நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 13 மார்ச், 2012

‘யே முல்க் ஹமாரா நஹீ ஹை’ – உணர்ச்சி வசப்பட்ட ஷப்னம் ஹாஷ்மி!


புதுடெல்லி : ’யே முல்க் ஹமாரா நஹீ ஹை’ (இந்த தேசம் எங்களுடையது அல்ல)- இதனை கூறி தனது உரையை முடிக்கும் வேளையில் உணர்ச்சி வசப்பட்ட சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தார்.
shabnam hashmi
இஸ்ரேல் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரைகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஆர்வர்லளுடன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ஷப்னம் ஹாஷ்மி, நாங்களும் இணைந்து பணியாற்றியதன் மூலம் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடமிருந்து உருவான பயங்கர அனுபவங்களை குறித்து விவரிக்கும் பொழுது கண்ணீர் வடித்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸும், அமெரிக்க ஏஜண்டுகளும் உள்துறை அமைச்சகத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை சகிக்க முடியாமல் 2004-ஆம் ஆண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.எ) அரசு ஆட்சிக்கு வராமலிருக்க களத்தில் இறங்கி நாங்கள் உழைத்தோம். தற்போது பிரபலமான மூத்த பத்திரிகையாளரை கைது செய்தபோது அதை நினைத்து வெட்கம் தோன்றுகிறது என்று ஷப்னம் கூறுகிறார்.
டெல்லி ஸ்பெஷல் பிரிவை கட்டுப்படுத்துவது மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய அரசும் ஆகும். அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ராஜினாமா செய்யட்டும்.
இந்திய நாட்டில் முஸ்லிம் பெயரை சுமப்பதே பெரிய குற்றமாக மாறி உள்ளது. முஸ்லிமாக பிறப்பதே ஒரு குற்றமாக மாறிவிட்டது.      இந்தியாவில் வாழும் முஸ்லிம் தாய்மார்கள் தங்களது மகன் மாலையில் வீடு திரும்புவது குறித்து உறுதியில்லாமல் இருக்கின்றார்கள். இத்தகையதொரு நாட்டில் எவ்வாறு வாழ முடியும் என்று அவர்கள் ஆதங்கப்படுகின்றார்கள்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்களின் உயிரை அளித்த இவ்வளவு பெரியதொரு மக்கள் சமூகத்தை இவ்வாறு கொடுமைப்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ஷப்னம், இந்த நாடு இன்று எங்களுடையது அல்ல என்று நான் துக்கத்துடன் கூறும் நிர்பந்தம் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமீர்கான் அண்மையில் குற்றமற்றவர் என கூறி விடுதலைச் செய்யப்பட்டார். 14 ஆண்டுகளுக்கு பிறகும் எவ்வித ஆதாரமும் அவருக்கு எதிராக கிடைக்காததால் விடுதலைச் செய்யப்பட்டார். இதைப்போல ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன. இக்காரியத்தில் டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீஸ் பிரசித்திப் பெற்றது. கஸ்மியின் விவகாரத்திலும் இதுதான் நிகழ்ந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக பத்திரிகை துறையில் பணியாற்றிய நபர்தாம் கஸ்மி. தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் ஆபத்தான சூழலிலும் ஈராக் போர் உள்பட சர்வதேச நிகழ்வுகளை கஸ்மி ரிப்போர்ட் செய்துள்ளார். அவருடைய பெயர் ராம் கிஷன் என்று இருந்தால் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். இந்த உண்மையை எவராலும் மறுக்கவியலாது. ஒரு பத்திரிகையாளராக இருந்த போதிலும் கஸ்மிக்காக களமிறங்க பலரும் தயாரில்லை.
2008-ஆம் ஆண்டு அன்ஹத் தலைமையில் நடந்த தீர்ப்பாயத்தில்(ட்ரிப்யூனல்)பல விபரங்களை வெளிக் கொணர்ந்தோம். பெயர் முஸ்லிம் என்பதால் மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தகவல்கள் இதன் மூலம் வெளிவந்தது. இவர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களும் முக்கிய பங்கினை வகித்தது தெரியவந்தது. கஸ்மியின் விவகாரத்தில் ஊடகங்களின் விசாரணை முடிவுக்கு வராவிட்டால் போராட்டம் சிரமமாக இருக்கும். பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்களில் இருந்து போலீஸ் உங்களுக்கு அளிக்கும் செய்திகளை பத்திரிகைகளில் அச்சடிக்கும் முன்னர் ஒவ்வொரு வார்த்தையையும் படித்துப் பாருங்கள் என்று ஷப்னம் ஹாஷ்மி கோரிக்கை விடுத்தார். ஆனால், சங்க்பரிவாரின் பயங்கரவாத நெட்வர்க் தொடர்பாக சேகரித்த எந்த செய்திகளும் ஒரு போதும் வெளியிடப்படுவதில்லை என்று ஷப்னம் ஹாஷ்மி நினைவுக் கூர்ந்தார்.