நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 23 டிசம்பர், 2011

ஹஸாரேக்கு நீதிமன்றம் கண்டனம்

                                                  Bombay HC rejects Team Anna plea for ground
மும்பை/ரலேகான்சித்தி:லோக்பால் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஹஸாரே குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்துவதற்கு எம்.எம்.ஆர்.டி.எ(ஆஸாத் மைதானம்)மைதானத்தை குறைந்த வாடகைக்கு தரவேண்டும் என மஹராஷ்ட்ரா அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடிச்செய்த மும்பை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், ஹஸாரே குழுவினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது.


ஹஸாரேவின் போராட்டம், பொது நலனுக்காகவா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவா? என்பதை தீர்மானிக்க முடியவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. லோக்பால் மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதன் உள்ளடக்கம் என்ன? என்பது குறித்து தெளிவாக தெரியாத சூழலில் பொது விவாதத்தை அனுமதிக்க முடியுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளையில் போராட்டம் நடத்தும் முயற்சிக்கு நீதிபதி மஜூம்தார் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

ஜனநாயக அமைப்பு அமுலில் இருக்கும் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் மசோதா குறித்து விவாதிக்கமாட்டார்களா? என நீதிபதி மஜூம்தார் கேள்வி எழுப்பினார்.

அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் கடைப்பிடிப்போம் என நீதிபதிகள் உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால்,எந்த சட்டத்தின் அடிப்படையில் மனுதாரர் சலுகையை கோருகிறார்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உங்களுக்கு(ஹஸாரே குழுவினருக்கு)போராட்டம் என்பது சத்தியாக்கிரகமாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு அப்போராட்டம் தொல்லையாக இருக்கும்.

போராட்டத்தில் அதிகமான நபர்கள் பங்கேற்பதற்காக ஆஸாத் மைதானத்திற்கான நுழைவு வாயில்களை ஹஸாரே குழுவினருக்கு திறந்து கொடுக்க அரசுக்கு உத்தரவிட இயலாது என நீதிமன்றம் தெரிவித்தது.

ஹஸாரேயின் ‘இந்தியா எகெய்ன்ஸ்ட் கரப்ஸன்’ என்ற அமைப்புடன் இணைந்து செயல்படும் ஜாக்ரத் நாகரிக் மஞ்ச் என்ற அமைப்பு அளித்த மனுவை நீதிபதிகளான பி.பி.மஜும்தார், மிருதுலா பட்கர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தள்ளுபடிச் செய்தது. மேலும் மனுவை அளித்த அமைப்பு பதிவுச் செய்யப்பட்ட அமைப்பு இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பதிவுச் செய்யப்பட்ட அமைப்பு மூலமாக மீண்டும் மனுவை தாக்கல் செய்வோம் என ஜாக்ரத் நாகரிக் மஞ்சின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆஸாத் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால் அங்கே உள்ள 22 கிரிக்கெட் பிட்சுகளை சேதப்படுத்துவார்கள். ஆதலால் மைதானத்தில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க இயலாது என விளையாட்டு-இளைஞர் நலத் துறை துணை இயக்குநர் அறிவித்ததாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கிடையே இம்மாதம்27-ஆம் தேதி முதல் நடத்தவிருக்கும் 3 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தே தீரும் என அன்னா ஹஸாரே ரலேகான் சித்தியில் தெரிவித்துள்ளார். சலுகை வாடகை தொகையில் எம்.எம்.ஆர்.டி.எ மைதானத்தை அனுமதிக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள சூழலில் வாடகை தொகையை பொதுமக்களிடமிருந்து வசூலிப்போம் என ஹஸாரே தெரிவித்துள்ளார். ஏழு லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும். செக்.ட்ராஃப்ட் ஆகியன மட்டுமே பெறப்படும். பணமாக பெறமாட்டோம் என ஹஸாரே கூறியுள்ளார்.

மும்பையில் அரவிந்த் கேஜ்ரிவாலும், கிரன்பேடியும் தன்னுடன் உண்ணாவிரதம் இருப்பார்கள் என தெரிவித்த ஹஸாரே, டெல்லியில் இன்னொரு குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.
ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்துள்ளது. மைதானத்தின் வாடகையை குறைக்க ஆதரவாளர்கள் நீதிமன்றத்தை அணுகியது சரியல்ல எனவும், தான் அறிந்திருந்தால் அதற்கு சம்மத்திருக்கமாட்டேன் என ஹஸாரே கூறினார்.

மும்பையில் போராட்டம் நடத்த அனுமதி தராவிட்டால் சிறையில் போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் மீது தான் இதுவரை நம்பிக்கை இழக்கவில்லை எனவும், சரியான லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் வரை அழுத்தம் கொடுப்போம் எனவும் ஹஸாரே கூறினார்.