நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

முஸ்லிம்கள் சுதந்திர தினம் கொண்டாட தமிழக காவல்துறை தடை - டி.ஜி.பி அலுவலகம் முற்றுகை!


முஸ்லிம்கள் சுதந்திர தினம் கொண்டாட தமிழக காவல்துறை தடை விதித்ததை கண்டித்து நாளை 17.8.2013 அன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக முற்றுகை போராட்டமும் மற்றும் அனைத்து மாவட்டம் தோரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவுசெய்துள்ளது.இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “


67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கடந்த 2 வருடங்களாக முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடைவிதித்து சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதை தடை செய்ததும், இவ்வருடம் சுதந்திர தின பொதுக்கூட்டம் கூட நடத்துவதற்கு தடை விதித்திருப்பதும் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி

  நமது தேசத்தின் 67 வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் கடையநல்லூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மொளலவி செய்யது இப்ராஹிம் உஸ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  கடையநல்லூர் நகர தலைவர்  காதிர் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேசிய கொடியை மாவட்ட தலைவர் ஏற்றிவைத்தார். மாவட்ட செயலாளர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் உறுதிமொழி கூற திரளாக கலந்து கொண்ட் அனைவரும்
அவ் உறுதிமொழி ஏற்றனர்.
                   கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு  மாவட்ட தலைவர் தலைமையில் நகர உலாவந்து அனைத்து குடிமக்களுக்கும்
தேசிய கொடி ஸ்டிக்கர் மற்றும் இனிப்பு விநியோகிக்கப்பட்டது. இக்கொடியேற்ற மற்றும் நகர உலா (இந்) நிகழ்ச்சியில் எஸ். டி. பி. ஐ. இன் மாவட்ட தலைவர் ஜாஃபர் அலி உஸ்மானி, மாவட்ட துணைத்தலைவர் யாசர்கான், பொதுச்செயலாளர் ஹுசைன், மாவட்ட செயலாளர் ஹக்கீம், மாவட்ட பொருளாளரும் 29 வார்டு நகர்மன்ற உருப்பினருமான நைனாமுஹம்மது என்ற கனி நகர தலைவர் அபூலைஸ், நகர பொருளாளர்
பாதுஷா, மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயலாளர்
முஹம்மது கனி மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
               
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரங்கோவில், சுரண்டை ஆகிய இடங்களிலும் நகரநிர்வாகிகள் தலைமையில் கொடியேற்றம் மற்றும் இனிப்பு
வழங்கும்  நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.









செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்


உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில. 
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் - வடக்கே பகதூர்~h, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.

இவர்களை பற்றி எழுதுவதென்பது, இந்தக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் நாட்டில், அதுவும் திருநெல்வேலி மாவட்டத்து சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான். 



விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்


திருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர் திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மேலப்பாளையத்தில் காவல்துறையின் அராஜகப்போக்கிற்கு எதிராக அணிதிரண்ட மக்கள் வெள்ளம்!

நெல்லை : முஸ்லிம்களை குறி வைக்கும் காவல்துறையின் அராஜகப்போக்கைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக  நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தையில் வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம்  இன்று (12.8.2013) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் அஹமது நவவி தலைமை தாங்கினார்.

இதில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான், மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, மாவட்ட துணை தலைவர் K.S.ஷாகுல் ஹமீது உஸ்மானி, CPI (ML) மாநில குழு உறுப்பினர் ரமேஷ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் தென்மண்டல இளைஞரணி செயலாளர் களந்தை A.K.நெல்லை, இனப்படுகொலைக்கு எதிராக தமிழர் கூட்டமைப்பி தோழர் பீட்டர், ஆதித்தமிழர் பேரவை தோழர் கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் MC கார்த்திக், INTJ மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.