நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 16 நவம்பர், 2011

மாநாட்டிற்கு வருபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்




மாநாட்டின் வழிகாட்டுதல்கள்:

1. ஒவ்வொரு மாவட்டமும் தங்களுக்கு கீழ்வரக்கூடிய நபர்களை தனித்தனியாக குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.

2. பொறுப்புதாரிகள் தொலைபேசிய எண்கள் அனைவரிடமும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

தங்கும் வசதி:

1. வரக்கூடிய அனைவரும் ஏதேனும் ஒரு புகைப்பட அடையால அட்ட எடுத்து வரவேண்டும். உதாரணம் தேர்தல் அட்டை, பேன் கார்டு, ஓட்டுனர் லைசன்ஸ், பாஸ்போர்ட்.etc.

2. வரக்கூடிய அனைவரும் தேவையான பொருட்களை அவர்களே எடுத்துவரவேண்டும். உதாரணம்: பெட்சீட், டவல், மருந்து, செருப்பு, போன்றவை. குளிகாலம் என்பதால் பிளேங்கட், ஸ்வெட்டர், மஃப்லர் போன்றவற்றை எடுத்து வரவும்.

3. விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வரவேண்டாம். உதாரணம்: லேப்டாப், அதிகமான பணம்.

4. அவரவர் பொருட்களை அவர்களே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். செல்போன் போன்ற பொருட்களை கண்ட இடத்தில் வைக்க வேண்டாம்.

5. தங்கக்கூடிய இடங்களில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கொடுக்கக்கூடிய வழிகாட்டுதல்களை முழுமையாக ஒவ்வொருவரும்  கடைபிடிக்க வேண்டும்; ஒட்துழைப்பு கொடுக்க வேண்டும்.

6. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கக்கூடிய இடங்களிலேயே தங்க வேண்டும். வேறு மாநிலத்திற்கு ஒதுக்கிய இடத்தில் தங்க கூடாது.

7. தங்கக்கூடிய இடத்தில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பேட்ஜ் கொடுப்பார்கள். இந்த பேட்ஜை மாநாடு முடியும் வரை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளவும். பேட்ஜ் இல்லாமல் தங்க கூடிய இடத்திற்குள் அனுமதிக்கமாட்டார்கள்.

8. மாநாடு நடைபெறும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் வெளியில் சென்று சுற்றி பார்க்க அனுமதி இல்லை. மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

பயணம்:

1. மாநாட்டிற்கு வரக்கூடியவ்ர்கள் டெல்லியை அடைந்ததும், சிறு சிறு குழுக்களாக பிரிந்து கொடி மற்றும் கோஷங்களோடு மாநாட்டு திடலுக்கு வரவேண்டும். இதற்கான கோஷங்கள் பின்னர் அனுப்பப்படும்.

2. நமது இயக்கத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரே மாதிரியான டி சர்ட் அல்லது தொப்பி போன்றவற்றை அணிந்து வரலாம். இதை மாவட்டத்தில் திட்டமிட வேண்டும்.

3. இரயில்நிலையம் மற்றும் விமான நிலையங்களில் மாநாட்டிற்கான வரவேற்பு கவுண்டர் அமைக்கப்படும். அதில் தேவையான தகவல்கலை பெற்றுக்கொள்ளலாம்.

4. மாநாட்டு திடலுக்கு செல்ல எந்த விதமான வாகன வசதியும் செய்யப்படவில்லை. வரக்கூடியவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவும்.

5. இரவு 9 மணி முதல் 4 மணி வரை வரக்கூடியவர்களுக்கு மாநாட்டு திடலுக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து தரப்படும்.


மாநாட்டு திடலுக்கு வருவதற்கு ஆகக்கூடிய தொலைவு மற்றும் ஆட்டோ கட்டணம்


வ. எண்
இடம்
வாகனம்
கி.மீட்டர்
கட்டணம்/ ரூயாய்
1
நிஜாமுதீன் இரயில் நிலையம் - ராம்லீலா மைதானம்
ஆட்டோ
 10 - 20கி.மீ
ரூ 75/- முதல் 80/- வரை
2
புதுடெல்லை இரயில் நிலையம் - ராம்லீலா மைதானம்
நடந்தே வந்துவிடலாம்
 கி.மீ

3
பழைய டெல்லி இரயில் நிலையம் - ராம்லீலா மைதானம்
ஆட்டோ
 கி.மீ
ரூ 50/-
4
விமான நிலையம்
மெட்ரோ இரயில்

ரூ 80/-


உணவு:

1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக புட் கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கவுண்டரில் தான் உணவு வாங்க வேண்டும்.

2. உணவு வாங்குவதற்கு கீழ்காணும் வரிசைகளிலில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

A - கேரளா
B - தமிழ் நாடு
C - கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷிரா
D - மேற்கு வங்காளம், மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் பல...


3. கூப்பன் இல்லாமல் உணவு வழங்கப்படமாட்டாது.

4. ஒவ்வொரு மாநிலத்திற்கான புட் இன்சார்ஜிடம் மாவட்ட இன்சார்ஜர்கள் கூப்பன்களை வாங்க வேண்டும்.

5. குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை வாங்கிக் கொள்ளா வேண்டும். காலம் கடந்து கேட்டால் உணவு கொடுக்கப்பட மாட்டாது.

6. நவம்பர் 27 அன்று மதிய உணவும் காலை 10 மணிக்கே கொடுக்கப்படும்.

7. உணவுக்கான கூப்பன் வாங்கிவிட்டு வந்து சாப்பிடவில்லையென்றால் அதற்கான தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வாங்கப்படும்.

8. எத்தனை நபர்களுக்கு உணவு தேவை என்பதை மாவட்ட புட் இன்சார்ஜர் மாநில புட் இன்சார்ஜரிடம் 24 மணி நேரத்திற்கு முன்கூட்டியே சொல்ல வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை கவனமாக படித்து அமுல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



இவண்
ஏ.காலித் முஹம்மது
மாநில பொதுச்செயலாளர்.