நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 25 அக்டோபர், 2012

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் SDPI 50 தொகுதிகளில் தனித்து போட்டி

எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக மாநில செயற்குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார். 

மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? - கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்


கர்நாடகா : பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் குல்பர்காவின் தேசிய கல்லூரியில் 19.10.2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் ஷாஹித் நஸீர்  வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில துணை தலைவர் அப்துல் வாஹித் சேட் தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில் " சிறுபான்மை மற்றும் ஏழை மக்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் போராடி வருவதால் அது குறிவைக்கப்படுகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிமியின் மறு வடிவம் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்திக்க மறந்து விட்டார்கள்.2001ல் தடை செய்யப்பட்ட சிமியின் மறுவடிவாக 1993ல் உருவாக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எவ்வாறு இருக்க முடியும்? "என்று குறிப்பிட்டார்.

திங்கள், 22 அக்டோபர், 2012

குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் !நீதிக்கான முழக்கம் - கோவை மண்டல மாநாடு : கோவை பகதூர்ஷா திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு 21 .10 .2012 அன்று கோவையில் போத்தனூர் ரோடு - மைல்கல்லில் பகதூர்ஷா திடலில் வைத்து நடைபெற்றது.
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் முபாரக் , பி.யு.சி.எல் துணை தலைவர் க.குறிஞ்சி , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. மஹபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?

இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?