நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கருத்து சுதந்திரம்:இதனை முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்துவது ஏன்?




அமெரிக்காவை சேர்ந்த அமீனா வதூத் என்பவர், ஆண்களைப் போல பெண்களும் இமாமாக இருந்து தொழுகை நடத்தலாம்,
இதுவரை இஸ்லாத்தில் யாரும் செய்யாத,ஆண்களும் பெண்களும் இரண்டரக் கலந்து தொழ வைப்பது, பெண்களைக் கொண்டு தொழுகைக்கான அழைப்பான 'பாங்கு' சொல்வது, ஜுமுஆ (வெள்ளிக்கிழமை) தொழுகைக்கு இவரே சொற்பொழிவை ஆற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு முஸ்லிம்களை வழிகெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது தவிர, al.fatiha foundation,gaymuslim organisation என்கிற இரண்டு அமைப்புகளோடு இணைந்து இயங்குகிறார் அமீனா.


இந்த அமைப்புகள் முற்போக்கு, பெண்ணுரிமை,தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் லெஸ்பியன், கே செக்ஸ், பாலின மாற்றம் போன்ற செயல்களுக்கு ஊக்கம் அளித்து வருபவை. இந்த அமைப்புகள் அமீனாவிற்கு நிறைய விருதுகளும் வழங்கி இருக்கின்றன. இந்த அமைப்புகள் அமேரிக்கா பெர்க்ளியை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றன. 
என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.Sisters in Islam, என்ற அமைப்பை நடத்தி வரும் அமீனா, 

  (29/07) அன்று  சென்னையிலுள்ள "மெட்ராஸ் யூனிவெர்சிட்டி"யில் சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் ‘தலைப்பில் உரை நிகழ்த்தவிருந்தார்.மேலும் பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது இதற்காக, கேரள மாநிலம் கோழிக் கோட்டிலிருந்து சென்னை வரவிருந்த அவரை நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என 28/07 அன்று இரவு, பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் கேட்டுக் கொண்டார்.சர்ச்சைக்குரிய அமீனாவின் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்றால் 'சட்டம் ஒழுங்கு' பிரச்சினை உண்டாகும் என உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார், ஆர்.தாண்டவன்.


சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். 
60 வயது அமீனா, தனது 20வது வயதில் இஸ்லாத்தை ஏற்றாலும், கடந்த 2005 முதல் பெண்ணுரிமை என்ற பெயரில் இஸ்லாத்துக்கு எதிரானா கருத்துக்களை கூறி வருகிறார்.முதல் முதலாக 100 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு, இமாமாக முன் நின்று தொழுகை நடத்தி பிரச்சினைகளை உண்டாக்கிய அவரது செயலைக் கண்டித்து, அமெரிக்காவின் எந்த பள்ளியிலும் (இஸ்லாமிக் செனட்டர்களிலும்) அவர் அனுமதிக்கப்படுவதில்லை.பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை


இதனால் எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,மனித உரிமை போராளிகள் என பலதரப்பும் கொந்தளித்து விட்டது. டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.அதில்


முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.சென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று கண்டன றிக்கையுடன் கலந்த கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.இதில் பிரபல எழுத்தாளர்களும்,பத்திரிக்கையாளர்களும்,மனித உரிமை தளத்தில் இயங்கும் தோழர்களும் அடங்குவார்கள்.


இவர்கள் அனைவரும் கேட்கின்ற கேள்வி என்னவெனில் சரியோ அல்லது தவறோ ஆமினாவதூத் அவர்களுடைய கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது.கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும்.அடக்குமுறைகளால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது கண்டிக்க தக்கது.அதை அணுவளவும் ஏற்க முடியாது என்பதே.


இஸ்லாம் என்ற கொள்கை தெளிவாக 1400 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இன்றுவரை அதனை நம்புகின்ற மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.அதனுடைய அடிப்படையான இறையியல் கொள்கையில் எந்த விதமான சமரசத்தையும் செய்து கொண்டதில்லை.உலக இறுதிவரை அந்த கொள்கை மாறப்போவதுமில்லை.

ஒரு கொள்கை வெல்லுமா?அல்லது தோல்வியை தழுவுமா? என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய விசயம்.ஆனால் அக்கொள்கை மனித குலத்துக்கு ஆபத்தான கருத்துக்களை சொல்கிறதா?அல்லது மனித குலம் வாழ்வதற்கான கருத்துக்களை சொல்கிறதா? என்பதனை மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் தோழர்கள் சற்று சீர் தூக்கி பார்க்க வேண்டும்.



ஒரு கொள்கையையானது ஏற்றுக்கொண்டவர்களின் செயல்பாடுகளை வைத்து தான் நடைமுறைக்கொள்கையாக மாற்றப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.அதன்படி இஸ்லாம் மனித குலத்துக்கான அத்துணை பிரச்சனைகளுக்கும் தீர்வை கடந்த 1400 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது.இப்படி 
இஸ்லாம் கூறும்இறையியலை,ஒழுக்கவியலை,அரசியலை,குடும்பவியலை ,அறிவியலை ஆய்வு செய்து நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லீம் என அழைக்கப்படுவார்கள்.பெயர்களையும் அந்த நம்பிக்கைக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்வார்கள்.இறுதி தூதர் முஹம்மது (இறைவன் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவர்களை வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்வார்கள்.செயல்படுத்துவதில் உள்ள குறைகளை வேறு ஒருமுறை விவாதிப்போம்.


அதே சமயம் இஸ்லாம் கூறும் இறையியல்,ஒழுக்கவியல்,அரசியல்,குடும்பவியல்,அறிவியல் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் அல்லது ஆய்வு செய்தும் இஸ்லாமிய வாழ்வியல் சட்ட நெறிகளை ஏற்றுக்கொள்ளாமல் தமது பெயரில் மட்டும் இஸ்லாத்தினை வைத்துக்கொண்டு இஸ்லாமிய கருத்துக்கு மாறாக செயல்படுகிறவர்களையும்,,மாற்றமாக பிரச்சாரம் செய்பவர்களையும் முனாஃபிக் அதாவது நயவஞ்சகர்கள் என்று இஸ்லாம் கருதுகிறது.


இஸ்லாத்தை பொறுத்தவரை மார்க்கத்தில் கட்டாயம் என்பது இல்லை.இஸ்லாம் கூறுகின்ற கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் அவர்கள் இஸ்லாத்தில் இணைய வேண்டிய அவசியமில்லை.இணைந்து விட்டு இஸ்லாத்தை குழப்பவேண்டிய அவசியமில்லை.ஆமினா வதூத் அவர்கள் இஸ்லாத்தை தூய்மைபடுத்த வேண்டிய மார்க்கம் என கருதினால் அதில் ஏன் இணைய வேண்டும்.?தூய்மையான மார்க்கம் எது என கருதுகிறாரோ அதில் அவர் இணைந்து கொள்ளலாமே ?யாரும் தடுக்க வில்லையே?



இன்றைய சூழலில் முஸ்லீம்களாக கருதிக்கொள்கிறவர்கள் தம்மை தூய்மைபடுத்துவதை விட்டு விட்டு,இஸ்லாத்தை தூய்மை படுத்த முற்படுவது தான் இது போன்ற குழப்பங்களுக்கு காரணம். ஆமினா வதூத்தை விட இறைத்தூதரின் மனைவி ஆயிஸா (ரலி) அனைத்து விஷயத்திலும் உயர்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஆயிஸா (ரலி) பெண்களை கூட்டுத்தொழுகையின் இமாமாக முன்னிருத்தவில்லை.ஆண்களும்,பெண்களும் ஓரணியில் ஒன்றாக கலந்து தொழுகலாம் என ஃபத்வா விடவில்லை.ஒரினச்சேர்க்கைக்கு ஆதரவு தர வில்லை.காரணம் இஸ்லாமிய கொள்கை அதனை அனுமதிக்க வில்லை.



ஏன் அன்றைய சஹாபி பெண்மணிகள் இஸ்லாத்தின் கொள்கைகளை நிலைநாட்ட செய்த தியாகத்தில் சிறிதளவை கூட ஆமினா வதூத் நிறைவு செய்திருக்க மாட்டார்.அப்படிப்பட்ட சஹாபி பெண்மணிகள் கூட தொழுகை முறையை மாற்றவில்லை.ஆனால் ஆமினா வதூத் அதை மாற்ற முயல்கிறார். 






தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கின்றன. 


எனவே உண்மையில் ஆமினா வதூத் விமர்சிக்க வேண்டியது இஸ்லாமிய கொள்கை பற்றி அல்ல.அவர் முஸ்லீம்களின் செயல்களை சீர்திருத்தம் செய்வதே பொறுத்தமாக இருக்கும்.ஏனெனில் இஸ்லாமிய கொள்கையில் குறை இல்லை என்ற போதும் பின்பற்றும் முஸ்லீம்களிடம் குறைகள் உண்டு.எனவே அதை பற்றி அவர் விமர்சனத்துக்கு அழைப்பு விட்டிருந்தால் குறையுள்ள முஸ்லீமும் ஆதரவு தந்திருப்பார்.


இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் கூட குறை நிறைகளை பகிரங்கமாக வீதியில் விவாதிப்பதை காண்கிறோம்.அவர்களின் விவாதம் பலருக்கு எரிச்சலை தரலாம்.ஆனால் மார்க்கம் அனுமதித்தை முன்னிருத்திதான் குறை நிறைகளையும்,மாற்று கருத்துக்களையும் விவாதிக்கிறார்கள்.இது போன்று பகிரங்கமான விவாதத்தை எந்த சமூகத்தாலும் செய்யமுடியாது.காரணம் இஸ்லாம் அதன் கொள்கையில் எந்த மாறுதல்களையும் செய்ய சமரசம் செய்ய வில்லை.ஆனால் மற்றவை மாறுதலுக்குட்பட்டவை.மாறுதலுக்குறியவை.எனவே இஸ்லாத்தின் கொள்கைகளையும் மற்றவை போல் மாற்ற வேண்டும் என துடிக்கின்றனர்.இஸ்லாத்தின் கொள்கை மாற்றப்பட்டால் அது இஸ்லாம் அல்ல.



இஸ்லாத்தை புணரமைக்க போகிறேன் எனக்கூறும் ஆமினா வதூத் போன்று முந்தைய காலத்தில் பேரரசர்அக்பர் தீன் இலாஹி என்ற புது மார்க்கத்தை உண்டாக்கினார்.அதனால் அக்பர் புகழப்பட்டார்.சல்மான் ருஷ்தி,தஸ்லீமா நஸ்ரின் ஆகியோர் இவ்வரிசையில் உள்ளவர்களே.இஸ்லாத்தையும் அதன் அடையாளங்களையும் துறக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் இஸ்லாத்தின் பார்வையில் நயவஞ்சகர்கள்.ஆனால் தற்போதைய உலகியல் பார்வையில் அவர்கள் தான் அறிவு ஜீவிகள்.



மேலும் இந்த கருத்தரங்கை நடத்துவதற்கு காவல் துறை தடை விதித்ததும்,சில முஸ்லீம் அமைப்பினர் தடை விதிக்க கோரியதும் தவறு என்கிறார்கள். நான் கேட்கிறேன்.நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில் தானே.கருத்தரங்கை நடத்தவும்,ஆமினா வதூதை அழைக்கவும் அவர்களுக்கு உரிமை இருந்தது போன்று,அந்நிகழ்ச்சிக்கு ஜனநாயக பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததில் என்ன தவறு உள்ளது என தெரியவில்லை.ஆமினாவதூத் நிகழ்ச்சி ரத்தானதை கண்டிக்கும் தோழர்கள் இதர விசயங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்.

ராஜபக்சேவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காட்டலாம்,மறியலில் ஈடுபடலாம்,தமிழகத்துக்கு இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் வருகை தந்தால் கருப்புக்கொடி காட்டலாம் தவறில்லை.கூடன்குளம் விவகாரம் சம்பந்தமாக தவாறான கருத்துகூறியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடலாம்.தவறில்லை


பாரதீய ஜனதா கட்சி மறியல் எனும் பெயரால் பொதுமக்களை கொல்வதும்,அரசு சொத்துக்களை சேதப்படுத்துவதும் தவறல்ல.ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.காரணம் நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.இது ஜனநாயக போராட்டம்.ஆனால் ஆமினா வதூத் வருகைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.எதிர்ப்பு தெரிவித்தால் அது அநாகரீகம் என்கிறார்கள்


சிவசேனை தலைவர் பால்தாக்கரே மனிதகுலத்துக்கு எதிரான சிந்தனை கொண்டவர்.குறிப்பாக தமிழின விரோதி.பம்பாயிலே தமிழர்களை அடித்து விரட்டியது சிவசேனா.அது வேறு விசயம்.ஆனால் இந்த பால்தாக்கரே மரணத்துக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டது.தேசத்தை பலகூறாக பிரிக்க நினைத்தவர்க்கு தேசிய கொடி.காரணம் கேட்டால் அவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் என்றது மஹாராஸ்டிரா அரசு.

அதுபோல் தான் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிராக இயங்கும் ஆமினா வதூதை கருத்தியல் போர்வையில் ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆமினா வதூத் முன்வைக்கும் தவறான கொள்கையினால் சின்னாபின்னமாவது இஸ்லாமிய கலாச்சாரம் என்பதால் அவர்கள் எதிர்க்கிறார்கள்.நியாயப்படி பார்த்தால் ஆமினா வதூத் வருகைக்கு அனைத்து எழுத்தாள தோழமைகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.ஆனால் நடந்ததோ வேறு....
நன்றி :
vaigaitimes.blogspot.com/