நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 செப்டம்பர், 2011

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை


திருநெல்வேலி : உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற நடத்தை விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்தலின்போது வாக்குகளை பெறுவதற்காக சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுவிக்கக்கூடாது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் அல்லது வெகுமதிகளை வழங்கக்கூடாது. கூட்டங்களில் மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வழங்கக்கூடாது.

தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு முடியும் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் இருந்து முந்தைய 48 மணி நேரத்தில் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.
வாக்குச் சாவடியிலிருந்து 200 மீ. தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக்கூடாது. ஆள்மாற்றாட்டம், செய்தல் அல்லது தவறான பேரில் வாக்களிக்கக்கூடாது.
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் யாரும் தனிநபரின் நிலம், கட்டடம், மதில் சுவர்களில் சம்பந்தப்பட்டவரின் அனுமதியில்லாமல் கொடி கம்பம் நடுதல், சுவரில் எழுதுதல், தட்டிகள் தொங்க விடுதல் கூடாது. உரிய தேர்தல் அலுவலரின் அனுமதி பெறாமல் எந்த கட்சி வேட்பாளர்களும் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.
வாகனங்களில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீறினால் வாகனங்களும் ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும்.
பொதுக்கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். வாக்குச் சாவடியிலிருந்து 200 மீ. தொலைக்குள் எந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் பணி முகாம்களை அமைக்கக்கூடாது.
அரசு ஊழியர்கள் தேர்தல் காலத்தில் முற்றிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஆதரவாக செயல்படுவது தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் அவர்.