நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 1 செப்டம்பர், 2011

அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று சொல்வதில் என்ன தவறு ? – பாஜக மேல் ஐக்கிய ஜனதா தளம் காட்டம்

புது தில்லி : தமிழக சட்டசபை தீர்மானத்தை பின்பற்றி அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தேசம் தமிழக தீர்மானத்தை போல் அமைதி காட்டாது என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சமீபத்தில் கூறியிருந்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இச்சூழலில் பாஜகவின் தோழமை கட்சியும் பீகாரை ஆளும் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாலர் சிவானந்த் திவாரி பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் “ உமர் அப்துல்லா சொல்வது சரியே. காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது” என்றார்.



மேலும் அவர் கூறுகையில் இது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக கூறினார். ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கரிப்பட்டவர்கள் தூக்கிலிட்டே ஆக வேண்டும் என்று கூறும் பாஜக ஏன் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போதோ அல்லது தேவேந்தர் சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று பாஜகவின் இன்னொரு கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தள் கூறிய போதோ எதிர்த்திருக்க வேண்டும். 



அப்போது எதிர்க்காமல் அப்சல் குருவுக்கு மட்டும் எதிர்ப்பது பாரபட்சமானது என்றும் திவாரி கூறினார். 1991ல் பஞ்சாப் போலீஸ் ஜெனரல் சுமேத் சிங் சைனி மற்றும் 1993-ல் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் பிட்டா ஆகியோரின் உயிரை பறிக்க முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும் அவரின் கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்விரு தாக்குதலிலும் வேறு பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.