நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஷிண்டேவின் முரண்பட்ட கருத்துகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு.சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் பி.ஜே.பி குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து பின்வாங்கும் விதமாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் “சிந்தன் சிபிர் கூட்டத் தொடரில்” கருத்துக்களை வெளியிட்டிருப்பதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

மாலேகான் தொடங்கி சம்ஜவ்தா குண்டுவெடிப்புகள் வரை நடத்தியவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடுவதற்கு இன்னும் பொருத்தமான வார்த்தைகளை வேண்டுமானால் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நூற்றுக்கணக்கனோர் படுகாயமடைவதற்கும், கொல்லப்படுவதற்கும் காரணமான இக்கொடூரகுற்றங்களுக்கு பின்னால் ஹிந்துத்துவவாதிகளின் கைகள் இருப்பதனை மறைக்க இயலாது .

சங்பரிவாரங்களின் குற்றங்களுக்கு எதிரான ஒப்புக் கொள்ளப்படும் சாட்சியங்களை ஆவணப்படுத்தியோடு, ஆர்.எஸ்.எஸ் ஸின் சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்களை இயக்கும் குழுக்களையும் (நெட்வொர்க்) தேசிய துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் யு.பி.ஏ அரசும், அதன் உயர்மட்ட தலைவர்களும் சங்பரிவாரத்தின் நெருக்கடிகளுக்கு அடிபணிந்தது எதிர்பாராததாகும். இத்தகைய அந்தர்பல்டிகள் இந்திய தேசிய காங்கிரஸின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மீது அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். மேலும் அரசியல் திரைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்க முனையும் புலனாய்வு அதிகாரிகளுக்கு இத்தகைய நிகழ்வுகள் தடையாகவே அமையும்.

இப்படிக்கு

மக்கள் தொடர்பு அதிகாரி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 
தலைமை அலுவலகம்
புது தில்லி.