நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 3 ஜனவரி, 2012

மேற்கு வங்கத்தில் "பள்ளி செல்வோம்" பிரச்சாரம்


கொல்கத்தா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த பல வருடங்களாக கல்வி பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் "ஸ்கூல் சலோ" என்ற முழக்கத்தை முன் வைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
School Chalo in West Bengal


இவ்வருடம் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டது. ஏழ்மையான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இப்பிரச்சாரம் நடத்தப்பட்டது.

மேற்கு வங்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகளால் பலவேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று "சர்வசிக்ஷ்சா கிராம்" (அனைத்து கிராமங்களிலும் கல்வி பெற்ற கிராமங்களாக) உருவாக்கும் பணியாக 8 கிராமங்களில் கல்வி பற்றிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
West Bengal School Chalo

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூம மேம்பாட்டுத்துறையின் நிர்வாகியாக செயலாற்றி வரும் தேசிய செயற்குழு உறுப்பினர் ஓ.எம்.ஏ. அப்துல் ஸலாம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 70% முஸ்லிம்கள் வாழும் முர்ஷிதாபாத்திலுள்ள மஹால்தர்பாரா என்ற கிராமத்தில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஜுகூர் கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் 10 இடங்களில் அதற்கான சேவையை செய்து உள்ளது. அபில்பூர் கிராமத்தில் இலவச டியூஷன் சென்டர் ஒன்றை துவக்கியுள்ளது. இவற்றை ரிஹாப் இந்தியாவி தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார்.
W.B school Chalo

இந்நிகழ்ச்சியில் உரை யாற்றிய அவர் கூறும்போது சமூக மேம்பாட்டை கருத்தில் கொண்டு இவ்வாறான சேவைகள் மேற்குவங்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முர்ஷிதாபாத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்தகைய சேவைகள் தொடரும் என்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மேற்குவங்க மாநில செயலாளர் முஹம்மது ஷிஹாபுதீன், சமூக ஆர்வளர் நூரி ஹுதா, ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிராம வாசிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.