நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 3 ஜனவரி, 2012

வருகிறது இன்னொரு வசதி சேமிப்பு கணக்கு எண் மாறாமல் விரும்பிய வங்கிக்கு மாறலாம்


புதுடெல்லி : செல்போன், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தொடர்ந்து நம்பர் மாறாமல் நிறுவனம் மாறும் வசதி வங்கிகளுக்கும் விரிகிறது. சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்த மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
மத்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் நிதி சேவை துறை செயலர் மிட்டல், பொருளாதார விவகார செயலர் கோபாலன், நிதித் துறை செயலர் குஜ்ரால், தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு மிட்டல் கூறியதாவது:
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அந்த எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி அளிக்க விரும்புகிறோம். அதை செய்வதில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
அதன் பிறகு, ஒரு வங்கியில் இருந்து சேமிப்பு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுவதற்கான வசதி அறிமுகமாகும். வாடிக்கையாளரின் அடையாள குறியீடு, வாடிக்கையாளரை அறியும் விதிமுறைகள் (கேஒய்சி), கணினி மூலம் இணைக்கபட்ட வங்கி சேவை (கோர் பாங்கிங்) ஆகியவற்றை வங்கிகள் ஒருங்கிணைப்பதன் மூலம் சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வங்கி மாறும் சேவை கிடைக்கும்.
ஒவ்வொரு முறை வங்கி கணக்கு தொடங்கும்போதும் கேஒய்சி விதிமுறைகளின் கீழ் ஆவணங்களை அளிக்க தேவையிருக்காது. இதனால், வாடிக்கையாளருக்கு பயன் கிடைக்கும். சேமிப்பு கணக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டி காரணமாக வங்கி சேவையும் மேம்படும்.
இவ்வாறு மிட்டல் தெரிவித்தார்.
செல்போன் நம்பரை மாற்றாமல் நிறுவனம் மாறும் வசதி (எம்என்பி), இன்சூரன்ஸ் பாலிசி எண் மாறாமல் நிறுவனம் மாறும் வசதி ஆகியவை கடந்த ஆண்டில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.