நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 1 அக்டோபர், 2011

சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!


SDPI மேயர் வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க முயன்றதால் 
  சென்னை  மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!
போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது

 
    விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின்  கூட்டணியின் சார்பாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( SDPI )வின் S.அமீர் அவர்கள் மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சங்கரன்கோவில் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 17வது வார்டின் சார்பாக போட்டி


உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17,19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.  

17-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள பதவிகளுக்கு ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.

2-வது கட்டமாக 19-ந் தேதி நடக்கும் தேர்தலில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்து பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 


இஸ்லாமிய இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியின் சென்னை, ஈரோடு மேயர் வேட்பாளர்களாக SDPI வேட்புமனு தாக்கல்

select 3
சென்னை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI,  விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ

அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவியா?

anna
மும்பை : அன்னா ஹசாரேக்கு ஜனாதிபதி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. அந்த பதவிக்கு ஆளும் கூட்டணியின் வேட்பாளராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அன்னாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் புனேயில் இருந்து வெளியாகும் மராத்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகா:பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி

sdpi won karnataaka pavur
மங்களூர் : கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதி பாவூர் கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி பெற்றது. SDPI வேட்பாளர் ஜனாப் நாசிர் 150 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
நாசிருக்கு 536 வாக்குகள் கிடைத்தபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரால்  386 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

கடையநல்லூர் ஊராட்சி வார்டுகளுக்கு 336 பேர் மனு தாக்கல்




கடையநல்லூர் :   கடையநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட 16 ஊராட்சிகளிலுள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு புதன்கிழமை வரை 336 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி-2 பேர், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி-29 பேர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி-63 பேர், வார்டு உறுப்பினர் பதவி-336 பேர்.
கடையநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் 5 பேர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர்: திமுக உள்பட 4 பேர் மனு தாக்கல்


கடையநல்லூர் :  கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் சைபுன்னிஷா புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். புதன்கிழமை வரை தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சைபுன்னிஷா புதன்கிழமை தேர்தல் அதிகாரியான அப்துல் லத்தீப்பிடம் மனு தாக்கல் செய்தார். முன்னதாக கடையநல்லூர் தொலைபேசி நிலையத்திலிருந்து திமுகவினர் ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தனர். வேட்பாளருடன் நகரச் செயலர் முகம்மது அலி, ஒன்றியச் செயலர் காசிதர்மம் துரை,இஸ்மாயில்,ஷேக் உதுமான்,முஸ்லிம் லீக் அமைப்புச் செயலர் நெல்லை மஜீத், தேசிய லீக் மாவட்டச் செயலர் கமருதீன் உள்ளிட்டோர் சென்றனர்.
   

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை


திருநெல்வேலி : உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற நடத்தை விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்தலின்போது வாக்குகளை பெறுவதற்காக சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுவிக்கக்கூடாது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் அல்லது வெகுமதிகளை வழங்கக்கூடாது. கூட்டங்களில் மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வழங்கக்கூடாது.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:


ரியாத் - 
 
 
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது.   சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

ஒரு ஆண்டில் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 42 கோடி


புதுடெல்லி - தகவல் அறியும் ஆர்வலரான எஸ்.சி. அகர்வால் கடந்த 3 ஆண்டில் மத்திய மந்திரிகளின் மேற் கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அதற்கு ஆன செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இது தொடர்பாக தலைமை தகவல் ஆணையர் சத்யானந்தா மிஸ்ராவுக்கு மனு அனுப்பினார்.
 
இதை தொடர்ந்து தகவல் ஆணைய அதிகாரிகள் அகர்வாலுக்கு அனுப்பியுள்ள விவரங்கள் வருமாறு:-
 

குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்; பாரதீய ஜனதா கட்சி முடிவு


குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.   மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது. நாளுக்கு நாள் புதுப்புது குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு எதிராக கிளம்பிக் கொண்டு இருக்கின்றன.
 

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 18 பேர் பலி


ஜகார்தா - இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என 18 பேர் இருந்தனர்.   சுமத்ரா தீவில் அந்த குட்டி விமானம் தரை இறங்க வேண்டும். நடுவானில் அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
 

தங்கம் விலை மேலும் வீழ்ச்சி பவுனுக்கு ரூ.408 குறைந்தது


தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் சென்று ஒரு பவுன் ரூ.21,800-யை தொட்டது. இதனால் ரூ.22 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
 

நவீன முஸ்லிம் மேதாவிகள்

முஸ்லிம்களில் சிலர் தங்களை "முஸ்லிம் மேதாவிகளாக" அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் மற்றவர்களை பிற்போக்குவாதிகள் என்று கூறி தங்களை வித்யாசப்படுத்திக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் முழுமையான முஸ்லிம்களும் அல்ல. முழுமையான மேதாவிகளும் அல்ல.


RSS -ன் கைக்கூலி அன்னா ஹஸாரே!


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்னா ஹசாரே, போராட்டமெல்லாம் முடித்து சொந்த ஊரில்ஓய்வெடுத்தவர், திடீரென கிளம்பினார். “காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற லஞ்சம் வாங்கியவர்களை தூக்கிலிடவேண்டும் ” என அதிரடியார் அறிக்கைவிட்டார். ஆனால் அமர்சிங் கைதான அதே வாரத்தில் பல ஆயிரம் கோடி சுரங்கஊழல் வழக்கில் கைதான பீஜேபியின் ரெட்டியை பற்றி வாயை கூட திறக்கவில்லை.

PCC-Police Clearance Certificate

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

'பொடி வைத்துப் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்ட 'பொடி வைத்த' விஜயகாந்த்!

வேலூர்: கம்சனை (திமுக ஆட்சியை) அழிக்க ஒன்று சேர்ந்தோம். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். இப்போது, இப்படிப்பட்ட தொண்டர்களை (தேமுதிகவை) விட்டு விட்டோமே என்று ஒவ்வொருவரும் (முதல்வர் ஜெயலலிதா) நினைக்க வேண்டும். இதனால் ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'பொடி வைத்துப்' பேசினார்.

வேலூர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதாவை ஆதரித்து மண்டித்தெருவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

புதன், 28 செப்டம்பர், 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

310560_156600207764135_100002424713418_275998_821129468_n
சென்னை : தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.


இந்தக் கூட்டணியில்

‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு

_42215362_afzalafp203jpg
ஸ்ரீநகர் : 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்தும், ரஹ்மான் கிலானி மற்றும் அப்ஷான் குருவை விடுதலை செய்தது.

இன்று[செப்-30] உலக இதய நாள் [World Heart Day] : ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிக்கிறார்

world-heart-day-2011
துபாய் : இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.
19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது.
இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது,  அதிகமான மக்கள் இருதய  சம்பந்தமான நோய்களிலாயே மரணிப்பதாக உலக சுகாதார துறையும் அறிவித்துள்ளது.

கடையநல்லூர் நகராட்சியில் இன்று காலை 3 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

கடையநல்லூர் -  இன்று கடையநல்லூர் நகராட்சியில் 13,28,30 ஆகிய வார்களுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் போது கடையநல்லூர் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் வேட்பாளருடன் SDPI செயல் வீரர்களும்,பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர் .

இவர்களின் வெற்றிக்கு வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிராத்திப்போமாக...........

கடையநல்லூர் 29 வார்டு வேட்பாளர் S. நைனா முஹம்மது (எ ) கனி வேட்புமனு தாக்கல்


கடையநல்லூர் மதீனா நகரை சார்ந்த நமது சகோதரர் கனி அவர்கள் அணைத்து ஜமாத்தினர் முன்னிலையிலும் ஆதரவோடும் மேலும் மாவட்ட பொதுசெயலாளர் (SDPI) யாசர்கான் ,J. ஜாபர் அலி உஸ்மானி (மாவட்ட தலைவர் PFI)  அவர்களோடும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் செயல் வீரர்களுடன் சேர்ந்து மனுதாக்கல் செய்தார் .

தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு!

கெய்ரோ: பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

50,000 இந்தியர்களை விடுவித்தது சவூதி அரேபியா அரசு

துபாய் : சவூதி அரேபியாவில் விசா காலம் முடிந்த பின்னும் மறைமுகமாக வசித்து வந்த 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை அந்த நாடு விடுவித்தது. இதையடுத்து அவர்கள் நாடு திரும்பினர்.

எண்ணெய் வளமிக்க நாடான சவூதி அரேபியா-வுக்கு, இந்தியா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பலதரப்பட்ட வேலைகளுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு வசிக்க குறிப்பிட்ட ஆண்டுகள், அரசு அனுமதித்து விசா வழங்குகிறது.

ஹைதராபாத்:பொறியியலுக்​கான பொது நுழைவுத் தே​ர்வில் முதல் இடம் பிடித்த செயீத் ஷதாப்

ஹைதராபாத் : ஆந்திர மாநில பொறியியல் பொது நுழைவுத் தேர்வில் செயீத் ஷதாப் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

sadaf

ஜவஹர்லால் நேரு பாலிடெக்னிக் இன்ஜினியரிங் கல்லூரியின் மாணவியான இவர் பொறியியல் பொது நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்தமைக்காக, பாலிடெக்னிக் படிப்பிற்கான, சிறந்த மாணவிக்கான விருது ‘பொறியாளர் கோடி சீதா தேவி’ என்னும் விருதை ஆந்திர அரசு இவருக்கு வழங்கியது. அவருக்கு கிடைக்கப் பெற்ற அந்த விருதில், ரூ: 5000/-, ஒரு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழும் அடங்கும். இதனைத் தொடர்ந்து இவருக்கு ஒஸ்மானியா பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மலேசியா நாட்டுக்கு உடனடி ஆட்கள் தேவை

மலேசியா நாட்டில் ஹோட்டல் வெயிட்டராக பணிபுரிவதற்க்கு 20 முதல் 30 வயதிற்குள்ளான முஸ்லிம் இளைஞர்கள் தேவை

மாதச்சம்பளம் - 800 ரிங்கிட் (இந்தியா மதிப்பு 12,500.00 ஆகும்)
உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் இலவசம். மற்ற வகையான செலவுகள் இல்லை, எந்த பிடித்தமும் கிடையாது.
வேலை நேரம் 13 மணி நேரம். (இரண்டு வருட ஒப்பந்தம்)
விஷா மற்றும் டிக்கெட் ஆகியவை உட்பட செலவு 50,000.00

20 நாட்களில் பயணம் . உடனே அணுகவும்.
அணுக வேண்டிய அலைபேசி எண் - 7502510853.

கடையநல்லூர் நகராட்சியில் 56 ஆயிரத்து 618 வாக்காளர்கள் பெண்களைவிட ஆண்கள் அதிகம்

கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளில் 28 ஆயிரத்து 425 ஆண்கள், 28 ஆயிரத்து 193 பெண்கள் என மொத்தம் 56 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர்.


கடையநலலூர் நகராட்சி 

1வது வார்டில் 900 ஆண்கள், 887 பெண்கள் என மொத்தம் 1787 வாக்காளர்களும், 
2வது வார்டில் 891 ஆண்கள், 907 பெண்கள் என மொத்தம் 1798 வாக்காளர்களும், 

முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள் - டெங்கு - சிக்கன்குனியாவை தடுத்திடுங்கள்


செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை

pesky calls
டெல்லி : செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

திங்கள், 26 செப்டம்பர், 2011

‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?


வாஷிங்டன் : ’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

தனித் தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்



imagesCAXL7XIX
ஹைதராபாத் : தனித் தெலுங்கானா கோரி அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு திங்கட் கிழமையன்று ரயில் மறியல் போராட்டம், காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளின் வீடுகளை முற்றுகையிடுதல் மற்றும் ஹைதராபாத் முழுவதும் முழு அடைப்பு உட்பட பல போராட்டங்களை தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது நடைபெற்று வரும் “சமூகத்தின் அனித்து தளத்திலிருந்தும் போராட்டம்” என்ற கட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு



judgeHammer
தருமபுரி :  தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாபட்டப்பட்டிருந்த மூன்றுபேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வாதாடினர்.

உள்ளாட்சி தேர்தலில் கடையநல்லூர் 29- வது வார்டு நிலவரம்

கடையநல்லூர் -    இன்று காலை 9 மணியளவில் மதினா நகர் ஜமாத் பள்ளியில் வைத்து முகல்லா வாசிகள் அனைவரும் ஒன்று கூடி யாரை கவுன்சிலராக தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசித்தார்கள்.

   அப்பொழுது சர்ச்சைகளுக்கு மத்தியில் பல வகையான எதிர்ப்புகளும் போட்டியுமாக இருந்தது ஜமாத் நிர்வாக கமிட்டி கூடி யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்று தனியாக பிரித்ததில் 11 போர் (பல கட்சி சார்பிலும் சுயேட்சையாகவும்) நிற்கப்போகின்றோம் என்று கருத்தை முன்வைத்தார்கள். அவர்கள் அனைவரையும் அழைத்து உங்களுக்குள்ளே யார் நிற்கலாம் என்று கலந்தாலேசித்து ஒரு முடிவை எங்களுக்கு தாருங்கள் என்று கமிட்டி சொன்னது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி டெக்கன்கிரோனிக்கல் வெளியிட்ட‌அவதூறு செய்தி



இந்த தேசத்தை வல்லரசாக மாற்றவிடமாட்டோம்!
இந்த தேசத்தை அந்நியர்களிடம் அடமானம் வைப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுப்போம்!
இந்தியாவில் ஜாதிக்கொடுமையை ஒழிய விடமாட்டோம்!
சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கமாட்டோம்!
ஃபசிஸசங்கப்பரிவார கூட்டத்தினருக்கு பல்லக்கு தூக்குவோம்!

இவற்றிற்காக எங்களை எதிர்க்கும் அமைப்பாக நீங்கள் இருந்தால்....! உங்களை தடை செய்து, உங்களை முடக்குவதற்கான‌ எல்லா வேலைகளிலும் ஈடுபடுவோம்!

இப்படிக்கு,

இந்திய அரசாங்கம் + உளவுத்துறை + ஊடகங்கள்

ஆம்! இதுதான் இன்றைய நிலை....

மக்கள் தொடர்பு பணிகளை துரிதப்படுத்த பயிற்ச்சி வகுப்பு - பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை :  பாப்புலர் ஃப்ரண்டின் முக்கிய துறையான மக்கள் தொடர்பு சார்பாக அத்துறையின் நிர்வாகிகளுக்கு இரண்டு நள் பயிற்ச்சி வகுப்புகள் சென்னை மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

தேசிய அளவில் புதிய சமூக நல இயக்கமாக உருபெற்றுவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றி சமீபகாலமாக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நன்கு உணர்ந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் தனக்கு விரிக்கப்படும் அபாய வலையை உணர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய உண்மையான செய்திகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லும் முகமாக மக்கள் தொடர்பு துறையை துவக்கி அதன் பணிகளை நாடுமுழுவதும் தெரிவித்துவருகிறது.

அப்பாவி இளைஞர் தீவிரவாதியா​க கைது – போராட்டத்துக்குப் பின் விடுதலை

புதுடெல்லி : ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கோபல்கர் கலவரம் – ராஜஸ்தான் உள்துறை அமைச்சரின் பதவிக்கு ஆபத்து

புதுடெல்லி : ராஜஸ்தான் மாநிலம் பாரத்நகர் மாவட்டத்தில் உள்ள கோபல்கர் பகுதியில் நடந்த மதக் கலவரத்தில் போலீஸாரின் அத்துமீறல் மற்றும் கலவரத்தை தடுப்பதில் மாநிலத்தின் தோல்வி ஆகியவை குறித்து காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு அளித்துள்ள அறிக்கையின் விளைவாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்த​ல்

Manmohan_-_UNGA_790920e
ஐ.நா.சபை :சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

5 வாரத்தில் விழும்; பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள்

வாஷிங்டன் :-
  பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.   கடந்த 1991-ம் ஆண்டு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 டன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் கடந்த 2005-ம் ஆண்டு செயல் இழந்தது.