நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சுதந்திர தினத்தில் வீண் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறை........


கடையநல்லூர், ஆக.15-


சுதந்திரதினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அணிவகுப்பு நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதுதொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போலீசாருடன் பேச்சிவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்களுக்கு அனுமதி வழ ங்கப்படவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தலாம் என்று கருதப் பட்டது. இதனால் அணி வகுப்பு நடத்த அனுமதி கேட்டிருந்த இடங்களில் போலீசார் நேற்றே குவிக்கப்பட்டனர்.




நெல்லை மாவட்டத்தில் பாளை மேலப்பாளையம், கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4மணி யளவில், கடையநல்லூர் மெயின்ரோட்டில் உள்ள காயிதேமில்லத் திடலில் இருந்த ஒரு கொடிக்கம்பத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் பிடுங் கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து கொடிக்கம்பத்தை பிடுங்கி எடுத்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அவர்களோ, இது நாங்கள் வைத்த கொடிக்கம்பம்தான் என்று கூறி கொடிக்கம்பத்தை பிடுங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜமீம் மற்றும் அதிரடிப்படை போலீசார் வந்தனர். கொடிக்கம்பத்தை பிடுங்கியவர்களுடன் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்பு அவர்கள் கொடிக்கம்பத்தை பிடுங்குவதை விட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந் நிலையில் இன்றுகாலை, கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் முன்பு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் புதிய கொடிக்கம்பம் ஒன்றை நட்டினர். மேலும் அங்கு ஏராளமானோர் திரண் டனர். ஆகவே அவர்கள் அணி வகுப்பு நடத்தலாம் என்று கருதப்பட்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அந்த அமைப்பினர் அணி வகுப்பு நடத்தவில்லை.

காலை 9.40 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஜாபா அலி உஸ்மானி தேசிய கொடியேற்றினார். சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இருந்தபோதிலும் கடையநல்லூர் பகுதியில் இரவு முழுவதும் போலீசர் குவிக்கப்பட்டு இருந்தனர்.