக்கத்துல் ஃபித்ரு" என்ற ஃபித்ரா தொகையை வசூல் செய்து, அவற்றை முறையாக அந்தந்த பகுதிகளில் ஏழைகளுக்கு விநியோகித்து, அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பெருநாளை பசியின்றி மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்வது என இச்செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

 இப்படிக்கு


 மக்கள் தொடர்பு அலுவலர்
 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
 தமிழ்நாடு

பெண்களே! சிந்தியுங்கள்!

பெண்களே! சிந்தியுங்கள்!

(ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள்,  
 

தாக்குதலில் காயமடைந்த யெமன் நாட்டு சபாநாயகர் மரணம்


தாக்குதலில் காயமடைந்த யெமன் நாட்டு சபாநாயகர் மரணம்

ரியாத் : யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் மாளிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அப்துல் அஸீஸ் அப்துல் கனி மரணமடைந்துள்ளார்.

ரியாத் மருத்துவமனையில் அவர் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பழங்குடியின போராளிகள் நடத்திய தாக்குதலில் ஸாலிஹ் உள்பட பலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!

அல்லாஹ் கூறுகிறான்: -
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)
மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.

லோக்பால் என்றால் என்ன? இதை சட்டமாக்கினால் என்ன பயன் ? இதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

லோக்பால் என்றால் என்ன? இதை சட்டமாக்கினால் என்ன பயன் ?
இதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

அன்னா ஹஸாரேவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்


புதுடெல்லி : அருந்ததி ராய்,அருணாராய் ஆகியோரைத் தொடர்ந்து ஜனலோக்பால் மசோதாவிற்கான ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
        ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆட்களை தேர்வு செய்வது சங்க்பரிவாரம் என்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் நிதியுதவி அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின கொண்டாடத்திற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்களை எதிர்த்து வழக்கு தொடரவேண்டும்!

கொச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடத்தவிருந்த சுதந்திர தின கொண்டாடத்திற்கான் நிக்ழ்ச்சிகளுக்கு தடை விதித்த நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மீதும் வழக்கு தொடரப்படவேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் குமார் அவர்கள் தெர்வித்துள்ளார்.


திருச்சி அரியமங்கலத்தில் நடந்த NWF இப்தார் நிகழ்ச்சி.

திருச்சி :  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக பெண்களுக்கு திருச்சி அறியமங்களத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில நிர்வாகியான சகோதரி ஃபாத்திமா அவர்கள் ரமழான் மாதத்தின் சிறப்புளைப் பற்றி உரையாற்றினார். நூற்றூக்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


சகோதரி பாத்திமா சிறப்புரையாற்றினார் .




              இதில் சுமார் 230 மேற்பட்ட   பெண்கள் கலந்து கொண்டனர் .

இதில் கலந்து கொண்ட பெண்களின் ஒரு பகுதி 



பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்





இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்,  நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தென்சென்னை எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி



சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி  106  - வது வட்டமும்   சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி  82 வது வட்டமும் இணைந்து நடத்திய  இப்தார் விருந்து 21 .08 .2011 ஞாயிறு பின்னேரம்  புதுப்பேட்டை முதல் தெரு தமிழர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்தார் என்னும் நோன்பு திறப்புடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடந்த கூட்டத்தில் எழும்பூர் தொகுதி தலைவர் அஹமது அலி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை வரவேற்புரையற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் ஜூனைத் அன்சாரி அவர்கள் நோன்பின் மாண்புகள் குறித்தும், நோன்பின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்தும், அதனை முழுமையாக பயன்படுத்துவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.


கஷ்மீர்:38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள்

ஸ்ரீநகர் : ஜம்மு கஷ்மீரில் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை அடக்கம் செய்ததாக மாநில மனித உரிமை கமிஷனின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மூன்று வருடங்களாக நடத்திய நீண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சியடையும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உ பி யில் R.S.S சாகாக்களின் எண்ணிக்கை குறைவால் R.S.S கவலை

லக்னோ ஆகஸ்ட் 15 : உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ச்சியாக R .S .S . சாகக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுடன் சாகா பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இணை சர் சஞ்சாலக் பையாஜி ஜோஷி லக்னோவில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரையில் முகாமிட்டு சாகாக்கள் எண்ணிக்கையின் குறைவு பற்றியும் போது மக்களின் ஆர்வமின்மை பற்றியும் தகவல் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஸாரேவின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது: அருணாராய்



புதுடெல்லி : தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி








சென்னை : விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் 21.08.2011 அன்று நோன்பு திறக்க்கு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு


அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு Cricket Scores SL V AusEng V Ind 5th ODI , R Premadasa Stadium, Colombo Sri Lanka won by 4 wickets Live Scorecard

டெல்லி : டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...

தன் மூலம் சகலமானவருக்கும் நான் முன்னரே அறிவித்துக்கொள்வது என்னவென்றால்... 

நான் ஊழலை எதிர்க்கிறேன்.
ஊழல் செய்வோரை எதிர்க்கிறேன்.
ஊழலுக்கு துணைபோவோரையும் எதிர்க்கிறேன்.


நான் ஜனநாயகத்தை ஆதரிக்கிறேன்.
ஜனநாயகத்தை காக்க பாடுபடுவோரை ஆதரிக்கிறேன்.
இவர்களுக்கு துணைநிற்போரையும் ஆதரிக்கிறேன்.


அப்புறம்... அரசு கொண்டுவரும், ("ஊழல் செய்வோருக்கு ஆதரவான..?!?") லோக்பால் வரைவு மசோதாவை எதிர்க்கிறேன்.


       காரணம்... "இந்த சட்டத்தின் விசாரணை வரம்பிற்குள் ஜனாதிபதி வரமாட்டார்... பிரதமர் வரமாட்டார்... நீதிபதிகள் வரமாட்டார்கள்... எம்பிக்கள் கூட லோக்சபா சபாநாயகர் பெரியமனது வைத்து விசாரணைக்கு அனுமதித்தால் மட்டும்தான் உண்டு... அரசு அதிகாரிகளில் கூட அனைவரும் அல்லாமல் குறிப்பிட்ட பிரிவினர்தான் இந்த மசோதாவின் விசாரணை எல்லைக்குள் வரமுடியும்"... என்பதெல்லாம் அப்புறம்தான்..! இதெல்லாம் முக்கியமல்ல 'நமக்கு'..! அப்புறம் எதுதான் ரொம்ப முக்கியம் உனக்கு என்கிறீர்களா சகோ..?


காவல்துறையை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் நடை பெற்ற ஆர்பாட்டத்தை பற்றி செய்திதாள்களில் வந்த செய்திகள்



வினவுக்கு ஒரு வினா!

 வினவு இணையதளத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களா நீங்கள்? இதோ வினவின் வேடம் களைகிறது.
         நாம் ஏற்கனவே கூறியது போல நடுநிலையான செய்தியாளராக தன்னை காட்டிக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தினையும் அதன் சட்டதிட்டங்களையும் சரியாக புரிந்து கொள்ளாமல் செய்திகள் வெளியிடுவதில் தற்போது வினவு இணையதளம் முன்னேறி வருகிறது.          ஹிஜாப் என்னும் ஃபர்தாவை பிரான்சு அரசு தடை செய்துவிட்டு பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறதாம். ஆனால் வங்காள தேசத்தில் பெண்களை அடிமைப்படுத்துகிறார்களாம்.


ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்


புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.
ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் காவலர் அப்துல்காதர் – தற்போது பலிகடாவான சிறைவாசி..


ஹைதராபாத் ஆகஸ்ட் 20 : பதினான்கு வருட ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் காவலர் அப்துல் காதர் 21 வருடங்களுக்கு மேல் ஆகியும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார். இவர் கடந்த 1990 ஆம் வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையான 14 வருடம் முடிந்த நிலையிலும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியபிரதேசமாநிலத்தில்சங்க்பரிவாரஅமைப்புகளின் 3 நாள்கூட்டம் : முக்கியமுடிவுகள்

புதுடெல்லி :
அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத் மற்றும் பா.ஜ.க, ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

சுவாமிநிகமானந்தாவின்மரணம்: டாக்டர்மீதுவழக்கு

ஹரித்துவார் : கங்கை நதியின் கரையில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சுவாமி நிகமானந்தா மரணித்த வழக்கில் டாக்டர் மற்றும் குவாரி உரிமையாளர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது.


ஹஸாரேபோராட்டத்திற்குவெளிநாட்டுநிதி : அமைப்பாளர்களாகசங்க்பரிவாரம்.


புதுடெல்லி : அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.