நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 2 ஜனவரி, 2012

நாடு போற போக்கு பார்த்தா., இனிமேல் ., ? மின்சாரம் கேட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஜம்மு :  காஷ்மீர் மாநிலத்தில் மின்சாரரம் கேட்டு வீதிக்கு வந்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலைகளில் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.



ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியார் பகுதியில் மின்சாரம் சரிவர கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இங்குள்ள மின்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இங்குள்ள முக்கிய வாயில் வழியாக <உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் (சி.ஐ.எஸ்.எப்.,) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுக்கு இலக்கான அல்தாப் அகம்மது (25 ) இறந்தார். அப்துல் மஜீத்கான் மற்றும் பர்வேஸ் அகம்மது படுகாயமுற்றனர். இந்த சம்பத்தினால் இங்கு பதட்டம் நிலவுகிறது. துப்பாக்கியால் சுட்டு சாவுக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் போராட்டம் வலுத்துள்ளது.


ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் பற்றாக்குறை இருந்து வந்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த போராட்டம் இன்னும் மாநிலம் முழுவதும் பரவி விடுமோ என சம்பவம் நடந்த பகுதிக்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.