நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பிரபாஹர் பட்டின் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


பந்தவால்: இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பா.ஜ.க தலைவர் கல்லடக்கா பிரபாஹர் பட்டினை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார்.
 
Elyas Thumbe

கடந்த 30ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் உப்பினங்காடியில் ஹிந்து சமஜோத்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் பிரபாஹர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் விஷமத்தனமான கருத்துக்களை பேசியுள்ளார்.

பிரபாஹரின் இந்த பேச்சை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக‌ மாநிலம் சார்பாக 
பந்தவாலில் கண்டனப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "முஸ்லிம் பெண்களைப்பற்றி இழிவாக பேசியதன் மூலம் பிரபாஹர் தன்னுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். என இல்யாஸ் முஹம்மது தும்பே கூறினார். பிரபாஹர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவரை தாலுகாவில் நுழையவிடமால் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

லவ் ஜிஹாத் என்ற போர்வையில் மக்களிடையே இனவாதத்தை தூண்டி வருகிறார். அத்தோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் ஒரு கோயிலில் இவரது சகாக்களே பன்றியின் மண்டை ஓட்டை வைத்து விட்டு பதட்டத்தை ஏற்படுத்தினார்கள். மதக்கலவரத்தை இது போன்ற செயலகளை இவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து செய்து வருவதாக் இல்யாஸ் முஹம்மது தும்பே குற்றம் சாட்டினார்.

இந்திய நாடு இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, மாறாக 20 கோடி முஸ்லிம்களுக்கும் 6 கோடி கிறிஸ்தவர்களுக்கும், 20% வாழும் தலித் சமுதாயத்தினருக்கும் சொந்தமானது. இவர்கள் அனைவருமே பல நூற்றாண்டுகளாக இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து வருகின்றனர் என மேலும் அவர் கூறினார்.

B.C.Road protest
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் ரஜாக் கெம்மார் கூறும்போது ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இந்தியாவில் மதக்கலவரங்கள் நடைபெற்றதாக வரலாறுகளே இல்லை. என்று இந்த சங்கப்பரிவார கூட்டங்கள் உருவானதோ அன்றிலிருந்து தான் இந்தியாவில் மதக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது எனக்கூறினார்.

எஸ்.டி.பி.ஐயின் பந்தவால் தொகுதி தலைவர் சாகுல் ஹமீது உரையாற்றும்போது "சிந்தகி மாவட்டத்தில் அரசாங்க அலுவலகம் முன்பாக பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் அவர்களை விட்டு விட்டு முஸ்லிம்களை பாகிஸ்தானிற்கு போகச்சொல்வது வேடிக்கையாக இருக்கிறது" என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புத்தூர் மண்டல உறுப்பினர் ஷாஃபி, மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஜ் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். கைகம்பா என்னுமிடத்திலிருந்து தாலுக அலுவலகம் வரை கண்டனப்பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.