நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 7 மார்ச், 2013

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து பாப்பலர் ஃப்ரண்ட் நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.

சென்னை :-  கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடந்த ஊர்வலத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள்.

இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜாசேகர் நடந்துள்ளார். இந்நிலையில் பதட்டம் நீடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 25.02.13 அன்று அதே பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கையாலாமல் அமைதிக்கூட்டத்தை அடையாளத்திற்காகவும், பொய்வழக்குகளிட்டு, சோதனைச்சாவடி அமைத்து அடக்குமுறையை ஏற்படுத்தி இரு தரப்பினரக்கு இடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், தங்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காது நாங்களும் குடிமக்களா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து வி.களத்தூர் மக்கள் கடந்த 25.02.13 அன்று ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர்.

இதனையொட்டி " தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்படும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்தும் , தமிழக அரசு நேரடியாக தலையிட்டு இருசமூகத்தினருக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதோடு, முஸ்லிம் விரோத போக்குடன் நடக்கும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் RDO ரேவதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , முஸ்லிம்கள் மீது பொய் வழக்கிட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி " பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (07.03.2013) காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இத்தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார் . மாநில செயலாளர் எஸ்.இல்யாஸ் வரவேற்புரையாற்றினார் .

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் P.காலித் முஹம்மது , வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் T.E.S.லியாகத் அலி, செயலாளர் சர்புதீன் மற்றும் நிர்வாகிகள் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சேகுவேரா , சமூக ஆர்வலர் T.S.S.மணி , SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் S.M.ரபீக் அஹமது , இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவர் M.I.முஹம்மது முனீரி , இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் A.K.முஹம்மது ஹனீபா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக் , தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் K.M.ஷெரீப் , ஜம்இய்யத் உலமா பொதுச்செயலாளர் முஹம்மது மன்சூர் காஷிபி , இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் பொதுச்செயலாளர் G.M.தர்வேஸ் ரஷாதி , இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் M.G.K.நிஜாமுதீன் , உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் S.சத்திய சந்திரன் , உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ச.ரஜினிகாந்த் மற்றும் வழக்கறிஞர் கேசவன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள் .

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் M.நாகூர் மீரான் நன்றியுரையாற்றினார். 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் எஸ்.இல்யாஸ்
சமூக ஆர்வலர் T.S.S.மணி
இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் A.K.முஹம்மது ஹனீபா
வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் T.E.S.லியாகத் அலி
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்
உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் S.சத்திய சந்திரன்
வழக்கறிஞர் கேசவன்
ஜம்இய்யத் உலமா பொதுச்செயலாளர் முஹம்மது மன்சூர் காஷிபி
கண்டன முழக்கங்கள் எழுப்பிய போது