நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

அமெரிக்கா தாருல் உலூம் மதரஸாவிடம் நட்பு பாராட்ட விரும்பியது – விக்கிலீக்ஸ்


லக்னோ : கடந்த 2008-ஆம் வருடம் 25 ஆம் தேதி நடந்த மாநாட்டில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என பத்வா கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாருல் உலூம் தேவ்பந்திற்கு கல்வி உதவிகள் மற்றும் சர்வதேச நிகழ்சிகளுக்கு அழைப்பு கொடுப்பதின் மூலம் தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஆதரவைப் பெற ஏதுவாக அமையும் என நினைத்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கம்பிவட தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
2008  பிப்ரவரி 27  ஆம் தேதியிட்ட கம்பிவட தகவல் கூறியிருப்பதாவது உத்திர பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டுள்ள தாருல் உலூம் தேவ்பந்த் மதரசா அதே ஆண்டு 25  ஆம் தேதி தீவிரவாதத்திற்கு எதிராக மாநாடு ஒன்றை நடத்தி அதில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என பத்வா கொடுத்தது.அம்மாநாட்டில் 10000 முதல் 15000 பேர் வரை கலந்து கொண்டனர். அப்படி அளிக்கப்பட தீர்மானத்தின் முழு பிரதியையும் அக்கம்பி வட தகவல் உள்ளடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவ்பந்தின் தீர்மானம் தீவிரவாதத்தை குறைக்காது என்றாலும் ஆப்கானிஸ்தான் முதல் இந்தோனீசியா வரை தேவ்பந்தின் தீவிரவாதத்திற்கு எதிரான குரல் உற்று நோக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே தேவ்பந்தின் தீர்மானத்தை அமெரிக்கா வெளிப்படையாக விமர்சிக்காமல் கல்வி உதவிகள் மற்றும் சர்வதேச நிகழ்சிகளுக்கு அழைப்பு கொடுப்பதின் மூலம் ஆதாயம் தேடிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
தேவ்பந்தை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை சந்தேகக் கண்ணோடு பார்த்தாலும் அவர்கள் அமெரிக்க தூதரகத்துடன் நல்லமுறையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க தூதரகம் மதரசாவிற்கு கணினி வழங்க முன்வந்ததாகவும் ஆனால் பின்பு அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது தூதரகம் மூன்றாவது நபரைக் கொண்டு முயற்சிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.