நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 6 செப்டம்பர், 2012

த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கடிதம்

தாங்கள் செப்டம்பர் 16 தேதியிட்ட சண்டே இந்தியன் தமிழ் இதழில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் பார்த்து ஓர் அளவு சந்தோசமும் ஓரளவு கவலையும் பட்டுக்கொண்டேன்.ஏநென்றால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும் முஸ்லிம்கள்தான் பிரச்சனைகளுக்கும் தீவிரவாதத்திர்க்கும் காரணம் என்பது போலவும் எழுதி வரும் மீடியா உலகில் அதற்க்கு சிறிது மாற்றமாக இந்தியாவில் 

முஸ்லிம்களும் ஏனய மக்களும் பிரச்சனைகளில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் ஆதலால் நாம் போராட நாம் கவனம் செலுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது என்ற அறிவுருத்தலான செய்திகளையும் பார்த்த சமயம் ஓரளவு சந்தோஷ பட்டேன்.


அதே சமயத்தில் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பாதிப்புக்கு ஆளாக்கபடுகின்றனர்.குறிப்பாக சிரியா,பாகிஸ்தான் என முஸ்லிம் நாடுகளிலேயே பாதிக்கபடுகின்றனர்.அங்கெல்லாம் பாதிப்புகள் நடக்கும் சமயம் சும்மா இருந்து விட்டு பர்மாவில் தாக்கப்பட்ட போது மட்டும் இந்தளவுக்கான போராட்டங்கள் தேவையா? என்பது போலவும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களையும் அதன் பாதிப்புக்களையும் கண்டு கொள்ளாமல் தமது முன்னேற்றத்தில் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செல்லலாமே என்ற நோக்கிலும் சொல்லிவிட்ட அறிவுறுத்தல் சில கவலைகளை எனக்குள் ஆட்படுத்தியது.அதற்க்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் அதனை கண்டிக்கும் விதத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கலையும் போராட்டங்களையும் தப்பு என்ற ரீதியில் சொல்லப்பட்ட வார்த்தைகளும் எனக்கு கவலை அளித்தன.

அந்த கடிதத்தில் நீங்கள் முஸ்லிம் சகோதரர்களுடன் ஒரு கேள்வி கேட்கிறேன் என்ற ரீதியில் சில விசயங்களை கேட்கிறீர்கள் அதில் பெண் கான்ஸ்டபிள்களை பங்கபடுத்தியதும்  ஜவான் ஜோதியை உடைப்பதர்க்கும் வட கிழக்கு பகுதி மக்களை ஆங்காங்கே தாக்குவதற்கும் புத்தர் சிலையை அளிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது?என்று கேள்வி கேட்டீர்கள்.

இது போன்ற செயல்கள் உண்மையிலேயே எனது சகோதரர்கள் செய்து இருந்தால் கண்டிக்க வேண்டிய ஒன்றுதான் ஆனால் அதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை இதில் வேறு எதுவும் சதிகள் இருக்குமா?என்பதையும் பார்க்கவேண்டும்.சகோதரர் அரிந்தம் சவுத்ரி அவர்களே நீங்கள் சொன்ன செய்தி உன்மையாக இருந்தாலும்  அதில் நியாயமில்லைதான்.
ஆனால் இந்தியாவில் கலவரங்கள் நடைபெற்ற ஒவ்வொரு சமயங்களும் எனது சகோதரிகள் கர்ப்பளிப்புக்களுக்கும் ,கூட்டு கர்ப்பளிப்புக்களுக்கும் ஆளானார்களே இது நியாயமா?

 எனது சகோதரனின் கண்கள் முன்னாள் மனைவிமார்களும் சகோதரிகளும் நிர்வாணமாக ஓட விட பட்டார்களே இது நியாயமா?
கருவில் இருக்கும் குழந்தை கூட நாளை பிறந்தால் அப்போது அதனை கொள்வதற்கு திட்டமிட வேண்டியது வரும் நேரம் விரயம் என வயிற்றுலேயே சூலாயுதத்தால் குத்தி கொன்றார்களே இது நியாயமா?
வழிப்பாட்டு தளமான பாபரி பள்ளியை நீங்களும் நானும் நம்மை ஆட்சி செய்தவர்களும் கண்களை திறந்து வைத்து கொண்டு இருந்த அந்த சமயத்திலேயே இடித்து தள்ளினார்களே இது நியாயமா?

ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டமும் வேடிக்கையும் பார்க்க வந்த முஸ்லிம்களை ஆற்றங்கரையோரமாக கூட்டி சென்று நிற்க வைத்து சுட்டு கொன்றார்களே இது நியாயமா?
கலவரம் என்ற பெயரால் எனது சகோதரர்களின் வியாபார ஸ்தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு ஒரே நாளில் பிச்சைக்காரர்களாகவும் அகதிகள் முகாமிலும் அடைக்கபட்டார்களே இது நியாயமா? இப்படி எத்தனையோ அநியாயங்கள் குறித்து உங்களிடம் நியாயம் கேட்கலாம் போல் தோன்றுகிறது அவ்வளவு அநியாயங்கள்.


மனித உயிர்கள் எங்கு கொல்லபட்டாலும் அது உயிர்களே.அது பாகிஸ்தானில் கொள்ளபட்டாலென்ன?பர்மாவில் கொள்ளபட்டாலென்ன?இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் எங்கு எப்போது எதற்கு குரல் கொடுக்க வேண்டுமோ போராட்டங்கள் நடத்த வேண்டுமோ அப்போது அந்த சமயங்களில் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.அதற்காக சிரியாவில் கொள்ளப்படும் போது சத்தம் வரலே..... அதனால அஸ்ஸாமில் கொள்ளும் போதும் சத்தம் வரகூடாது என்பது நியாயமல்ல.......


சிரியாவில் போடும் சத்தம் உங்களுக்கும் கேட்காது எனக்கும் கேட்காது.ஆனால் அஸ்ஸாமில் போடும் சத்தம் உங்களுக்கும் கேட்க்கும் எனக்கும் கேட்க்கும்.அதனால் போராடுகிறேன்.சிரியாவின் அழுகுரலும் ஒரு நாள் எனது காதில் சப்த்தமாக கேட்க்கும் அப்போது அதற்கும் போராடத்தான் செய்வேன்.


எனவே முஸ்லிம்கள் கலவரத்தையும் உயிர் பலியையும் கண்டு கொள்ளாமல் நிதி மேலாண்மை,கல்வி,வேலை வாய்ப்பு இதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்பது போல உங்களுடைய இறுதி எழுத்துக்கள் இருந்தது.உண்மையே கண்டிப்பாக இது போன்ற முன்னேற்றமும் எனது சமூகத்துக்கு தேவையே அதையும் அடைவார்கள்.எங்களது போராட்டத்தால்.ஆனால் அடையும் போது அதனை அனுபவிக்க நீங்கள் கவலை பட கூடிய இந்த சமூகத்தில் உயிரோடு ஆட்கள் இருக்க வேண்டுமல்லவா?அதுதான் என்னை கலவரத்திற்கு எதிராகவும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் என்னை அழைக்கிறது.அதனால் நான் அந்த போராட்டங்களில்பங்கு பெறுகிறேன்.முடிந்தால் நீங்களும் பங்கு பெற்று இந்த சமூகம் முன்னேறவும் சுதந்திரமாக வாழவும் பங்குகொள்ளவாருங்கள் என கூறியவனாக எனது கடிதத்தை நிறைவு செய்கிறேன்.