நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 15 நவம்பர், 2011

போர்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட்




திருப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் 08.11.2011 அன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். பாப்புலர் ஃப்ரண்டின் கோவை மாவட்ட தலைவர் கே. ராஜா ஹுஸைன், மாவட்ட செயலாளர் ஏ.முஸ்தபா, செய்யது அலிபாய், கோவை மாநகராட்சியின் 82வது வார்டு கவுன்சிலர் சலீம் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் முபாரக், மாவட்ட செயலாளர் ஹபீப் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். சென்னையில் திறந்து கிடந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து ஆசிரியை ஒருவர் இறந்து போயுள்ளார். திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 14 பேர் உயிரிசழந்துள்ளனர். அதில் 5 உடல்கள் மட்டுமே கண்டெடுக்ப்பட்டுள்ளது. சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 100 வீடுகள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. 900 வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. மக்கள் தங்கள் பொருட்களை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். அதே போல் நோடு புத்தகங்கள் மற்றும் படிப்பு உபகரணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவ மாணவிகளும் பரிதாபமாக நிற்கின்றனர். காயிதே மில்லத் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடை நீர் குளமாக கட்டி கிடப்பதால் மக்கள் மீண்டும் அந்தப் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பண்டிகை தினமான பக்ரீத் பெறுநாளன்று கொண்டாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டவுடன் நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் களமிறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ர்மா, காளியம்மாள் ஆகியோரை காப்பாற்றியதுடன், பிறந்து நாற்பதே நாள் ஆன குழந்தையையும் உயிரை துச்சமெனக் கருதி வெள்ளித்தில் இறங்கி மீட்டிருக்கின்றனர். அத்துடன் ஒரு நாள் நள்ளிரவும் முதல் காலை வரை தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த மக்களை காப்பாற்றினர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஹெச்.எம்.எஸ் மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7500 பேருக்கும், மற்றொரு நாள் 12,500 பேருக்கும் உணவு வழங்கியுள்ளோம். நோய் தடுப்பு முகாம்களை அமைத்து அரசு மருத்துவக் குழு மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் போட ஏற்பாடு செய்தோம்.

வெள்ள தேசம் மிக கடுமையாக இருந்த போதும், அரசு இயந்திரம் மெத்தனமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வெறும் நிவாரணத் தொகையை அளிப்பதால் மட்டும் அது அவர்களுக்கு பயனளிக்காது. பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகள் என்ன, நிரந்தர தேவைகள் என்ன என்பதை விரிவாக ஆய்வு நடத்தி அவர்களின் தேவைகளை தமிழக அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.

முறையான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் சாக்கடை நீர் வெளியே வருவதை தடுத்திருக்க முடியும். நோய்களிலிருந்தும், உயிர் சேதத்திலிருந்தும் மக்களை பாதுகாத்திருக்க முடியும். எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் நிவாரணப் பணிகலை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகள், நிரந்தர தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.