நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

போக்குவரத்துத் துறையில் "754 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்'


சென்னை : போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள 754 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - 2, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய 754 பணியிடங்கள் நிரப்பப்படும்.
தாம்பரம் மற்றும் திண்டிவனத்தில் உள்ள பகுதி அலுவலகங்கள் வட்டாரப் போக்குவரத்துக் கழகங்களாக தரம் உயர்த்தப்படும். தமிழகத்தில் இப்போது 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், 50 பகுதி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி,  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் பகுதி வட்டாரப் போக்குவரத்துக் அலுவலகங்கள் தொடங்கப்படும்.
மொத்தமுள்ள 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 36 அலுவலகங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகிறது. அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், விருதாச்சலம் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ரூ. 1.03 கோடியில் காங்கேயம் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றுக்கு சொந்தக் கட்டடமும், ஓட்டுநர் தேர்வுத் தளமும் அமைக்கப்படும்.  செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், குளித்தலை பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றுக்கு ஓட்டுநர் தேர்வுத் தளம் அமைக்கப்படும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களுக்கு வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் செலுத்த புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் இது அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.