நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 3 ஆகஸ்ட், 2013

தொடரும் படுகொலைகள் யார் குற்றவாளி? பாப்புலர் ஃப்ரண்ட் நோட்டிஸ் பிரச்சாரம்

பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு வருகிறது.

இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.

அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார்.

மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் அப்பாவிகள்:NCHROவின் உண்மை கண்டறியும் குழு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று வீட்டில் வெடி குண்டு வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தி மேலும் சேலம் பி.ஜே.பி பொது செயலாளர் ஆடி ட்டர் ரமேஷ் வழக்கிலும் பொய்யாக குற்றம் சுமத்தி அப்பாவி முஸ்லிம்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளது தமிழக காவல் துற . இது குறித்து NCHRO வின் உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரித்தனர்.

கட்டபஞ்சாயத்துகளால் கொல்லப்பட்டவர்களை பி.ஜெ.பி அரசியல் கொலையாக மாற்ற முயற்சி செய்வது ஏன் ?

பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு வருகிறது.

இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.

அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார்.

ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!

கடந்த, சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர். ரமேஷ் சேலத்தில் சில மர்ம நபர்களால், அவரது அலுவலக வளாகத்திலேய சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை, முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து பத்திரிகைகளும், ஊடகங்கலும் செய்தி வெளியிடுவது சமுகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு இழுக்காகும்.

யார் இதற்க்கு கரணம்?

ஆடிட்டர் ரமேஷ் 19இம் தேதி இரவு மர்ம நபர்களால் கொல்லபட்டபோது, அவரது அலுவலகத்தில் வாட்ச் மேனகா வேலை பார்த்த ஜெயராமன் என்பவர் மட்டும் தான் சம்பவ இடத்தில இருந்தார். வேறு எந்த தடயங்களும், கொலை சமந்தமான அதரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் , இதை சிறிதும் ஆராயமல் பா.ஜ.க. தலைவர்களும், ஹிந்துத்துவ தலைவர்களும் முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதையும், நமது பத்திரிகைகளும், ஊடங்கங்களும் வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒரு விசயமாகும்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்!

சென்னை: வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. சங்கை மிகு இப்புனித ரமலான் மாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 31.7.2013 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில துணை தலைவர் S.M.ரஃபீக் அஹமது, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மாநில தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் அஹமது முனிர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.