நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 டிசம்பர், 2011

தமிழ்நாடு மின்சார வாரியம் இணையமயம்


தமிழக அரசு மின்சார வாரியத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்கி வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து நிலையங்களையும் ஒன்றாக இணையம் மூலம் இணைத்துள்ளது. தற்போது நாம் தமிழகம் முழுவதும் எந்த மின்சார கட்டணம் வசூலிக்கும் நிலையத்திலும் நமது கட்டணத்தை செலுத்தலாம்.

இணையம் மூலமாக மின்சார கட்டணம் செலுத்தும் முறையை அரசு அமல்படுத்தியுள்ளது. வேலைக்கு செல்வோரையும், முதியவர்களையும் கவனத்தில் கொண்டு இந்த வரவேற்க வேண்டிய சேவையை துவங்கியுள்ளது.

ரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற


இந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை
நாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.


அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.

عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم من كان يؤمن بالله و اليوم الآخر فلا يؤذ جاره

வெள்ளி, 23 டிசம்பர், 2011

ஃபேஸ்புக், கூகுள் இணையதளங்களுக்கு சம்மன்

                                                    facebook.google

புதுடெல்லி : ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டதாக ஃபேஸ்புக், கூகுள், யாகூ, யூ டியூப் போன்ற சமூக வலைத் தளங்களுக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியது.

வினய் ராய் என்கிற பத்திரிகையாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் சுதேஷ் குமார், இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து ஜனவரி 13-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

புலனாய்வு ஏஜன்சிகள் மீதான பயம் காரணமாக பிரவீன் சுவாமியின் மீது வழக்கு தொடர தயங்கும் முஸ்லிம் இளைஞர்கள்

content_mg-qaeda-main
ஹைதராபாத்:’த ஹிந்து’ பத்திரிகையின் நேசனல் பீரோ சீஃப் பிரவீன் சுவாமியின் மீது கர்நாடகாவை சார்ந்த முஹம்மது ஜரார் சித்திபாபா அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள சூழலில் பிரவீன் சுவாமியின் அவதூறு கட்டுரைகளால் பாதிப்பிற்குள்ளான இதர முஸ்லிம் இளைஞர்கள் வழக்கு தொடர தயங்கி வருகின்றனர்.

ஹஸாரேக்கு நீதிமன்றம் கண்டனம்

                                                  Bombay HC rejects Team Anna plea for ground
மும்பை/ரலேகான்சித்தி:லோக்பால் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஹஸாரே குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்துவதற்கு எம்.எம்.ஆர்.டி.எ(ஆஸாத் மைதானம்)மைதானத்தை குறைந்த வாடகைக்கு தரவேண்டும் என மஹராஷ்ட்ரா அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடிச்செய்த மும்பை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், ஹஸாரே குழுவினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது.

வியாழன், 22 டிசம்பர், 2011

அரசு பயங்கரவாதத்தின் கோர முகம்!


imagesCAO89234
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் அடைப்பு!
மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்மணியை வீட்டில் தங்கவைத்தார் எனக்கூறி ராஜஸ்தான் மாநிலத்தில் மனித உரிமை ஆர்வலரும், பி.யு.சி.எல் பொதுச் செயலாளருமான கவிதா ஸ்ரீவஸ்தவா மீது போலீஸ் நடவடிக்கைகள்!

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’


புதுடெல்லி: கர்நாடகாவை சேர்ந்த முஹம்மத் ஜரார் சிதிபாபா என்பவர் ‘தி ஹிந்து’ தினசரி நாளிதழின் தலைமை நிரூபர் என்.ராம் மற்றும் செய்தியாளர் பிரவீன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.


news
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளிவந்த ஹிந்து செய்திதாளின் முதல்பக்கத்தில் ‘தலைமறைவான இந்திய முஜாஹிதீன் தலைவர் அலியாஸ் யாசின் பட்கல் 2005-ஆம் ஆண்டின் நகர்ப்புறங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாகவும்  காவல்துறையால்  தேடப்பட்டு வந்த இவர்  2010-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களில் மூலம் தங்கள் ஜிஹாத் இயக்கத்தை மீண்டும்  புதுப்பித்ததாகவும்  இவரது இயற்பெயர் முஹம்மத் ஜரார் சிதிபாபா’ என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

தீவிரவாத வழக்குகளை முடக்க சங்கப்பரிவாரங்கள் சதி செய்கின்றது!

புதுடெல்லி: டிசம்பர் 21, பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:



நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னனியில் உள்ள சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் மீது நடந்து வரும் விசாரணையை முடக்கவே பா.ஜ.க உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிவைத்து வருகின்றனர்.

ஓ.பி.சி. ஒதுக்கீட்டினுள் முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது

ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் 22.12.2011 அன்று நடந்த கேபினட் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவில் 4.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மத மற்றும் மொழி ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் அட்டகாசத்தை எதிர்த்து எகிப்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்


தஹ்ரீர் சதுக்கம் ஒரு வாரகாலத்தில் முதல் முறையாக அமைதியாக இருந்தது. அதற்கு முந்திய இரவுதான் பொலிஸாரும் படையினரும் கண்ணீர்ப்புகை மூலமும் தடியடிப் பிரயோக மூலமும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
இராணுவம் அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் என இவர்கள் கோரிவருகின்றனர். நவம்பரில் முதல் கட்டத் தேர்தல் நடந்து கொண்டிருக்கையில், தஹ்ரீரில் 42 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல இப்போதும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாத வழக்குகளை முடக்க சங்கபரிவார் சதி செய்கிறது ! - பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அறிக்கை....


புதன், 21 டிசம்பர், 2011

இந்தியாவின் 8 மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் இல்லை


imagesCAIWFP6A
புதுடெல்லி : இந்தியாவின் எட்டு மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் ஏற்படுத்தாமல் உள்ளன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.
அருணாசலப் பிரதேசம், கோவா, ஹரியாணா, மேகாலயா, மிஷோரம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள், மனித உரிமை கமிஷனை ஏற்படுத்தாமல் உள்ளன.

எரிமலை உருவாகும் பகுதியில் கூடங்குளம் அணுமின்நிலையம் – நிபுணர் குழுவின் அதிர்ச்சி அறிக்கை...


சென்னை : கூடங்குளம் அணுமின்நிலையம் எரிமலை உருவாகும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குழுவின் அறிக்கை கூறுகிறது. அணுமின்நிலைய எதிர்ப்பு குழுவினருக்காக ஆய்வு நடத்திய 21 உறுப்பினர்களை கொண்ட நிபுணர்கள் குழு கூடங்குளம் பகுதியில் மிதமான எரிமலை பாறைக் கற்களை (சப் வோல்கானிக் ராக்ஸ்) கண்டெடுத்துள்ளனர்.

521291-111126-graham-crouch

ஸ்கூல் சலோ...


கண்ணியத்துக்குரியவர்களே,

வறுமை யின் கராணமாக மேற்கு வாங்களத்தில் கல்வியை விட்ட குழந்தைகளுக்கு நீங்களும் ஒரு கரம் நீட்டலாம்....
மறுமை யிலும் சிறந்தகூலியை பெறலாம்


பெண்களுக்கும் பங்குண்டு


இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது பெண்மணிகளின் பங்களிப்பு பாரிய அளவில் இருந்திருக்கிறது. ஒரு தாயாகமனைவியாக,சகோதரியாகமகளாக முஸ்லிம் பெண் சமூகத்தை தாங்கி நிற்கிறாள். ஆண்களில் சிலர் தாம் மட்டும் புகழுக்குரியவர்கள் என 
நினைக்கின்றனர். தாமே போராட்டங்களின் முன்னோடிகள் எனவும்நாகரிகங்களின் சொந்தக்காரர்கள் எனவும் கருதுகின்றனர். அறிவும்பலமும்பதவியும் அவர்களிடம் மாத்திரமே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பெண்களைப் பற்றி கூறப்பட்டால்அவர்களால் வேலைகளை திறன்பட செய்ய முடியாதுவீட்டு வேலைகளை செய்வதும் கணவனுக்கு பணிவிடை செய்வதும் தான் அவர்களது பணி என்று கூறுகின்றனர்.

இஸ்லாமியவாதிகளின் அரசியல் போராட்டம்: கொள்கையும் தந்திரோபாயங்ளும்


அறபு-முஸ்லிம் நாடுகளில் கடந்த பல தசாப்தங்களாகப் போராடி வரும் இஸ்லாமியவாதிகள் பற்றிய மங்கலான அல்லது தவறான அபிப்பிராயங்களே சமூகத்தில் நிலவுகின்றன. எத்தகைய சக்திளோடு அவர்கள் போராடி வருகின்றனர் என்ற உண்மையும் பலரால் புரிந்துகொள்ளப்படவில்லை.

சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை ஊடகங்களே தீர்மானிக்கின்றன - பேரறிஞர் யூஸுப் அல் கர்ளாவி


ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் யார் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
இன்று தொடர்பூடகங்கள் மனிதனது சிந்தனையைநம்பிக்கையை,உளப்பாங்கை கட்டியெழுப்புவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூகங்களை உருவாக்குவதற்கான அடிப்படைகளை ஊடகங்களே இடுகின்றன. எனினும்கவலைக்குரியவிடயம்முஸ்லிம்கள் - அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்கள் - பள்ளிவாயல் கட்டுவதையும் ஸதகா செய்வதையுமே தமது வக்ப் சொத்தின் மூலம் நிறைவேற்ற முடியுமான அமல்கள் என்று நினைக்கின்றனர். மனிதர்களைக் கட்டியெழுப்பும் அல்லது சமூகங்களைக் கட்டியெழுப்பும் ஊடகத் துறையில் கவனம் செலுத்துவதை தேவையற்றது என்று எண்ணுகின்றனர்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

தேனியில் கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய மாபெரும் தர்ணா



கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய மாபெரும் தர்ணா
முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும், மௌனம் காத்து இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேனியில் மாபெரும் தர்ணா போராட்டத்தை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)நடத்தியது.

முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்

pravin thogadia
கொச்சி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தடையாக இருப்பது முஸ்லிம் வாக்கு வங்கியாகும் .எனவே அதனை முற்றிலும் அழித்தொழிப்பதே விசுவ ஹிந்து பரிஷத்தின் நோக்கம் என அவ்வமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார்.
 

எஸ்.டி.பி.ஐ எழும்பூர் தொகுதி சார்பாக அடையாள உண்ணாவிரதம்




கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக அகற்றக்கோரியும், முல்லை பெரியார்  அணை  விவகாரத்தில் உச்ச நீதி மன்ற ஆணையை உடனடியாக அமல்படுதக்கோரியும் மத்திய அரசைக்கண்டித்து ஒரு நாள்  அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது 

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!




கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதினால் மட்டும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. எல்லா முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென இச்செயற்குழு கூட்டம் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.

SDPI ன் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது


௨௦ டிசம்பர், ௨௦௧௧

 
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் 17.12.2011 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட SDPI அலவலகத்தில் வைத்து நடைபெற்றது.  மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் எஸ். முஹம்மது முபாரக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.

உலர் திராட்சை

                                                   Kismis-Storage-Facilities
 
கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள் ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

அயோத்தி ராமன் அழுகிறான்





கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா?
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’



பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.


பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?



குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.