நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 15 நவம்பர், 2011

இலியாஸ் ஆஜ்மி புதிய கட்சியை தொடங்கி பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க தயார்!

லக்னோ :  உத்திர பிரதேச மாநில முன்னால் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இலியாஸ் ஆஜ்மி ராஷ்டிரிய இன்குலாப் பார்டி (ஆர்.ஐ.பி) என்ற புதியை கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய உடனேயே அவர் கூறியது தங்களது கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பகுஜன் சமாஜ் பார்ட்டியிலிருந்து விலகி சமீபத்தில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பால் தொடங்கப்பட்ட வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா-வில் (WPI) இணந்து தேசிய துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த‌ இலியாஸ் ஆஜ்மி தற்போது அதிலிருந்தும் விலகி தனி கட்சி தொடங்கியுள்ளார்.
வரக்கூடிய நவம்பர்ம் 19 ஆம் தேதி அன்று முஸ்லிம்களின் அரசியல் பிரச்சனைகளை முன்வைத்து மாநாடு நடத்த‌ இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் ஊடக தொடர்பாளர் ஜே.கே.ஜெயின் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அரசியல் களத்தில் பா.ஜ.கவை தீண்டத்தகாத கட்சியன கறுதி அவர்களை ஒதுக்கிவைப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வேலைகளின் பா.ஜ.க ஈடுபட்டால் அவர்களை முஸ்லிம்கள் ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை. என அக்கட்சியின் பொதுச்செயலாளர் செய்யது அஸ்லம் கடந்த சனிக்கிழமை அன்று கூறியுள்ளார். தங்களது கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதற்காக ஆவலாக இருக்கிறது என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா உதயமாகியபோது உரை நிகழ்த்திய இலியாஸ் ஆஜ்மி
பா.ஜ.கவினரால் தான் 1992 டிசம்பர் 6 அன்று முஸ்லிம்களின் பள்ளியான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்றும் 2002 குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்படியிருக்க‌ பா.ஜ.வை ஆதரிக்கலாம? என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, கலவரங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒரு கட்சியை ஒதுக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் ஆட்சியின் போது தான் அதிக அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் 1992 ஆம் ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடைபெற்றது அம் மாநிலத்தை பா.ஜ.க ஆட்சி செலுத்தவில்லை. எனவே இதை காரணம் காட்டி பா.ஜ.கவை குற்றம் சுமத்த முடியாது என்று கூறியுள்ளார்.

அஸ்லம் கூறும்போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான இலியாஸ் ஆஜ்மி உத்திர பிரதேச மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தப்போவதாக கூறினார்.