நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 2 மார்ச், 2013

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் . 

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் நேற்று(01.03.2013) கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் எ. முஸ்தபா தலைமை வகித்தார். மாநில செயலாளர் வி.எம். அபுதாகிர் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.இதில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் கோவை ரவிக்குமார், திராவிடர், திராவிடர் விடுதலை கழகம் தோழர் பன்னீர் செல்வம், தமிழர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்மணி, கொங்குநாடு அருந்ததியினர் முன்னேற்ற பேரவை தோழர் இளங்கோவன், சமத்துவ முன்னணி தோழர் மு. கார்க்கி, பொதுநல மாணவர் எழுச்சி தோழர் மு. பார்த்திபன், தலித் விடுதலை கட்சி மாநில செயலாளர் தோழர் களப்பிரார்,

 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ. முஹம்மது சலீம், எஸ்.டி.டி.யு (சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் )மாநில செயலாளர் அப்துல் கரீம், நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் தோழர் பேரா. கல்யாண சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் அ. தென்னரசு, தமிழ் தேசிய வழக்கறிஞர் பேரவை தோழர் சி. முருகன், தமிழ் தேச புரட்சி இயக்கம் செய்தி தொடர்பாளர் தோழர் ப. சங்கர வடிவேலு, தமிழ் புலிகள் தோழர் இளவேனில், ஆதித்தமிழர் பேரவை, மாநில நிதி செயலாளர் தோழர் நீலவேந்தன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோழர் மதுக்கரை கிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட துணைத் தலைவர் தோழர் டி. சிவக்குமார் மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடதிய 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.