நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

ஜமாதுல் ஆஃகிர் & ரஜப் மாத நிகழ்வுகள்


ஜமாதுல் ஆஃகிர்
Ø  
இது இஸ்லாமிய காலண்டரின் 6வது மாதம்.

நிகழ்வுகள்:
Ø  
ஹிஜ்ரி 8ம் ஆண்டு ஸலாசில் யுத்தம் நடைபெற்றது.

மரணம்:
Ø  
அபூஸலமா (ரலி) அவர்கள் இந்த மாதத்தில் இறந்தார்கள்.


ரஜப்
Ø  
        இது இஸ்லாமிய காலண்டரின் 7வது மாதம்.ரஜபாஎன்ற பதத்திற்கு மரியாதை கொடுப்பதுஎன்று பொருள்படும். ரஜபா என்ற பதத்திலிருந்துதான் ரஜப் என்ற வார்த்தை வந்தது.

நிகழ்வுகள்:

பிறை 27ல் (ஞாயிறு அல்லது திங்கள்) இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை (மிஃராஜ்) சென்றார்கள்.

  
ஹிஜ்ரி 5ம் ஆண்டு ஹஸ்ரத் பிலால் இப்னு ஹாரிதா (ரலி) அவர்கள் பனூ முதீனா என்ற கோத்திரத்தாரில் 400 பேரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் அழைத்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

ஹிஜ்ரி 9ம் ஆண்டு தபூக் யுத்தம் நடைபெற்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த இறுதிப் போர் இதுதான்.

ஹிஜ்ரி 12ம் ஆண்டு இரண்டாவது அகபா உடன்படிக்கை ஏற்பட்டது.


மரணம்:
Ø  
  ஹிஜ்ரி 150ம் ஆண்டு பிறை 15ம் நாள் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் மரணமெய்தினார்கள்.
  ஹிஜ்ரி 204ம் ஆண்டு பிறை 14ம் நாள் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மரணமெய்தினார்கள்.
  ஹிஜ்ரி 261ம் ஆண்டு பிறை 24ம் நாள் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் மரணமெய்தினார்கள்.
  ஹிஜ்ரி 677ம் ஆண்டு பிறை 14ம் நாள் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் மரணமெய்தினார்கள்.