நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 27 ஆகஸ்ட், 2011

ராஜீவ் படுகொலை:மூன்று பேரின் மரணத்தண்டனை அடுத்தமாதம் ஒன்பதாம் தேதி

புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

       இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரின் தண்டனை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலையில் நிறைவேற்றப்படும். இவ்விபரத்தை தண்டனைப் பெற்றோரிடம் அறிவித்துவிட்டதாக சிறை சூப்பிரண்ட் ஆர்.அறிவுடை தம்பி தெரிவித்துள்ளார்.
      ராஜீவ் படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் இம்மாதம் 11-ஆம் தேதி தள்ளுபடிச் செய்திருந்தார். இதுத்தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளதாக சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
     இதனைத் தொடர்ந்து தூக்கிலிடுவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முதல் கட்ட நடவடிக்கையாக சிறை அதிகாரிகள் தண்டனை விதிக்கப்பட்டோர் மீது ப்ளாக் வாரண்ட் உடனடியாக பிறப்பிப்பார்கள். மூவருக்கும் சிறையில் நடமாடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது. கருணை மனு சமர்ப்பித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு அதனை நிராகரித்த குடியரசு தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவார்கள் என கருதப்படுகிறது.
       1991-ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில் ராஜீவ் காந்தியை உடலில் கட்டிய குண்டுடன் வந்த இளம்பெண் அதனை வெடிக்கச்செய்து கொலைச் செய்தார். மேலும் 14 பேரும் இக்குண்டுவெடிப்பில் கொலைச் செய்யப்பட்டனர். தமீழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தினருக்கு உதவுவதற்காக படையை அனுப்பிய இந்தியாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ராஜீவ் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.
      ராஜீவ் படுகொலையின் பின்னணியில் தமிழீழ விடுதலைபுலிகள் செயல்பட்டது விசாரணையில் நிரூபணமானது.
     முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோர் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேரையும் தூக்கிலிட சிறப்பு நீதிமன்றம் 1998-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், 1999-ஆம் ஆண்டு இவர்களில் நான்குபேரின் மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது.
   நான்காவது நபரான நளினியின் மரணத்தண்டனையை பின்னர் நீதிமன்றம் விலக்கியது. சிறையில் வைத்து முருகனை திருமணம் புரிந்து தாயான இவருடைய மனுவை பரிசீலித்து மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்தது.
    தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இருவர் இலங்கையைச் சார்ந்தவர்கள் ஆவர். பேரரறிவாளன் இந்தியாவைச் சார்ந்தவர். இதற்கிடையே, பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மரணத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
     விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பினார். மரணத்தண்டனையிலிருந்து 3 பேரை விடுவிக்க சோனியா காந்தி உடனடியாக தலையிடவேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.