நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கூட்டு போர் ஒத்திகை: அமெரிக்க டாங்குகள் இந்தியாவிற்கு வருகின்றன


புதுடெல்லி : கூட்டு போர் ஒத்திகைக்காக அமெரிக்க போர் டாங்குகள் முதன் முதலாக இந்திய மண்ணில் வருகிறது.
‘யுத் அப்யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகை இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ள பல்வேறு ராணுவ போர் ஒத்திகைகளின் துவக்கம்தான் ‘யுத் அப்யாஸ்’.
மூன்று போர் டாங்குகள் மற்றும் கவச வாகனங்களுடன் 200 அமெரிக்க ராணுவ வீரர்களும் இந்த கூட்டு போர் ஒத்திகையில் பங்கேற்பர். ஆனால், எந்த டாங்க் போர் ஒத்திகைக்கு வரும் என்பது குறித்து தகவல் இல்லை. டாங்குகளுடன் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.பி போர் வாகனங்களையும் இந்தியா களமிறக்குகிறது.
மார்ச்சில் நடைபெறும் போர் ஒத்திகைக்கு பிறகு ஜம்மு-கஷ்மீர் ரைஃபிள்ஸைச் சார்ந்த 130 ராணுவ வீரர்கள் கலிஃபோர்னியாவிற்கு செல்வர். ஏப்ரல் மாதம் நடைபெறும் ‘ஸத்ருஜித்’ என்ற போர் ஒத்திகையில் கலந்துக் கொள்வதற்காக இவர்கள் கலிஃபோர்னியா செல்கின்றனர்.
‘வஜ்ர ப்ரஹார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள மலை இடுக்குகளில் நடக்கும் ராணுவ பயிற்சிகளில் இரு நாடுகளைச் சார்ந்த சிறப்பு படை வீரர்கள் கலந்துக்கொள்வர்.
ஆகஸ்ட் மாதம் உத்தரகாண்டில் இன்னொரு கூட்டு ராணுவ போர் ஒத்திகை நடைபெறும். இந்தியா-அமெரிக்காவைச் சார்ந்த சிறப்பு படையினரில் தேர்வுச் செய்யப்பட்ட 60 ராணுவ வீரர்கள் வீதம் இந்த போர் ஒத்திகையில் பங்கேற்பர்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், கலவர எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெறுவதுதான் இத்தகைய கூட்டு போர் ஒத்திகைகளின் நோக்கமாகும். கடற்படையும் பல்வேறு போர் ஒத்திகைகளில் பங்கேற்கும்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் வரும் ஆண்டுகளிலும் போர் ஒத்திகைகள் நடைபெறும்.