நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

லோகாயுக்தாவை கண்டு மிரளும் மோடி:காங்கிரஸ்


அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை ந‌ரேந்திர மோடி திட்டமிட்டு லோகாயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார்.


 
ஆனால் முதல்வர் நரேந்திரமோடி அதனை தடுக்கும் முயற்சியில் உள்ளார். அவர் லோகாயுக்தா என்றாலே மிரளுகிறார். லோகாயுக்தா சட்டத்தின் படி ஐகோர்ட் நீதிபதி பரிந்துரையில் பேரில் நீதிபதி ஆர்.ஏ. மெகதா என்பவரை லோகாயுக்தா நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வர் நரேந்திர மோடி அதனை தடுத்துவிட்டார். இந்நிலையில் முதல்வர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது வேடிக்கையானது என்றார்.