நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 13 ஜூலை, 2012

காவல் நிலையத்தில் இறந்த வியாபாரிக்கு நீதி கேட்டு SDPI கண்டன ஆர்பாட்டம்



காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர் காவல் நிலையத்தில் வியாபாரி ஹுமாயூன் தீ வைத்து இறந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (12-07-2012) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டும் ,இந்திய நீதி மன்றத்தை அவமதித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக ஆர்பாட்டம்



என்று முடிவுக்கு வரும் சிறுபானமையின வேட்டைஎன்று முடிவுக்கு வரும் சிறுபானமையின வேட்டை


முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!


புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் கைதிகளிடம் போலீஸ் பாரபட்சமாக நடந்துகொள்வது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்த மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் 
Manmohan tells Maha govt, HM to examine police bias against Muslims
உத்தரவிட்டுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பத்திரிகைச் செய்தியில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸ் நடத்திய ஆய்வில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம் கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடவேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் கோரிக்கை விடுத்திருந்தார்.

இனப்படுகொலையின் துயர நினைவை புதுப்பித்த ஸ்ரெப்னிகா நகரம்!






சரயாவோ: 2-வது உலகப்போருக்கு பிறகு ஐரோப்பா கண்ட மிகப்பெரிய கூட்டுப் படுகொலையான ஸ்ரெப்னிகா கூட்டுப் படுகொலையின் 17-வது நினைவு தினத்தை போஸ்னிய மக்கள் நினைவுக் கூர்ந்தனர்.
Srebrenica massacre remembered
ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரெப்னிகா நகரத்தில் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரண்டனர். போஸ்னியாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் துயர நிகழ்வை நினைவுக்கூறும் பொருட்டு அரைக் கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

புதன், 11 ஜூலை, 2012

உங்கள் சொத்துக்களின் அரசாங்க மதிப்பு என்ன?


கவலை வேண்டாம் கீழ்கண்ட இணையதளத்துக்கு செல்லுங்கள் தங்களுடைய ஊர்,கிராமம், தெருவின் அரசாங்க சொத்துமதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை
இதில் Guideline Value க்கு செல்லவும் பிறகுGuideline Values from 1-8-2007 கிளிக் செய்யவும் பிறகு உறிய மாவட்டம்பிறகு கீழ்கண்ட முறைப்படி உள்ளே செல்லவும்
உங்கள் தெருக்களுக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்

தொடர்ந்து குறிவைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள்

ஆஸம்கரில் இருந்து பர்ஸமேலாவை நோக்கி.....

கர்சலே ஹம் ஃபிதா ஜான்-ஓ-தன் ஸாதியோன் என அழகான தேச பக்தி பாடலை இயற்றிய கய்ஃபி ஆஸ்மியும் சுதந்திரப் போராட்ட வீரரான அல்லாமா ஷிப்லி நுஃமானியும் பிறந்த மாவட்டம் தான் ஆஸமகர்.

       ஆஸமகரை ஆதங்க் கர் (தீவிரவாத முகாம்) ஆக மாற்ற நடந்த சதித்திட்டமே 2008-ம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் சமபவம் ஆகும். எழுத்தாளர் பிரவீன் சுவாமியின் தலைமையில் உளவுத்துறையின் பேனா 4லி தொழிலாளர்களின் உதவியுடன் ஸராய்மீர் என்ற ஆஸமகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை குறிவைத்து நடத்தப்பட்ட அவதுறு பிரச்சார தாக்குதல்களின் இறுதிகட்டமாக பாட்லா ஹவுஸ் சம்பவம் அமைந்தது.

முழுவதும் படிக்க இந்த மாதம் விடியல்வெள்ளி மாதஇதழை வாங்கி படியுங்கள்.

முஸ்லிம்கள் என்றால் அந்நியர்களா?


இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமைக் குறித்து உண்மையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சாரின் தலைமையிலான ஏழு உறுப்பினர்களை கொண்ட உயர்மட்ட குழு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடந்த 2006 நவம்பர் 17-ஆம் தேதி சமர்ப்பித்தது.
முஸ்லிம்கள் என்றால் அந்நியர்கள
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகளை குறித்து விரிவான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2006 நவம்பர் 30-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சச்சார் கமிட்டி பரிந்துரைத்த சிபாரிசுகளின் அடிப்படையில் இந்தியாவில் மிகவும் பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் துயரமான நிலைமைகளுக்கு பரிகாரம் காண தேவையான சில நடவடிக்கைகளை மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் வாயிலாக அறிவித்தது.

எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான்!


டெஹ்ரான்: எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.
Jalili
மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி காட்டியது. இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் முன்னேறுமானால் சுதந்திர ஃபலஸ்தீன், அல்குத்ஸ் உள்ளிட்ட தங்களது அனைத்து லட்சியங்களையும் அவர்களால் அடைய முடியும் என்று அவர் கூறினார்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

பள்ளிவாசலில் பன்றிக்குட்டியை கொன்ற வீசிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்


சென்னை:-  புதுவண்ணாரப்பேட்டை மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் அமைந்துள்ள மஜ்ஸிதே மதினா பள்ளிவாசல் உள்புரம் கடந்த சனிக்கிழமை மாலை சமூக விரோதிகள் சிலர் பன்றிக்குட்டியை கொன்று அதன் உடலை பள்ளிவாசலில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டிய காவல்துறையினர் இச்சம்பவத்தை மூடி மறைத்த்தோடு மட்டுமல்லாமல் கண் துடைப்பிற்காக 12 முதல் 15 வயதிற்கு உட்பட சில சிறுவர்களை கைது செய்து பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.
   

முஸ்லிம் வேட்டை:கண்ணீரும், கண்டனங்களும் நிறைந்த அரங்காக மாறிய பொதுக்கூட்டம்!...


புதுடெல்லி: மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், காட்கோபர் குண்டுவெடிப்புகள், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர், கத்தீல் சித்திக்கியின் படுகொலை, ஃபஸீஹ் மஹ்மூதின் மர்மமான கைது… தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பு ஏஜன்சிகள் குறி வைத்து வேட்டையாடிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏற்பாடுச்செய்த பொதுக்கூட்டத்தில் கண்ணீர் கதைகளை கேட்டு அரசு மீது கோபக்கனல் வீசியது.
politics of terror- targeting muslim youths
உள்ளத்தில் அடக்கி வைத்த எதிர்ப்புகளையும், கவலைகளையும் கான்ஸ்ட்யூஸன் அஸெம்ப்ளி க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர் ஹாலில் திரண்டிருந்த மக்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்

புதுடெல்லி: எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் 
பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பல்வேறு விதமான கருத்தாலோசனைகளும்,விவாதங்களும் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

சென்னை: அனைத்து மத தமிழ் மன்றங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டார்.


சமீப காலமாக இலங்கையில் புத்த பிட்சுகள் வன்முறையை கையாண்டு வருகின்றனர். சமீப காலமாக பிறரது மத ஸ்தலங்களை சேதப்படுத்தி வரும் புத்த பிட்சுகளை இலங்கை அரசு கண்டு கொள்வதில்லை. சமீபத்தில் தம்புள்ளையில் மஸ்ஜிதை சேதப்படுத்தியதை தொடர்ந்து இந்து மத கோயில்களையும், கிறிஸ்தவ கோயில்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு வன்முறையில் ஈடுபட்ட புத்த பிட்சுகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதித்து வருகிறது.

திங்கள், 9 ஜூலை, 2012

முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யகோரி சென்னையில் கண்டன பொதுகூட்டம்


சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களது எழுச்சி உரை..

இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்ப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரும் ஒற்றை கோரிக்கை தொடர் பொதுக்கூட்டம் “விடுதலையை நோக்கி” என்ற தலைப்பில் எழுச்சி கருத்தரங்கமாக சென்னை லயோலா கல்லூரி பி. எட். ஹாலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் குனங்குடி அனீபா, 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தது


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்களை  பூர்த்தி  செய்து கொடுத்தது

       பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்களை  பூர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

குஜராத் இனப்படுகொலையில் சேதமடைந்த வழிப்பாட்டுத் தலங்களின் விபரம்: தாக்கல் செய்ய மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!



Gujarat shrines repair- Should taxpayer pay the bills
புதுடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய குஜராத் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

முஸ்லிம்களுக்கு வாடைக்குக் கூட வீடுகள் இல்லை – தலைநகர் டெல்லியில் அவலம்!


டெல்லி :- இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Residents of Haji Colony in Okhla, Delhi, face poor civic conditions and air pollution. This densely populated area, like some others, is predominantly Muslim
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மெட்ரோ ரெயில்:நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜித் கண்டுபிடிப்பு


டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜிதின் சிதிலங்கள் பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மெட்ரோ ரெயிலுக்காக நிலத்தை தோண்டிய வேளையில் மஸ்ஜிதின் சுவரும், சிதிலங்களும் முகலாய மன்னர் ஷாஜஹானின் காலத்தில் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜித் என கருதுவதாக தொகுதி எம்.எல்.ஏ ஷுஐப் இக்பால் தெரிவித்துள்ளார்.

1650-ஆம் ஆண்டு அக்பராபாதி பேகத்தின் பெயரால் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜிது குறித்து வரலாற்று ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. புனித திருக்குர்ஆன் முதன் முதலில் உருது மொழியில் இம்மஸ்ஜிதில் வைத்துதான் மொழிப் பெயர்க்கப்பட்டது.

இந்தியா நெக்ஸ்ட் புதிய ஹிந்தி மாதமிருமுறை வெளியீடு

"இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை 
 
ஜூன் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் அஞ்சும் நயீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் ," இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி என்ற போதிலும் அர்த்தமுள்ள நெறிமுறை சார்ந்த ஊடகத்தை நோக்கிய பயணத்தில் இது சீரிய முயற்சி" என்று கூறினார்.