நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

குன்டனாமோ சிறை மூடல் குறித்த எதிர்பார்ப்பு 10 ஆண்டுகளாய் தொடர்கிறது


கியூபாவிலுள்ள குன்டனாமோ விரிகுடா கடற்படை தளத்தில்  அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குன்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பான சிறையும், விசாரணை வசதியும் உள்ளது.
                                                                                         குன்டனாமோ சிறை


ஆப்கானிஸ்தான் போர்க்கைதிகளையும், பிறகு ஈராக் போர்க்கைதிகளையும் சிறை வைப்பதற்காக புஷ் நிர்வாகத்தினால் ஜனவரி 11, 2002 இல் இந்த முகாம் நிறுவப்பட்டது. 

சிறைப்பகுதி மூன்று முகாம்களைக் கொண்டுள்ளது.  அவைகள் டெல்டா முகாம், உடும்பு முகாம், எக்ஸ்ரே முகாம் ஆகியவையாகும். அதில் எக்ஸ்ரே  முகாம் மட்டும் மூடப்பட்டுள்ளது.

ஒரு கைதி அழைத்துச் செல்லப்படும் காட்சி
குன்டனாமோ, G-விரிகுடா, கிட்மோ, ராணுவ சுருக்கப் பெயரில் GTMO ஆகிய பெயர்களால் குன்டனாமோ விரிகுடா கடற்படை தளம் அழைக்கப்பட்டு வந்தது.

ஜெனிவா உடன்படிக்கை வலியுறுத்தும் எவ்விதமான சலுகைகளும் குன்டனாமோ சிறைக்கைதிகளுக்கு அளிக்க முடியாது என்று புஷ் நிர்வாகம் அறிவித்த பிறகு, ஹம்டன் V.ரம்ஸ்பெல்ட் விவகாரத்தில் ஜூன் 2006 இல் உச்ச நீதி மன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. ஜெனிவா உடன்படிக்கையின் பொதுவான விதிமுறைகள் பிரிவு 3 இல் கூறப்பட்டுள்ள குறைந்த பட்ச பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

அதைதொடர்ந்து, ஜூலை 7, 2006-இல் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் உள் அறிக்கையை வெளியிட்டது. அதில் எதிர்வரும் காலங்களில் குன்டனாமோ சிறை வாசிகளுக்கு பொதுவான விதிமுறைகள் பிரிவு 3 இல் கூறப்பட்டுள்ள குறைந்த பட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 22, 2009 இல் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, ஜனாதிபதி ஒபாமா குன்டனாமோ ராணுவ கமிசன் விசாரணையை 120 நாட்களுக்கு ஒத்திவைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் என்று தெரிவித்தது. மேலும், குன்டனாமோ முகாம் சிறைகள் ஒரு வருடத்திற்குள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஒபாமா ஜனவரி 7, 2011 இல் 2011 பாதுகாப்பு சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார். அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி குன்டனாமோ சிறைக்கைதிகள் வேறு முக்கிய நிலப்பகுதிகளுக்கோ, அந்நிய தேசத்திற்கோ பரிமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டது. இதனால் சட்ட விரோத சிறை வைப்பு முகாமின் மூடல் முறைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.