நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

இயக்கச் செய்திகள்


1.         கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு
கோழிக்கோடு : கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது
வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடையே சுதந்திரத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களிடையே நம்பிக்கையை விதைக்கும் தேசிய உணர்வை ஏற்படுத்தும் என பாப்புலர் ப்ரண்ட் தலைமை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் அது மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்ககூடியது அனைவராலும் விரும்பக்கூடிய நிகழ்ச்சியாகும். சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வெறும் சம்பிரதாயமாக பார்க்கப்பட்ட ஒரு சில அரசு அலுவலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த சுதந்திர கொண்டாட்டம் அடித்தட்டு மக்களால் தற்போது கொண்டாடப்படுவதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தையும் அணிவகுப்பையும் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என பாப்புலர் பிரான்ட் தலைமை மக்களை கேட்டுக்கொள்கிறது
கேரளாவில் மட்டுமின்றி கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கடந்த முன்று வருடங்களாக சுதந்திர தின கொண்டாட்டம் அணிவவகுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.




2.      மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது
பல அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு பலரை கடுமையாக காயமடையச் செய்த மும்பை குண்டுவெடிப்பை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது .
வருங்காலங்களில் இதுபோன்ற கொடூர தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து மும்பை தாக்குதலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் மும்பையை உலுக்கிய , அப்பாவிகளின் உயிரைக்குடிக்கக் கூடிய , நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்கும் தீவிரவாத பிரச்சினை இன்னும் தொடர்வதையும் இந்த புதியா தாக்குதல் எடுத்து காட்டுகிறது.
எனவே அவசரப்பட்டு அப்பாவிகளை கைதுசெய்துவிட வேண்டாம் எனவும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தீவிரவாதத்தின் மூளையாக செயல்பட்ட உண்மையாக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என காவல்துறையை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய கேட்டுக்கொள்கிறது .
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் சரியாக அறிவுறுத்தியபடி காவல்துறை ஊடகம் உட்பட சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அவதூறுகளை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் .
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் காயம் பட்டு உயிர்தப்பியவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

3.         ஆந்திர மாநிலத்தில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தள்ளுவண்டிகள் விநியோகிக்கப்பட்டது

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்  சமுதாய மேம்பாட்டுத் துறை பல்வேறு சமுதாய நலப்பணிகளை தேசிய அளவில் செய்து வருகிறது.  ஆந்திர மாநிலத்தில் பாப்புலர் பிராண்டின் ஆந்திர யூனிட் சார்பாக  ஏழை காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு அவர்களின் சுய தொழிலை ஊக்குவிக்கும் விதத்தில்  தள்ளுவண்டிகள் இலவசமாக நெல்லூர் குர்நூல் எம்மிக்நூர் அடோனி நந்தியால் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டது.   இதற்கான நிகழ்ச்சி குர்நூல் அலுவலக வளாகத்தில் 27-06-2011  அன்று நடைபெற்றது . பாப்புலர் ப்ரண்ட் தேசிய செயலாளர் யாசிர் ஹசன் மாநில தலைவர் முஹமத் ஆரிப் அஹ்மத் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் இன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
ஆந்திர மாநில யூனிட் தள்ளு வண்டிகள் விநியோகித்ததை சிலாகித்து பேசிய யாசிர் ஹசன் மனிதாபிமான சேவைகளில் பாப்புலர் ப்ரண்ட் என்றுமே முன்னணியில் நின்று செயல்பட்டு வருவதை ஆதாரங்களுடன்  விளக்கிக் கூறினார்
பாப்புலர் பிராண்டின் மாநில தலைவர் பேசும்போது வரும் ஒரு ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் இலவச கிளினிக்கள் நிறுவவும் மருத்துவ முகாம்கள் நடத்தவும் இரத்த தான குழுக்களை உருவாக்கவும் ஏழை குடும்பங்களுக்கு வட்டியில்லா  சிறு கடனுதவி திட்டத்தை செயல்படுத்தவும் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   
4.      பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 - ஒரு பார்வை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.
பாப்புலர் ஃப்ரண்ட் இத்தகைய சமூக மாற்றத்தை ஏற்படுத்த குறிப்பிட்ட சில சேவைகளையோ அல்லது நிவாரண உதவிகளை செய்வதால் மட்டுமே கொண்டுவர முடியாது என்று நம்புகிறது. மாறாக தனி நபரை சக்திபடுத்தலிருந்து அனைத்து மக்களும் பங்கேற்கும் நம் ஜனநாயக முறையை சக்திபடுத்து வரை போன்ற  பரந்து விரிந்த பல துறைகளிலும் கவனம் செலுத்துகிறது. இந்த சமூக மாற்றத்தை கொண்டு வருவதில் பாப்புலர் ப்ரண்ட் உறுதியாக நின்று செயல்படுகிறது. எனவே தான் சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்து போராட்டங்களிலும் முன்னனியிலிருந்து செயல்படுகிறது.
நாட்டின் அனைத்து கடைகோடிகளிலும் தன் தொண்டர்களை கொண்ட வெகு ஜன மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் இரண்டு முக்கிய அம்சங்களை அவதானிக்கிறது. முதலில், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மற்றபிற சமூகங்களுக்கு இணையாக சம நீதி கிடைக்கப்பெற வேண்டும். இரண்டாவது, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகத்தின் மக்களை அணிதிரட்டி தங்களது ஆற்றல்களை வளர்ச்சி திட்டங்களில் பால் முறையாக பயன்படுத்தவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட்டின் அனைத்து திட்டங்களும் இந்த இரண்டு அம்சங்களும் உள்ளடக்கி செய்யபட்டுவருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டங்கள் பலவற்றை தீட்டி, பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், மற்றும் இந்த திட்டங்களை செயல்படுத்துவோர்க்கு வழிகாட்டுதலும் வழங்கி வருகிறது.
1.      கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவித்தல்
Ø  ஸ்கூல் சலோ
Ø  சர்வசிக்க்ஷா கிராம் - முழு கல்வியறிவு பெற்ற கிராமத்திட்டம்
Ø  கல்வி வழிகாட்டுதல்கள்
Ø  கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
Ø  கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தல்
2.      வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் :
Ø  மாநில அளவிலான வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் இந்த ஆண்டில் 2011 ல் ஏற்படுத்துதல் மாவட்ட அளவிலான மையங்கள் அடுத்த ஆண்டு 2012 ல் தொடங்குதல்
Ø  பொதுமக்கள், கல்லூரியில் பயிலும் மாணவர்கள், படித்த பட்டதாரிகள், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் என அவரவர்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்கள் நடத்துதல்
Ø  அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விளம்பரம் செய்து அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க உதவுதல்.
Ø  போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
Ø  போட்டித்தேர்வுகளிலும் நேர்முகத்தேர்விலும்  வெற்றிபெற வல்லுநர்களைக்கொண்டு ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
Ø  ஆடைகள் தயாரிப்பு, தச்சு தொழில், கட்டிட தொழில், பிளம்பிங்க் மற்றும் வயரிங்க் போன்ற  பாரம்பர்ய தொழில் வளர்ச்சிக்கு சிறிய நிறுவனங்கள் நிறுவுதல்.
3.      சுகாதாரம்
4.     பொருளாதார வளர்ச்சி
Ø  இலவச ரேசன் பொருட்கள் வழங்குதல்
Ø  சுய வேலைவாய்ப்புத்திட்டம்
Ø  வட்டியில்லா சிறுகடன் உதவி திட்டம் :  சிறு வணிகர்களுக்கும் திறமையான தொழிலாளிகளுக்கும் வட்டியில்லாத சிறு கடனுதவிகள் வழங்குதல்.
Ø  தொழிற்பயிற்சி: தச்சு கட்டிட வேலை நெசவு கைவினைப் பொருட்கள் போன்ற பாரம்பர்ய தொழிற் திறமையுள்ளவர்கள் அவர்களின் தொழிலை ஊக்குவிக்கவும் நவீன கருவிகள் பயன்படுத்த கையாள் அவர்களுக்கு பயிற்சியளித்தல்
Ø  கூட்டுறவு சங்கங்கள் மூலம் குடிசைத்தொழில் பொருட்களை விற்பனை செய்தல்
5.       அடிப்படை வசதிகள்
Ø  குடிதண்ணீர் வழங்குதல் நீர் நிலைகளை பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு, பொதுக் கிணறுகள், ஆழ்துழை கிணறுகள், நீர் விநியோகம் செய்யும் அமைப்புகளை பாதுகாத்தல் போன்றவை செய்யப்படும்
Ø  ஏழை குடும்பங்களின் புனர்வாழ்விற்காக வீட்டு வசதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
Ø  குடிசைப்பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
Ø  பொதுக் கழிப்பிட வசதி அல்லது குறைந்த செலவில் குடும்பத்திற்கொரு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படும்.
Ø  அரசியல் மற்றும் நிர்வாக சபைகளின் உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டும், அரசுசாரா நிறுவனங்களின் துணைகொண்டும் சொந்த திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்தியும்,  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும் அடிப்படை வசதிகள் இல்லாதவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வழிமுறைகள் ஆராய்ந்து கண்டறியப்பட்டு உதவிகள் செய்யப்படும்
6.      பேரிடர் நிவாரணம்
Ø  முதல் உதவி செய்வதற்கான பயிற்சி
Ø  பேரிடர் மேலாண்மை பயிற்சி
Ø  நீச்சல் மற்றும் தீயணைப்புக்கான பயிற்சி
Ø  மீட்பு நடவடிக்கைகள்
Ø  நிவாரண பொருட்கள் சேகரிப்பது மற்றும் விநியோகிப்பது
Ø  மறுவாழ்வு பணிகள்
7.      கலாச்சார மேம்பாடு
Ø  பாதுகாக்கப்படவேண்டிய பழங்கால கையெழுத்து பிரதிகள் இதுவரை வெளியிடப்படாத அரிய வகை ஆவணங்களை பாதுகாக்க முயற்சி மேற்கொள்தல்
Ø  பாரம்பர்ய பழங்கால நூல்களை வெளியிடுவது
Ø  பாரம்பர்ய பாடல்கள் கவிதைகளை சேகரிப்பது
Ø  பாரம்பர்ய கலைகளில் பயிற்சி பெறுதல்
Ø  குழுவாக சேர்ந்து செய்யப்படும் கலை நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல்
Ø  கலாச்சாரம் பாரம்பர்யம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆவணப்படுத்துவது
8.      தன்னார்வ தொண்டர்களின் குழு ஒருங்கிணைப்பு
மேற்கூறப்பட்ட தேசிய அளவிலான விரிவான  சமுதாய மேம்பாட்டுத்திட்டங்களை செம்மையாக செயல்படுத்த அர்ப்பணிப்பும் தியாகமனப்பான்மையுள்ள தன்னார்வ தொண்டர்களின்  ஒருங்கிணைப்பு இல்லாமல் இது சாத்தியமாகாது. எனவே பாப்புலர் ஃப்ரண்ட் இதற்கான ஏற்பாட்டை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்துவதற்காக தொண்டர்களை தயார்படுத்தியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் மேல்மட்ட  தேசிய செயற்குழு முதற்கொண்டு கடைநிலை ஏரியா கவுன்சில் வரை சமூக மேம்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் முறைப்படி கண்காணிப்பார். குறிப்பிட்ட கால இடைவெளியில் திட்டத்தின் செயல்பாடு குறித்து  மீளாய்வு செய்வார். இந்த சிறிய அளவிலான மைக்ரோ திட்டங்களுக்கு தேவையான நிதியாதாரம் அந்தந்த பிராந்திய அளவில் அல்லது உள்ளூரில் திரட்டப்படும். பாப்புலர் ஃப்ரண்ட் கீழ்காணும் மனித வள மேம்பாட்டு நிகழ்சிகளை தொடர்ந்து நடத்தும்.
Ø  அந்தந்த ஏரியாக்களில் தன்னார்வ தொண்டர்களின் மாதாந்திர கூட்டம்
Ø  மூன்று  மாதத்திற்கொருமுறை மாவட்ட அளவிலான அரை நாள் அமர்வு
Ø  வருடத்திற்கொருமுறை மாநில அளவிலான பயிற்சி முகாம் (ரிஃப்ரெசர் கேம்ப்) ஆகியவை