நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 10 செப்டம்பர், 2012

கூடங்குளம்​:போலீஸ் பயங்கரவாதம் ​-தெஹ்லான், நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்!


திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது அராஜக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுஅப்பகுதியை கலவரக் காடாக மாற்றியுள்ள தமிழக ஜெயா அரசின் காவல்துறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம்​-போலீஸ் பயங்கரவாதம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணு உலையை அப்பகுதியில் அமைக்க அரசு தீர்மானித்ததில் இருந்தே கூடங்குளம் சுற்று வட்டார மக்கள் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இப்போராட்டம் அமைதி வழியில் தொடர் போராட்டமாக நடைபெற்று வந்தது. கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கினால் தங்களுக்கும், தங்களது எதிர்கால சந்ததியினருக்கும், தங்களது வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்ச உணர்வே இப்போராட்டம் வீரியத்தோடு தொடர்வதற்கு காரணமாகும். இந்த அச்சத்திற்கு யதார்த்தமான காரணங்கள் உள்ளன.
இவ்வாறு அமைதி வழியில் போராடிய மக்கள் அதன் ஒரு பகுதியாக நேற்று(09/09/2012) முதல் முற்றுகைப் போராட்டத்தை துவக்கி அதனை அமைதியான வழியில் சத்யாகிரக போராட்டமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் மீது இன்று தமிழக காவல்துறை கொடூரமாக தடியடி மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் பலர் காயமடைந்துள்ளனர். இடிந்த கரை பகுதி கலவரக் காடாக மாறியுள்ளது. இந்த தாக்குதல் ஜனநாயக விரோதமானது. கண்டிக்கத்தக்கது. இந்த அசாதாரண சூழ்நிலைக்கு அரசே பொறுப்பேற்கவேண்டும்.
மக்கள் போராட்டங்களை அடக்குமுறையில் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்ற வரலாற்று உண்மையை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
அரசு இடிந்தகரைப் பகுதியில் தனது ஜனநாயக விரோத நடவடிக்கையைகைவிட்டு மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான சூழலை உருவாக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடுகூடன்குளத்தில் நடைபெறும் அக்கிரமத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெஹ்லான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் ஒரு சிறு அளவு வன்முறைக்குக் கூட இடந்தராமல் அவர்கள் கட்டுப்பாடோடும் அமைதியோடும் அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.  தங்களுடையநியாயமான அச்சத்தைப் போக்குவதற்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை என்பதனால் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள்.  5000 பேருக்கு மேல் பங்கெடுத்துக் கொண்டஇந்த முற்றுகைப் போராட்டமும் அமைதியாக நடந்தது.  அமைதியாக போராடிய மக்கள் மீது இன்று மிகக்கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ளசனநாயக உரிமைகளுக்கு  எதிரானதாகும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை. அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. அப்படி இருந்தும் காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில்போராடி வந்த பொதுமக்கள் மீது இன்று தடியடி நடத்தி, கண்ணீ ர் புகை குண்டு வீசி, துப்பாக்கிச் சூட்டை காவல்துறை நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
பல நூறு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்ட அமைதிவழிப் போராட்டத்தை இத்தகைய அடக்குமுறை மூலம் நசுக்குவது என்பது ஏற்புடைய செயல் அல்ல. காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கடலுக்குள் குதித்த பலரது கதியும் என்ன என்று தெரியவில்லை? அவர்கள் உயிரோடு உள்ளனரா? என்பதும் தெரியவில்லை.  இதேபோல் செய்தியாளர்கள் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது. அமைதி வழியில்தான் நடத்தப்பட்டும் வருகிறது. கடந்த ஓராண்டாகவும் ஜனநாயக வழியில் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அணு உலைக்கு எதிராக போராடுவோரின் அச்சத்தை நியாயமான வகையில் போக்க வேண்டுமே தவிர இப்படியான அடக்கு முறைகளின் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கக் கூடாது.  கூடங்குளம் சுற்று வட்டாரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான போலீசாரை திரும்ப வரவழைப்பதுடன் அறவழியில் போராடும் பொது மக்களின்அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் எதிர்கால வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாழ்பட்டுவிடும்என்ற அச்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அந்த பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.