நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 15 ஜூன், 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு:ஐ.பியின் பங்கை கண்டுபிடித்த சி.பி.ஐ அதிகாரி சதீஷ் சர்மா நீக்கம்!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சீர்குலைக்க உயர்மட்ட அளவில் தலையீடு ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மீது வழக்கின் விசாரணை திரும்பியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சி.பி.ஐ அதிகாரி பலிகடாவாக்கப்பட்டுள்ளார். ராஜேந்தர் குமாருக்கு போலி என்கவுண்டரில் தொடர்பு இருப்பதாக தகவல் அளித்த முன்னாள் சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினரும், தற்போது சி.பி.ஐ புலனாய்வுக் குழுவின் உதவியாளருமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவை சி.பி.ஐ புலனாய்வுக் குழுவில் இருந்து நீக்கம் செய்துள்ளது. ராஜேந்தர் குமாரை சி.பி.ஐ அழைத்து விசாரணை நடத்தியதை கண்டித்து ஐ.பி தலைவர் ஆசிஃப் இப்ராஹீம் பிரதமரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் உள்துறைச் செயலாளர் அழைப்பு விடுத்த ஐ.பி., சி.பி.ஐ தலைவர்களின் கூட்டத்திற்கு பிறகு புலனாய்வுக் குழுவில் இருந்து சதீஷ்வர்மா நீக்கப்பட்டுள்ளார்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் போலி என்கவுண்டர் என்பதை கண்டுபிடித்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தவர் சதீஷ் வர்மா எஸ்.ஐ.டி அறிக்கையின் அடிப்படையில் குஜராத் உயர்நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சதீஷ் வர்மா, சி.பி.ஐ விசாரணைக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார். இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மற்றும் குஜராத் போலீஸின் சதித்திட்டம் அடங்கியுள்ளது. ராஜேந்தர் குமார் குஜராத் ஐ.பிக்கு பொறுப்புதாரியாக இருந்த வேளையில் சொஹ்ரபுத்தீன் ஷேக், சாதிக் ஜமால், சமீர் பதான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில் குஜராத் மோடி போலீஸால் படுகொலைச் செய்யப்பட்டனர். 
 ராஜேந்தர் குமார் அளித்த போலியான தகவலின் அடிப்படையிலேயே இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை மோடியை கொல்ல வந்த லஷ்கர் – இ-தய்யிபா போராளிகள் என்று கூறி குஜராத் போலீஸ் சுட்டுக்கொலைச் செய்தது. இந்நிலையில் ராஜேந்தர் குமாரை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கஐ.பி தலைவர் ஆசிஃப் இப்ராஹீம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக குஜராத் அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபிறகும் சிறப்பு மனு அளித்து தங்களுக்கு உதவியாக நிறுத்திய சதீஷ் வர்மாவை சி.பி.ஐ திடீரென நீக்கியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.