நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கைது அச்சம்:சி.பி.ஐ அலுவலகம் நோக்கி மார்க்சிஸ்ட் பேரணி!


கொச்சி:கம்யூனிச கொள்கையில் வகுப்புவாத வெறியை கலப்படம் செய்த கேரள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்.டி.எஃப் உறுப்பினர் ஃபஸல் கொலைவழக்கில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் மத்திய புலனாய்வு துறை அலுவலகம் நோக்கி கண்டன பேரணியை நடத்தியுள்ளனர்.
CPI-M march towards the office of the Central Bureau of Investigation
முஹம்மது ஃபஸல் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொண்டராக இருந்தவர். அக்கட்சியின் கோணலான கொள்கையால் வெறுப்புற்ற ஃபஸல் என்.டி.எஃபில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிலையில் ஃபஸலின் மீது கேரள காம்ரேடுகளுக்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக அவர் 2006-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காலையில் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கு பின்னர் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு இக்கொலையில் பங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சி.பி.ஐ அலுவலகம் நோக்கி மார்க்சிஸ்ட் கட்சி கைது பயத்தால் கண்டன பேரணியை நடத்தியுள்ளது.
தங்களது அச்சத்தை மூடி மறைப்பதற்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜெயராமன் இதுக்குறித்து கூறியதாவது: “இந்தக் கொலை வழக்கில் கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் தலைவர்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தபோதும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இருப்பினும் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதாக சிபிஐ முயற்சி செய்துவருகிறது” என்று கூறினார்.