நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 6 ஜனவரி, 2012

மீண்டும் 4 முஸ்லிம் இளைஞர்கள் மும்பையில் கைது!

மும்பை :  அப்துல் வஹாப் உமர் (22) மற்றும் கமர் ஆலம் ஷேக் ஆகிய இருவரும் மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 நாட்களாகியும் இதுவரை அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

திட்டமிட்டே தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நமது தேசத்தில் நடைபெற்று வருகிறது. தீவிரவாத வழக்குகளில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்றும் எந்த ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை குறிவைத்து விசாரணை நடத்தப்படமாட்டாது என்று பிரதமர் அறிவித்திருந்தும் பெரும்பாலும் முஸ்லிம் இளைஞர்களே இத்தகைய விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக மாணவர்களை குறிவைத்து இத்தகைய விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவது சாதாரணமாக காணப்படும் ஒன்றாக இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட இரு  இளைஞர்களும் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சுவாமி பரமானந்தா பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதே கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த‌ மற்றொரு இரு மாணவர்களான அப்துல் வஹாப் மற்றும் தன்வீர் ஆலம் ஆகியோரும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையின் ஆணையர் கேடர் பவார் அப்துல் வஹாப் மற்றும் கமர் ஆலம் ஷேக் ஆகியர் இருவரையும் கைது செய்து விசாரணைக்காக மும்பை அழைத்துச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தன்வீர் ஆலம் மற்றும் முஹம்மது அஷ்ரஃப் ஆகிய இருவரையும் கடந்த 3ஆம் தேதி அன்று விடுவித்துள்ளது.

மும்பை காவல்துறையினர் இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து இ.பி.கோ 419, 420, 465, 467, 120பி ஆகிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அப்துல் வஹாபின் செல்போன் எண் மும்பையிலுள்ள ஒருவரின் மொபைல் போனிலிருந்து கண்டெடுத்தார்களாம். அன்றிலிருந்து அவரை கண்காணித்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அப்துல் வஹாபின் சகோதரர் இந்திகாப்பை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு காவல்துறையினரிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை அப்துல் வஹாபோடு ஒன்றாக தங்கியிருக்கும் அஷ்ரபின் மூலமாக வஹாப் கைது செய்யப்பட்டதை தெரிந்து கொண்டோம் என்று கூறினார். அஃப்தப் ஆலம் மற்றும் அப்துல் வஹாபின் சகோதரர் இந்திகாப் ஆகிய இருவரும் இன்று காலை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையை சந்தித்து கைது செய்யப்பட்ட தனது சகோதரை பற்றி விசாரித்தனர். ஆனாலும் தற்போது வரை அவர்களை எங்கு வைத்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை.

விசாரணைக்காக கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறி அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை கூட வெளியிடமால இருப்பதினால் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.