நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 30 ஜனவரி, 2012

காந்திஜியின் நினைவு நாள் - பாப்புலர் ஃப்ரண்ட் போஸ்டர் பிரச்சாரம்

தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதியை முன்னிட்டு தமிழகம் முழுவது ஃபாசிஸத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டது.


மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்த காந்தி அவர்களை ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காந்திஜி
அவர்களின் நினைவு தினத்தின் போது 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதினால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 


உண்மையான வரலாற்றை இளைய தலைமுறையினருக்கும் கொண்டு போய் சேர்க்காவிட்டால் அவ்வரலாற்றை காந்தியடிகளை கொன்ற கயவர்கள் அவற்றை மறைத்துவிடுவார்கள்.

எனவே காந்திஜியின் நினைவு நாளை அனுசரித்தும் அவரை சுட்டுக்கொன்ற ஃபாசிஸ கும்பலின் கோர முகத்தை வெளிப்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை குழைக்க சதியில் ஈடுபட்டு வரும் ஃபாசிஸ் கும்பலை எதிர்த்து வலிமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.