நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 6 செப்டம்பர், 2012

பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 2012 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கீழ்கானும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் A.S. இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் S. பைசல் அஹமது செயற்குழு உடனே நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்க்காக தமிழகம் முழுவதும் மசூதிகளில் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல்செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 39,95,121 வசூல் செய்யப்பட்டது. இத்தொகையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமையிடம் ஒப்படைப்பது என்றும் அஸ்ஸாம் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு நேரடியாக செல்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிவகாசி தீ விபத்து - நிவாரணப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

மதுரை: 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்.

த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கடிதம்

தாங்கள் செப்டம்பர் 16 தேதியிட்ட சண்டே இந்தியன் தமிழ் இதழில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் பார்த்து ஓர் அளவு சந்தோசமும் ஓரளவு கவலையும் பட்டுக்கொண்டேன்.ஏநென்றால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும் முஸ்லிம்கள்தான் பிரச்சனைகளுக்கும் தீவிரவாதத்திர்க்கும் காரணம் என்பது போலவும் எழுதி வரும் மீடியா உலகில் அதற்க்கு சிறிது மாற்றமாக இந்தியாவில் 

முஸ்லிம்களும் ஏனய மக்களும் பிரச்சனைகளில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் ஆதலால் நாம் போராட நாம் கவனம் செலுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது என்ற அறிவுருத்தலான செய்திகளையும் பார்த்த சமயம் ஓரளவு சந்தோஷ பட்டேன்.


செத்துருக்கலாமோ? நரகத்தின் நடுவில்..............





அஸ்ஸாமில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரோடிருக்கும் முஸ்லிம்களின் மனநிலைதான் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பின் வார்த்தை.ஏன் அடிக்கிறார்கள்? எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் ஊரை விட்டு வீட்டை விட்டு காலி செய்து வந்தோம் என பல கேள்வி கணைகளோடு அகதிகள் முகாமில் கலவரம் என்ற கோரதாண்டவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் முஸ்லிம்களின் நிலையை பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அமைப்புக்களை கண்காணிக்கிறோம் நிறுவனங்களை கண்காணிக்கிறோம் என அரசாங்கத்தால் சொல்லப்படும் அமைப்புக்களும் நிறுவனங்களும் இல்லை என்றால் என்றோ இவர்களும் செத்து போயிருக்கலாம்.முகாமுக்கு வெளியேயான உலகம் குண்டுகளாலும் அம்புகளாலும் ஆனது என்றால் முகாமிற்குள்ளான வாழ்க்கையை நரகம் என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு மிக மோசமாகவும் இன்னொரு கொடுமைகளும்தான் அங்கு நடக்கிறது.
முகாம்களில் இருக்கும் ஒரு சில நிலைகளை அவர்களே கூறியதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.