நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 15 பிப்ரவரி, 2012

சம்ஜோத்தா இரயில் குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது!


புதுடெல்லி :  கடந்த 2007ஆம் ஆண்டு சம்ஜோத்தா இரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தூரைச்சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் திவிரவாதி ஒருவனை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான கமால் செளஹான் இதே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட‌ ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகிய இருவருக்கும் நெருக்கமானவன் என்று தெரியவந்தள்ளது. அவனை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக இந்தூரில் உள்ள அவனது வீட்டிற்கு சம்மனும் அனுப்பியுள்ளனர்.



ராம்ஜீ மற்றும் சந்தீப் ஆகிய இருவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கமால் செளஹானை தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்ஜோத்தை இரயில் குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட 4 முக்கிய திவீரவாதிகளில் கமால் செளஹானும் ஒருவன் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 68 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் இரயிலான சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் இரயிலில் குண்டுவைப்பதன் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்துவதற்காவே இச்சதிச்செயலில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான கமால் செளஹான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் மற்றொரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்துவதற்கு ரகசிய கூட்டத்தில் பங்கெடுத்ததாக மற்றொரு இந்துத்துவா தீவிரவாதியான லோகேஷ் ஷர்மா கடந்த ஜூன் 2010ல் கைது செய்யப்பட்டா
ன்.