நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் கலவர பூமியில் தீவிரமாக பணியாற்றும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள்!

கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.
Rehab india volunteers working Actively in Assam relief camps2

இந்த முகாம்களில் 3,20,750 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரச்சனைகளால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 20 முகாம்களில் ரிஹாப் சேவைத் தொண்டர்களால் செல்ல இயலவில்லை. ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

  ரிஹாப் இந்தியா பவுண்டேசன் பொதுச் செயலாளரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஒ.எம்.அப்துல் ஸலாம் முகாம்களில் நடைபெறும் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார்.

தினமும் 150 ரிஹாப் தொண்டர்கள் சேவை களத்தில் பணியாற்றி வருகின்றனர். முதல் கட்டமாக உணவு, துணிகள், மருந்து ஆகியவற்றை முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பதே தங்களுடைய பணி என்று ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறுகிறார். அத்துடன் அகதி முகாம்களில் தங்கியிருப்போர் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிச் செல்லவும், அவர்களுடைய மறுவாழ்வுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வோம் என அவர் தெரிவித்தார்.
சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது, தற்காலிக ஷெல்டர்களை அமைப்பது ஆகிய பணிகளை ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
காணாமல் போனவர்கள், மரணம், வன்முறை, வீடு சேதம், இதர அத்துமீறல்கள் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய சட்ட உதவிக்குழு, மருத்துவ சேவைக்கு டாக்டர்கள், பார்மஸிஸ்டுகள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோரின் சேவையையும் ரிஹாப் அளித்து வருகிறது.